25
Tue, Jun

2014
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஜரோப்பிய, உலக நிதி நிறுவனங்களிடமிருந்து கிரேக்கம் பெற்ற கடனுக்கான கந்து வட்டியினை திருப்பி செலுத்த வேண்டிய காலக்கேடு கடந்த 30ம் திகதியுடன் முடிவுக்கு வந்திருந்தது. பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் கிரேக்கத்திற்கு மேலதிக கடன்களை வழங்கவும்; செலுத்த வேண்டடிய வட்டியை திரும்ப கொடுப்பதற்க்கான காலக்கேட்டினை நீட்டவும் மேற்கூறிய நிதி நிறுவனங்கள் பல நிபந்தனைகளை விதித்து கிரேக்க அரசுடன் கடந்த பல வாரங்களாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருந்தது. பேச்சவர்த்தையில் எந்த வித முன்னேற்றங்களையும் வந்தடைந்திருக்கவில்லை.

தொடர்ந்து கடன் வேண்டுமானால் தங்களது நிபந்தனைகளை ஏற்க வேண்டுமென ஜரோப்பிய  நிறுவனங்கள் நெருக்குதல் அளித்த நிலையில் ஆளும் சிரசா  கூட்டணி அரசு மக்கள் கருத்தினை அறிந்து கொள்ளும் முகமாக சர்வனஜன வாக்கெடுப்பு ஒன்றிற்கு அழைப்பு விடுத்து மக்கள் அபிப்பிராயத்திற்கு வழி விட்டது. அதே வேளை நிதி நிறுவனங்களின் நிபந்தனைகளிற்கு அடிபணிய தேவையில்லை என மக்களை வாக்களிக்கும் படி கோரிக்கையினை முன்வைத்திருந்தது.

இன்று நடைபெற்ற சர்வனஜன வாக்கெடுப்பில் இதுவரை வெளிவந்த 90 வீதமான எண்ணிக்கை கணக்கெடுப்பில் 62 வீதத்திற்கும் அதிகமான மக்கள் கடன் வழங்கிய ஜரோப்பிய மற்றும் உலக நிதி நிறுவனங்களின் நிபந்தனைகளிற்கு அடிபணியத் தேவை இல்லை என வாக்களித்துள்ளனர். இது ஜரோப்பிய ஒன்றியத்தின் நாணயமான யூரோவினது ஸ்த்திரத் தன்மையினை பலத்த கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது.

நிதி நிறுவனங்கள் தமது நிபந்தனையாக  அரச சேவைகளான மருத்துவம், கல்வி போன்ற துறைகளை நிர்வகிக்கும் பொறுப்பினை தாம் கூறுகின்ற தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க கூறியதுடன், சமூக நலத்திட்டங்களை இல்லா தொழிக்கும் வண்ணம் மிகவும் குறைக்கும் படியும், ஓய்வூதிய தொகையினை குறைக்கும் படியும் இன்னும் பல மக்கள் விரோத முதலாளித்துவ நலனுக்கு ஏற்ற நிபந்தனைகளையும் விதித்திருந்தது.

ஆட்சியில் அமைந்துள்ள இடதுசாரிய கூட்டான சிரசா அரசு மக்கள் நல சமூக திட்டங்களை குறைப்பதற்கும் தனியார் மயமாக்கலுக்கும் ஒத்துக் கொள்ள மறுத்து விட்டது.

பெரும் கப்பிரேட் கம்பனிகள் முறையாக வரி செலுத்தாமல் லாபத்தை சுளையாக சுருட்டி செல்ல அனுமதித்து விட்டு பட்சடில் துண்டு விழும் தொகையினை சரி செய்வதற்க்காக ஜரோப்பிய ஒன்றியம் அனைத்து நாடுகளிலும் சமூக நலத்திட்டக்களுக்கான  நிதியினை பாரிய அளவில் குறைத்து வருகின்றது.

சாதாரண உழைக்கும் மக்கள் மீது பாரிய வரிச் சுமையினை சுமத்தி இவற்றால் சேமிக்கப்படுகின்ற தொகையின் மூலம் பட்சடிற்றுக்கான தொகையினை சரி செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதனால் சாமானிய மக்கள் அன்றாட வாழ்வுக்காக பெரும் போராட்டத்தை நடாத்த வேண்டியிருக்கின்றது..

இன்று மக்கள் முன் உரையாற்றிய கிரேக்க பிரதமர் ஜரோப்பிய ஒன்றியம் சாதாரண மக்களின் நலன்களை பேணும் வண்ணம் அதனது பொருளாதார கொள்கைகளை மாற்றி அமைக்க வேண்டும் இல்லை எனில் ஜரோப்பிய ஒன்றியத்தின் அழிவு நிச்சம் எனும் கருத்துப்பட பேசி இருந்தார்.

மேலும் பிரதமர் சிப்ரஸ் கிரேக்கத்தில் "மிரட்டி ஒன்றையும் செய்ய  முடியாது என்பதனை ஜனநாயகம் நிரூபிபித்துள்ளது" என்று கூயதுடன் கிரீஸ், ஐரோப்பாவில் ஒரு விவாதத்தையும், ஒரு துணிச்சலான தேர்வினை மக்கள் முன் வைத்துள்ளது என்றார்.