25
Tue, Jun

2014
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இன்று 28/06/2015 லண்டனில் உள்ள இந்திய தூதராலயத்தின் முன்பாக மனித உரிமைவாதியும், இந்திய ஆளும் அதிகாரவர்க்கத்தினரால் பழங்குடி மக்கள் மீது பல்தேசிய கம்பனிகளின் கொள்ளைக்காக நிலப்பறிப்பு, கனிமவள கொள்ளை என்பவற்றுக்காக ஏவிவிடப்பட்டுள்ள “காட்டு வேட்டை” ராணுவ நடவடிக்கை என்ற பேரில் அப்பாவி பழங்குடி மக்களை கொன்று குவிப்பதற்கு எதிராக குரல் கொடுத்த காரணத்திற்க்காக கடத்திச் செல்லப்பட்டு இருண்ட அறையில் தனிமையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள Dr GN சாய்பாபா அவர்களை உடனடியாக விடுதலை கோரி போராட்டம் நிகழ்த்தப்பட்டது.

இந்த போராட்டத்தில்  சர்வதேச முற்போக்கு மற்றும் இடதுசாரிகள் கலந்து கொண்டு தமது சர்வதேச ஒற்றுமையினை நிலைநாட்டியதுடன் இந்திய அரசின் மனித உரிமையினை மதிக்காத இந்த கைது மற்றும் தடுத்து வைத்தலை கண்டித்தனர். துருக்கி, நேபாளம், பங்களாதேஸ் மற்றும் இலங்கையை சமவுரிமை அமைப்பினர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு தமது தோழமையினை வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.