25
Tue, Jun

2014
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கொலன்னாவ - மீதொட்டமுல்ல பகுதியில், குப்பைக் கழிவுகளைக் கொட்டுவது நிறுத்தப்பட வேண்டும் என்று கோரி போராடிய மக்கள் மீது நல்லாட்சி அரசு தனது அரச படைகளை ஏவி விட்டு தாக்குதல் தொடுத்துள்ளது. இக் குப்பை மேடுகள்  அருகில் உள்ள வீடுகளில் சரிந்து விழுவதாகவும், அப்பகுதி எங்கும் துர்நாற்றம் வீசுவதாகவும் மற்றும் சுகாதார சீர்கேடுகளும் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு நகரில் சேகரிக்கப்படும் சுமார் 700 மெற்றிக் தொன் குப்பைகள் நாளாந்தம் அந்தப் பகுதியில் கொட்டப்படுவதாகவும் அதனால் அங்கு வசிக்கும் மக்களுக்கு சுகாதார கேடுகளும், அச்சுறுத்தல் உள்ளதாகவும் தெரியவருகின்றது.

இது குறித்து சம்பந்த பட்ட அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளும் பல தடவைகள் முறைப்பாடுகள் செய்த போதும் இன்றுவரை எதுவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாததால், குப்பைகளை குவிக்கும் இடத்திற்கு முன்பாக அப் பிரதேசமக்கள் கூடி இவ்வாறு எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

அரச படைகளின் மிலேச்சத்தனமான தாக்குதலின் காரணமாக சகோதரர் நுவான் பேபகே அவர்கள் இரத்தப்போக்கு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.