25
Tue, Jun

2014
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கடந்த 362 நாட்களாக எந்த விசாரணைகளுமற்று தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த ஜெயக்குமாரி பாலேந்திரன் இன்று எந்தகைய குற்றச்சாட்டுகளுமின்றி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ஜெயகுமாரியின் விடுதலைக்காக உண்மையாகப் போராடியவர்கள் முன்னிலை சோசலிச  கட்சியின் பெண்கள் அமைப்பு, தெற்கில் உள்ள மனித நேய அமைப்புகள் மற்றும் மனிதாபிமானதுகாக உழைக்கும் சிங்கள மொழிபேசும் சட்ட வல்லுனர்களுமே. மேற்படி அமைப்புகள் தான் மொழி சார்ந்த உதவிகள் தேவைப்பட்டபோது இரு தமிழ் பேசும் வழக்குரைஞர்களுக்கு காசு கொடுத்தார்கள். இவர்கள்தான் தொடர்ச்சியாக மஹிந்த இருந்த காலம் தொடக்கம் ஜெயகுமாரியின் விடுதலைக்காக போராடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் தலைமைகள் இதனை தமது அரசியல் லாபத்திற்க்காக பயன்படுத்தினரே ஒழிய அவரின் விடுதலைக்காக உருப்படியாக எதனையும் செய்யக் கூடிய நிலையிலும் அக்கறை அற்று செயல்பட்டனர்.