25
Tue, Jun

2014
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நாம் 21ம் நூற்றாண்டில் கால் பதித்துள்ளோம். சர்வதேசம் எங்கும் பெண்கள் மீதான அடக்குமுறைகளும், ஒடுக்குமுறைகளும் எந்தவிதமான மாறுதலுக்கும் உள்ளாகி விடவில்லை. அவை தொடர்ந்த வண்ணமே உள்ளன.குறிப்பாக இலங்கையில் பெண்கள், பெண்கள் என்ற வகையில் பல இன்னல்களை அனுபவிப்பதுடன் அரச பயங்கரவாதத்தாலும், இன-மத ஒடுக்கமுறை காரணமாகவும் மேலதிகமான ஒடுக்குமுறைக்கு உள்ளாகின்றனர்.

குறிப்பாக அரச படைகளின் பாலியல் வல்லுறவுகள், சித்திரவதைகள், உறவுகளை யுத்தத்தில் இழந்து போயிருந்தல், கைது செய்யப்பட்ட உறவுகள் பற்றிய தகவல்கள் கிடையாமை, கல்வி மற்றும் சமூக அக்கறை காரணமான போராட்டத்தில் ஈடுபட்டமைக்கான கைதுகள், அச்சுறுத்தல்கள் என பல நெருக்கடிகளுக்கும் அச்சுறுத்தல்களிற்கும் உள்ளானவர்களாக இருக்கின்றனர்.

இன்றைய சர்வதேச மகளிர் தினத்தில் பெண்களுக்கெதிரான எல்லாவகை வன்முறைகளுக்கெதிராயும் குரல் கொடுப்போம் எனவும் பெண்கள் விடுதலைக்காக தொடர்ந்து போராடுவோம் என உறுதிமொழி செய்து கொள்வோம்.

Stop the violence against women!

කාන්තාවන්ට එරෙහි ප්රචණ්ඩත්වය නතර!

பெண்களுக்கு எதிரான வன்முறையை நிறுத்து !

خواتین کے خلاف تشدد کو روکنے کے !

制止对妇女的暴力行为 !

Stop à la violence contre les femmes !