25
Tue, Jun

2014
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சுன்னாகம் அனல் மின்நிலைய கழிவு எண்ணெயினால் நிலத்தடி ஊற்றுநீர் நஞ்சாக்கப்பட்டதனால், குடிப்பதற்கோ மற்றும் வேறு எந்தப் பாவனைக்குமோ நீர் இல்லாது மக்கள் அடிப்படையான வாழ்வாதார நெருக்கடிக்குள் தவிக்கிறார்கள்.

பாடசாலையில் பயிலும் மாணவ சமூகத்தின் கல்விச் செயற்பாட்டிலும் அது மிகுந்த நெருக்கடிகளை தோற்றுவித்துள்ளது. நிலத்தடி ஊற்றுநீர் வழி கிடைக்கும் நீர், சுன்னாகம் மட்டுமல்லாது பல மைல்கள் சுற்றளவுப் பிரதேசங்களின் குடிநீர் மற்றும் பாவனைக்கான நீரினை தொடர்ந்தும் நச்சாக்கி வருகின்றது. இந்த மின்னுற்பத்தி முறைமையினால் உருவாகும் கழிவு எண்ணெய் சுற்றுச்சூழல் பிரதேசத்தில் உருவாக்குகின்ற நச்சுவிளைவுகளை முன்னிறுத்தி இந்த மின்னுற்பத்திக்கு பொறுப்பான நிறுவனத்தின் நடவடிக்கைகளை நிறுத்துமாறும், எழுந்துள்ள குடிநீர் பிரச்சனைக்கு சரியான உரிய கவனத்தினையும் நடவடிக்கைகளையும் கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று இலங்கை ஆசிரியர் சங்கத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்டு சுன்னாகம் கதிரைமலைச் சிவன் கோவில் முன்பாக இன்று 05.02.215 பிற்பகல் 2 மணியளவில் நடாத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தின் முடிவில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் அவர்கள் உரை நிகழ்த்தினார். அங்கு முன்வைக்கப்பட்ட சுலோகங்களை இங்கு படங்களில் காண்கிறீர்கள்.

இலங்கை ஆசிரியர் சங்கம் - சுன்னாகம் நிலத்தடி நீர் மாசடைவதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!: VIDEO - 1 (இங்கே அழுத்தவும்)

இலங்கை ஆசிரியர் சங்கம் - சுன்னாகம் நிலத்தடி நீர் மாசடைவதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!: VIDEO - 2(இங்கே அழுத்தவும்)