28
Fri, Jun

2014
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நிலத்தடி நீரில் கழிவு ஓயில் கலப்பதற்கு காரணமாக இருக்கின்ற சுன்னாகம் அனல் மின்னிலையத்தை மூடும்டபடி முற்றுகை போராட்டம் இன்று பொதுமக்களாலும் பல்வேறு அரசியல் தரப்பினராலும் முன்னெடுக்கப்பட்டது.

சுன்னாகம் அனல் மின்னிலையத்திற்கு பதிலாக லக்ஸ்சபான நீர் மின்சாரத்தை வழங்கவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான தீர்வுகளை விரைந்து எடுக்கவும் வலியுறுத்தி சுன்னாகம் கிழக்கு சனசமூக நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தில் பல்வேறு அரசியல்தரப்பினரும் ‌பொதுமக்களும் இன்று (17.01.2014) பெருந்திரளாக கலந்து கொண்டனர். இதில் புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சியின் பொதுச்செயலாளர் சி.கா செந்திவேலும் அங்கத்தவர்களும் கலந்து கொண்டதுடன். இதில் அக்கட்சியின் சார்பில் இளைஞர் அணிச்செயலாளர் த.பிரகாஸ் சனசமூக நிலையத்தலைவர் க‌ஜேந்திரன் கருத்துரையாற்றுவதையும் கலந்துகொண்ட மக்களையும் படத்தில் காணலாம்.