25
Tue, Jun

2014
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் இடதுசாரி முன்னணியின் பொது வேட்பாளர் துமிந்த நாகமுவவின் பிரச்சார அணியினர் மீது இன்று கொலன்னாவ வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் கொலை வெறித்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 5 மணியளவில் முச்சக்கரவண்டி ஒன்றில் இடதுசாரி முன்னணியின் பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுக்கும் முகமாக சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த இடதுசாரி முன்னணியின் பொது வேட்பாளரின் ஆதரவாளர்கள் மீதே இத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் மேற்கொள்ள வந்தவர்களில் 7 பேர் இருந்தாகவும் வாகனத்தில் "மைத்திரியின் ஆட்சி" (மைத்திரி பாலனயக்) என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்ததாகவும் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் தெரிவித்தனர்.

இந்த தாக்குதலில் முச்சக்கரவண்டி கடுமையாக சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன் இடதுசாரி முன்னணியின் ஆதரவாளர்கள் இருவர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமத்திக்கப்படுள்ளதுடன் வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.