25
Tue, Jun

2014
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கடந்த யுத்த காலத்தில் இந்திய மீனவர்களைக் கடலில் கொன்ற இலங்கை கடற்படை, பல ஆயிரம் இலங்கை தமிழரையும் கடலில் வைத்து கொன்று குவித்தது. இந்த குற்றம் தொடர்பாகவும், இதற்கு நீதி கோரியும் இன்று யாரும் மீனவர் பிரச்சனையில் அக்கறை கொள்வது கிடையாது.

மாறாக இதை கொண்டு இலங்கை கடலில் அத்துமீறி மீன் பிடிப்பதையும், தடை செய்யப்பட்ட மீன்பிடியை நடத்துவதையும தடுப்பதையே, மீனவர் பிரச்சினையாக இன்று முன்னிறுத்திக் காட்டுகின்றனர்.

இந்த பிரச்சினையை முன்னிறுத்தி சிறிய மீன்பிடிகளை ஓழித்துக் காட்டுவதும், நவதாரள பன்நாட்டு; மீன்பிடியை சட்டபூர்வமானதாக அனுமதிக்கும் சதியை எப்படி முன்னெடுப்பது என்பதே பற்றியே தரகு வேலை செய்யும் மாமா சுப்பிரமணிய சுவாமியும் அதற்கு பாய் விரிக்கும் மகிந்தாவும் சந்திக்கவுள்ளனர்.           

அன்றாடம் மீன்பிடி மூலம் உழைத்து வாழும் மீனவர்களின் எதிர்காலத்தை இல்லாதாக்கும் சதியையே இந்த சந்திப்பு மூலம் அரங்கேற்றவுள்ளனர்.