25
Tue, Jun

2014
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இனவாதம், மதவாதம், சாதியவாதம் மூன்றையும் தங்கள் தனிப்பட்ட வாழ்கையாகக் கொண்ட, அதையே அரசியல் நடைமுறையாக கொண்ட மோடி - விக்கினேஸ்வரன் சந்திக்கவுள்ள செய்தியை, தமிழ்த் தேசியம் பரபரப்பாக்கி தமிழ் மக்களை மூட்டாள்களாக்க முனைகின்றனர்.

இன-மத-சாதியத்தை கொண்டு மனிதனை பிளக்கும் இந்த மனித விரோதிகளின் சந்திப்பு மூலம், தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்க்க வழி எற்படும் என்ற பொய்யை வெளியிட்டு வருகின்றது.

இந்திய ஆளும் வர்க்கம் இலங்கை இனப் பிரச்சனை மூலம் தனது பிராந்திய நலனை அடைந்த அதேநேரம், மக்கள் போராட்டத்தை அழித்து. மக்களுக்காக போராடுவதாக கூறிய கூலிப் போராட்டம் மூலம் தமிழ் மக்களையே அழித்தது. இது கடந்த கால வரலாறு.

இந்தியா தங்களை நம்பி செயற்படுமாறும், தாங்கள் தீர்வை பெற்று தருவதாக மாயை எற்படுத்தி நிற்கும் பின்புலத்தில், கூட்டமைப்பு மட்டுமல்ல தமிழ் தேசியத்தை வைத்து பிழைக்கும் ஊடாகவியலாளர்களும் கூட சேர்ந்து இயங்குகின்றனர்.

இலங்கையில் உழைக்கும் மக்களை ஒன்றுபடுத்தி தீர்க்க வேண்டிய அரசியல் எதார்த்தத்தை நிராகரித்து, கற்பனையான பிறரை நம்பியும் சார்ந்தும் நிற்பதான மக்கள் விரோத அரசியலை விதைத்து, பேரழிவினையும் பாரிய மக்களையும் பலியிட வைத்து அறுவடை செய்தது என்பதே கடந்த வரலாறு. இதனை தொடரவே மோடி - விக்கினேஸ்வரன் சந்திப்பு என்பதே இன்றைய உண்மையாகும்.