25
Tue, Jun

2014
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

"தமிழ் தேசியத்தை" வைத்து பிழைப்பு நடத்தும் பொய்யர்கள் தான், இந்தக் கூட்டமைப்பினர்.

தமிழ் மக்களை இனவாதம் மூலம் அணிதிரட்ட "தமிழீழம்" என்று 1970களின் தேர்தல் மேடைகளில் மூழங்கியவர்கள், வாக்குகளை பெற்றவர்கள், தாம் அல்லாதவர்களை  துரோகியாக காட்டி சுட்டுக் கொல்லவும் வழிகாட்டியவர்களின் அரசியல் வழிவந்தவர்கள் தான் புலிகள் உள்ளிட்ட இயக்கங்கள்.

மக்களை பலியிட வைக்கும் இனவாத யுத்தத்தை நடத்தியதன் மூலம், அதற்கு மக்களை பலியிட்டவர்களை ஆதாரித்து அதற்கு அரசியல் ரீதியாக துதிபடி கும்மி அடித்தவர்கள் இந்த கூட்டமைப்பினர் தான்.  இன்று அந்த இனவாத அரசியல் நீட்சியாக இருப்பவர்ர்களும் இவர்கள் தான்

புலி - கூட்டமைப்பு என்று பிரிக்க முடியாத, இனவாத முதலாளித்துவ அரசியல் வழிமுறையாகும். இங்கு "தமிழீழம்" குறித்த காலத்தின் குறியீடே ஓழிய, இனவாத அரசியலுக்கு வெளியிலான தனியான செயற்பாட்டு முறையல்ல.

இன்று சுயநிர்ணயம் எப்படி அரசியல் ரீதியாக திரிந்து பிரிவினையாக புரிந்து தமிழீழமாக அரசியல் விளக்கம் கொள்ளப்படுகின்றதோ, அது போல் தமிழ் இனவாதம் என்பது  தமிழீழம் என்பதே உண்மையுமாகும். சுமத்திரனும் கூட்டமைப்பும் பொய் பேசுகின்றது.