25
Tue, Jun

2014
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மகிந்தா அரசு அதன் கொள்கைளை எடுத்துச் செல்ல தான் யாழ்தேவியை யாழ்ப்பாணத்திற்கு வெள்ளோட்டமாக அனுப்பியுள்ளது.

இன்று இனவாத அரசு நவதாரளவாதத்தையே புகையிரதம் மூலம் யாழ் நோக்கி எடுத்து வந்திருக்கின்றது. யாழ் குடாவில் வீங்கி வெம்பி கிடக்கும் நவதாரளவாத மயமாக்கமும், அதன் உதரி கலச்சாரமும், இனி வேகமாக பயணிக்கவுள்ளதையே யாழ்தேவி மூலம் ஜனாதிபதி பறைசாற்றி இருக்கின்றார். இந்த புகைவண்டி முதல், பாதை வரை போட்டது இந்திய அரசு. 2009 இல் தமிழின அழிப்பின் பின்னர் யாழ் மாவட்டத்தில் இந்திய பெருமுதலாளிகளிற்கு சகலத்தையும் மகிந்த அரசு திறந்து விட்டு தாராளமாக கொள்ளையிட அனுமதித்துள்ளது.

மக்களின் பயன்பாட்டிற்குரிய இந்த போக்குவரத்தின் மூலம் மக்களை இணைக்கவும், நாட்டை நேசிக்கவும், அன்னிய நவதாரளமயத்தையும் அதனுடன் கூடிய  இனவாதத்தையும் நிராகரிக்கின்ற பாதைக்கான பயணமாக இதை மாற்றி அமைக்கும் வரை, யாழ்தேவியின் வருகையானது இனவாதமும் நவதாரளமயமும் தொடர்ந்து பயணித்து எம்மக்களின் வாழ்வை கருவறுக்கவே.