25
Tue, Jun

2014
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

"விடுதலைப் புலிகள் புரிந்தது மட்டுமே போர் குற்றம் என்று சிங்கள அரசு கூறுவதன் மூலம் மீண்டும் சர்வதேசத்தை ஏமாற்றப் போவதாக" ருத்திரகுமாரன் கூறுகின்றார்.

அரசு ஏமாற்றுவதும் ஏமாற்ற முனைவதும் உண்மை என்று எதோ புதிதாக கண்டு பிடித்து கூறுவது தான் ஆச்சரியம்.

ருத்திரகுமாரனின் "சர்வதேசம்" காலகாலமாக உலகையும் மக்களையும் ஏமாற்றுவதை மூடிமறைக்க, இலங்கை அரசு ஏமாற்றுவதால் அதற்கு "சர்வதேசம்" பலியாகியாகி விடும் என பித்தலாட்டத்தை செய்கின்றார். அத்துடன் "சர்வதேசமே" இனி தமிழனுக்கு எல்லாம் என்று கூறி ஏமாற்றும் மோசடிகள் அம்பலமாவதால், அதை சரிக்கட்ட தமிழன் "சர்வதேசத்துடன்" இல்லாதே காரணம் என்று கூறி அதை தமிழ் மக்கள் மேலான பலியாக்கி விடுகின்றார்.

தமிழ் மக்கள் போராட்டம் முடிந்து விட்டது, இனி சர்வதேசத்தின் கண் திறக்க வைக்கும், கூலிக்கு மராடிக்கும் கைக் கூலிப் போராட்டம் தான் தமிழனின் அரசியல் என்று கூறி  மாமா வேலை பார்க்கின்றார் "நாடு கடந்த தமிழீழத்தின்" பெயரில் ருத்திரகுமாரன்.