25
Tue, Jun

2014
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஊழல் மறறும் அதிகாராம் மூலம் கொள்ளை அடித்ததை, அதை மூடிமறைக்க சட்டம் நீதியை விலை பேசியதை, உலகில் இல்லாத ஒன்றா என்று கேட்டு எழும் எழுத்துப் பொறுக்களின் வாதம்.

நிதியின் பெயரால், ஜனநாயகத்தின் பெயரால், தமிழனின் பெயரால், தமிழ்நாட்டின் பெயரால், சாதியின் பெயரால், நீதிபதியின் மதத்தின் பெயரால், அரசியல் சதியின் பெயரால் .... இப்படி எத்தனையோ மக்களை பிளக்கும் புல்லுரிவித்தனத்தால், குற்றவாளியை விடுவிக்கும் "நீதியைக்" கோருகின்றன்றனர்.

இந்தியாவில் இல்லாத ஊழலா? "அம்மாவை" மட்டும் ஏன் தாண்டிக்க வேண்டும் என்று வில்லங்கம் செய்யும் வில்லங்கங்கள் தான் இவர்கள். "அம்மா"வின் பெயரில் வீதியில் இறங்கி மக்களுக்கு எதிராக ரவடித்தனம் செய்யும் கும்பலுக்கும், அம்மாவின் குற்றங்களுக்கு "நீதி" கோரி எழுதும் விபச்சார தரகர்களும் எந்த வேறுபாடும் கிடையாது.