25
Tue, Jun

2014
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

காணமல் போனவர்கள் எதற்காக? எப்படி யாரால் காணமல் போனார்கள்? என்பதை விசாரிப்பதல்ல ஜனாதிபதி ஆணைக் குழுவின் நோக்கம்.

அது காணமல் போனவர்களை தேடும் உறவுகளை, தேடுவதில் இருந்து காணமலாக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றது.

குற்றத்தை இழைத்த ஒரு தரப்பு, உள் நோக்குடன் நியமித்த ஆணைக்குழு விசாரணை செய்கின்றது. ஆணைக்குழுக்கு முன் சாட்சிமளிக்க வருபவர்கள் இராணுவ புலனாய்வின் அச்சுறுத்தலைகளைத் தாண்டி வந்தால், விசாரனை நடக்கும் இடம் இராணுவ முகாமுக்குரிய சூழலை ஓத்ததாகவும், அச்சத்துக்குரிய பிரதேசமாகவும் இருக்கின்றது. அத்துடன் காணமல் போக வைத்த குற்றவாளிகள் சுற்றி நின்று கண்கணித்து, தங்களுக்குகேற்றதாக மாற்ற முனைகின்றனர். 

ஆணைக்குழுவோ சாட்சி பதிவுக்கு பதில் அவர்களுக்கு சலுகை கொடுப்பதன் மூலம் அரசுக்கு எதிரான சாட்சிகளை அழிக்க முனைகின்றது. அதை புலிக்கு எதிரானதாக, மாற்ற முனைகின்றது. அதே நேரம் புலிக்கு எதிராக சாட்சியங்களை இராணுவமே தயார் செய்து சாட்சியமளிக்க வைக்கின்றது.

மொத்ததில் அரசாலும் - புலியாலும் காணமல் போனவர்கள் பற்றிய உண்மையான சுதந்திரமான விசாரணைக்குரிய இந்த சூழல் அதற்குரிய சமூதாய அங்கீகாரம் கொண்டதல்ல, இந்த விசாரணை என்பதை வரலாறு மீண்டும் ஒருமுறை பறைசாற்றி நிற்கின்றது.