25
Tue, Jun

2014
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இராணுவத் தேவைக்காக நிலங்கள் கையகப்படுத்தலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றைய தினம் புதுக்குடியிருப்பில் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இன்று காலை 10 மணியளவில் புதுக்குடியிருப்பு சந்தை பகுதியில் ஆரம்பித்த இப்போராட்டம் பிரதேச சபையில் முடிவடைந்தது.

இராணுவமே வெளியேறு, எங்கள் நிலம் எங்களுக்கு வேண்டும், எங்கள் வீடு எங்களுக்கு வேண்டும், அபிவிருத்திகள், இழப்பீடுகள் வேண்டாம் காணமால் போன உறவுகளுக்கு முதலில் பதில் சொல் ஐக்கிய நாடுகள் சபையே எங்களை நிம்மதியாக வாழ வழி செய் போன்ற கோஷங்கள் எழுப்பியவாறு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.