25
Tue, Jun

2014
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

 

சர்வதேச சினிமாவில் தடம் பதித்து புதுப்பாதையை திறந்துவிட்டிருக்கும் இயக்குனர் பிரசன்ன விதானகேயினது தலைசிறந்த திரைப்படம் "With you, Without you" - "நீ இல்லாமல், உன்னோடு" - (பிறகு) இங்கிலாந்தில் வாழும் உங்களுக்காக, எதிர்வருகின்ற ஞாயிற்றுக்கிழமை 7ம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு கரோ சபாரி சினிமா அரங்கில் (Harrow "SAFARI" Cenima) திரையிடப்படுகின்றது.

இத் திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கு பற்றி பலரது பாராட்டுக்களை பெற்றுள்ளதுடன்; சிறந்த நடிகை, சிறந்த படம் மற்றும் பல விருதுகளையும் வெற்றி கொண்டுள்ளது.

நீண்ட கொடிய யுத்தத்தினால் பாதிப்படைந்த தமிழ் யுவதி ஒருவருக்கும் ராணுவத்திலிருந்த ஒரு சிங்களருக்கும் இடையேயான காதல் குறித்த கதையினூடாக இனவாதத்திற்கு துணை போய்க் கொண்டிருக்கின்ற பெரும்பான்மை சிங்கள மக்களிற்கு அரசியல் செய்தி ஒன்றினை கூறுகின்றது இந்த திரைப்படம்.

இந்த திரைப்படம் குறித்து தமிழக திரைப்பட இயக்குனர், ஒளிப்பதிவாளர், எழுத்தாளர் தங்கப்பச்சன் கூறியது:

வித் யு வித்அவுட் யு - (with you without you) சிங்கள மொழி திரைப்படம் பிரசன்னா விதானகே எனும் சிங்களர் இயக்கிய திரைப்படத்தை பாலுமகேந்திரா இறப்பதற்கு இருபது நாட்களுக்கு முன்தான் எனக்கு திரையிட்டு காட்டினார். அப்போது என் மூத்த மகனும், பட்டறை மாணவர்களும் அந்த இயக்குனருடன் அமர்ந்து படத்தை பார்த்தோம்.

பிரசன்னாவின் படங்கள் உலக அரங்கில் கவனத்தைப் பெற்றவை. அவரின் முந்தைய படங்கள் போலவே இந்தப் படமும் எனக்குப்பிடித்திருந்தது. சிங்களர் ஒருவர் தமிழனின் அரசியல் சிக்கலைப் புரிந்து அவனின் ஆதரவுக்குரலை அழகியலுடன் கூடிய ஒரு அரசியல் படத்தை படைத்திருந்ததைப் பார்த்ததும் ஏற்கெனவே எனக்கிருந்த குற்றவுணர்ச்சி அதிகமானது.

ஒரு தமிழனாக இருந்து நாம் செய்வதை விடவும் ஒரு சிங்களக் கலைஞன் நம் சிக்கலைப் புரிந்து நமக்கு ஆதரவளிப்பதென்பது போற்றுதற்குரியது என்பதை நானும் பாலுமகேந்திரா அண்ணனும் பகிர்ந்துகொண்டோம்.