25
Tue, Jun

2013
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஷிராணி பண்டாரநாயக்கவின் பிரதம நீதியரசர் பதவி விலகல் கடிதம் கிடைக்கப் பெற்ற போதும் அவர் பதவியிலிருந்து விலகுவதற்குத் தயார் இல்லை என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஒருபுறமிருக்க நீதிபதிக்கு நீதி கிடைக்கும்வரை போராட்டம் தொடருமென்கின்றது சட்டத்தரணிகள் சங்கம்

 ஷிராணிக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்!

இலங்கையின் பிரதம நீதியரசர் பதவியில் இருந்து ஷிராணி பண்டாரநாயக்கா அவர்கள் இலங்கை ஜனாதிபதியால் நீக்கப்பட்டதாக் அறிவிக்கப்பட்டிருக்கின்ற போதிலும்இ அவருக்கு நீதி கிடைக்கும் வரை தமது போராட்டத்தை இலங்கை சட்டத்தரணிகள் தொடருவார்கள் என்று அவர்களுக்கான அமைப்பைச் சேர்ந்த சட்டத்தரணி மு.ளு. ரட்ணவேல் கூறியுள்ளார்.

சட்டத்தரணிகள் புதிதாக நியமிக்கப்படக் கூடிய பிரதம நீதியரசருக்கு சம்பிரதாய பூர்வமான வரவேற்பை வழங்குவதில்லை என்று முடிவு செய்திருப்பதாகவும்இ அதன் அர்த்தம் அவருக்கு சட்டத்தரணிகள் தமது ஆதரவை வழங்கமாட்டார்கள் என்பதாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்

அதேவேளைஇ அனைத்து சட்டத்தரணிகளுக்கான அமைப்புக்களின் கூட்டமைப்பு விடுத்துள்ள ஒரு கோரிக்கையில்இ மேன்முறையீட்டு மற்றும் உச்ச நீதிமன்ற நீதியரசர்களை புதிய தலைமை நீதியரசர் ஒருவர் நியமிக்கப்பட்டால் அவருக்கு உதவக் கூடாது என்று கேட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கிடையில் புதிய நீதியரசர் பற்றியும் அரசு அறிவித்துள்ளது.

 புதிய பிரதம நீதியரசர் குறித்து நாளை அறிவிப்பு

புதிய பிரதம நீதியரசர் தெரிவு குறித்து பாராளுமன்ற கவுன்ஸிலுக்கு கிடைக்கப் பெற்றுள்ள நீதியரசர்களது பெயர் பட்டியல் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இப் பெயர் பட்டியலில் உள்ள ஒருவர் தெரிவு செய்யப்பட்டுஇ ஜனாதிபதிக்கு நாளை (15) அறிவிக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்தார். இவ்விடயம் குறித்து கலந்துரையாடுவதற்காக 18ஆவது திருத்த சட்டமூலத்திற்கு அமைய பாராளுமன்றம் கவுன்ஸில் இன்று (14) கூடியதாக அவர் தெரிவித்தார். பாராளுமன்ற கவுன்ஸிலின் தலைவர் சபாநாயகர் சமல் ராஜபக்ஷஇ பிரதமர் டி.மு. ஜயரத்ன மற்றும் தாமும் கலந்து கொண்டதாக ஏ.எச்.எம். அஸ்வர் குறிப்பிட்டார். எனினும் எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்க மற்றும் பாராளுமன்ற கவுன்ஸிலில் உறுப்பினர் டி.எம்.சுவாமிநாதன் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

என்னவோ மகிந்த மன்னரின் கோமாளி ஆட்சி…..சிதம்பர சக்கரத்தை பேய் பார்த்த்த கண்க்கில் உள்ளது!