25
Tue, Jun

மாணிக்கம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

 

"அல்லா மீது ஆணையாக

நான் இந்தக் குழந்தையின் கழுத்தை

நசிக்கவில்லை" - சகோதரி ரிசானா நபீக்.

 

இது ரிசானா நபீக்கின்

தரம் அறுபட முன்பான

அறுதி வார்த்தை.

 

அவள் கொல்லப்பட்டுவிட்டாள்

அவள் கொலைக் குற்றமற்ற

கொலையாளியாகக் கொலை செய்யப்பட்டாள்.

 

இந்தக் கொலையை

Last minuteஇல் நிறுத்துமாறு

சிறிலங்காவின் அதிகார ஜனாதிபதி

சௌதி அரேபிய மக்காவுக்கு

அதன் மாட்சிமையான மன்னனுக்கு

Last minuteஇல் ஒரு தந்தியை

அனுப்பியதான சேதியேதும் உண்டா..?

 

கிழக்கில் உதயமென்று

வாலைக் கிளப்புகின்ற

அமைச்சர் எம்பிக்களும்

சௌதி அரேபிய மக்காவுக்கு

அதன் மாட்சிமையான மன்னனுக்கு

அல்லது அந்தக் குறிப்பிட்ட

அரேபியக் குழந்தையின் குடும்பத்துக்கு

Last minuteஇல் ஒரு தந்தியை

அனுப்பியதான சேதியேதும் உண்டா..?

 

ஆதாரமற்ற குற்றத்திற்காக

எண்ணெய்த் திமிர் நாட்டின்

மனிதாபிமானமற்ற படுகொலையை

எமது பிச்சைக்கார வல்லாளர்கள்

Last minuteஇலாவது நிறுத்து என

ஒரு வேண்டுகோள்..?

 

தமிழ்ச் சிற்றின மக்களை

முக்கி முக்கி முள்ளிவாய்க்காலில்

கொன்றழித்த பேரினவாத அரசுக்கு

இந்த ரிசானாவும்

சிற்றினத் தமிழிச்சிதானே...

இவள் அழிந்தாலும்

அரசுக்கு வரவுதானே என

Last minuteஇல் எடுத்த முடிவோ..?

 

அவள்..! பாவம் செய்யாத பாவி

அவளை எமது நாட்டு அரசு கொன்றுவிட்டது

அவளை எமது நாட்டு அரசியல்வாதிகள் கொன்றுபோட்டனர்

அவளை எமது நாட்டு மதவாதிகள் கொலையாடினர்

அவளை சௌதி அரேபிய மாட்சிமை தரமறுத்தது

அவளை கொல்லும்போது அவள் நம்பிய இறையும்

அவளை Last minuteஇல்..??

- மாணிக்கம்

10.01.2013