25
Tue, Jun

விஜயகுமாரன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தமிழ்நாட்டின் அரசியல்வாதிகள் என்னும் பொறுக்கிகள்  யார்? சாராயம் காய்ச்சுபவர்கள்; கட்டைப் பஞ்சாயத்து செய்பவர்கள்; ஆற்று மணல் அள்ளுபவர்கள்; அடுத்தவர் சொத்தை அடாவடித்தனம் பண்ணிப் பறிப்பவர்கள்; கோடி கோடியாக ஊழல் செய்பவர்கள். பதவிக்காக பல்லிளித்துக் கொண்டு எவர் காலிலும் விழுபவர்கள். அறிவு, பகுத்தறிவு, பொது அறிவு என்பவை அவர் தம் மண்டைக்கு அறவே சம்பந்தம் இல்லாத சமாச்சாரங்கள்.

தமிழ்நாட்டின் பொலிஸ்காரர்கள் என்னும் எச்சில் துண்டுக்கு அலையும் இழிபிறவிகள் யார்? மேல் மட்ட நாய்கள் அரசியல்வாதிகளின் காலையும், பிற உறுப்பு ஒன்றையும் நக்கி வாலை ஆட்டினால் கீழ் மட்ட நாய்கள் அரசியல்வாதிகளினதும், தம் அதிகாரிகளினதும் கால்களை நக்கும். மேலும் மேலதிகாரிகளின் கோவணத்தை நாக்கால் நக்கியே சுத்தம் பண்ணிக் கொடுக்கச் சொன்னாலும் இழித்துக் கொண்டே நக்கக் கூடியவை இந்த நாய்கள்.

தமிழ்நாட்டு காவல்துறை நாய்கள் ஜல்லிக்கட்டிற்காக போராடிய மக்களை அடித்தார்கள். கர்ப்பிணிப் பெண் என்றும் பார்க்காது வயிற்றில் ஓங்கி உதைத்தார்கள். பெண்களை ஆபாசமாக பேசினார்கள். காவல்துறையின் தாக்குதல்களில் இருந்து மக்களைப் பாதுகாக்க ஓடோடி வந்த கடல் தொழிலாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை அடித்தார்கள். அவர்களின் வாகனங்களை, வீடுகளை எரித்தார்கள். மீன் சந்தையை உடைத்து தரை மட்டமாக்கினார்கள். கேவலத்திலும், கேவலமாக அந்த ஏழைத் தொழிலாளர்களின் மீன்களை களவெடுத்துத் தின்றார்கள்.

கண்ணிற்கு முன்னே நடக்கும் பொலிஸ் நாய்களின் அநியாயங்களை பொறுத்துக் கொள்ள முடியாமல், தம் இயல்பான போர்க்குணத்துடன் வீறு கொண்டு எழுந்து எதிர்த்துக் குரல் கொடுத்ததிற்காக கடல் தொழிலாளர் சமுதாயப் பெண்களை இந்த நாய்கள் "தேவடியாள்களே, எங்களையே எதிர்த்து பேசுகிறீர்களா; உங்களை ரேப் பண்ணுவோம்" என்று ஊளையிட்டதாக அந்தப் பெண்கள் மனம் கசந்து அழுகிறார்கள். ஜெயலலிதா, சசிகலா போன்ற கொள்ளைக்காரிகளின் காலில் விழுந்து கூழைக்கும்பிடு போடும் இந்த நாய்கள் உழைத்து வாழும் ஏழைப் பெண்களை அவமானப்படுத்துகிறார்கள்.

தமக்கு முன்னே மூன்றடிகள் தம் தொந்தியை தள்ளிக் கொண்டு திரியும் இவர்கள் உழைத்து, உழைத்து உரமேறிய உடல் கொண்ட கடல் தொழிலாளர்களை அடித்து தம் வீரத்தை காட்டுகிறார்களாம். இந்தக் களவாணிகள் காக்கிச் சட்டையைக் கழட்டி விட்டு அந்தத் தொழிலாளர்களுடன் மோதிப் பார்க்கட்டும். அப்போது  நடக்கவே திண்டாடும் இந்த  ஊதிப் பருத்த பன்றிகள் ஓடும் ஓட்டத்தில் இந்த வீணர்களின் வீரம் என்னவென்று தெரியும்.

இந்த காவல்துறை நாய்கள் மக்களின் மேல் செய்த அராஜகங்களிற்காக காவல்துறை ஆணையாளரை விசாரிக்க வேண்டும், பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று குரல்கள் எழுகின்றன. இந்த அடிமைகள் இயல்பிலேயே வன்முறையாளர்கள், மக்கள் விரோதிகள் என்றாலும் தமிழ்நாடு முழுக்க பரவியிருந்த ஒரு போராட்டத்தை வன்முறை மூலம் அடக்க வேண்டும் என்றமுடிவை தன்னிச்சையாக எடுத்திருக்க முடியாது. மேலும் நமக்குத் தொழில் லஞ்சம், ஊழல், மாமூல் என்று எலும்புத் துண்டுகளைக் கடித்தபடி உள்ளூர் ரெளடிகளுடன் கூட்டுக்கலவி செய்வது தான் அவர்களது வழக்கமே தவிர அரசியல் முடிவுகளை அவர்கள் எடுப்பதில்லை.

இந்தப் போராட்டத்தை மட்டுமல்ல இனி ஒரு போராட்டத்தையுமே நினைத்துப் பார்க்கக் கூடாது என்பதற்காகவே தமிழ்நாட்டு அரசு என்னும் பொறுக்கிகள் தமது அடிமைகளை ஏவி விட்டு மக்களைத் தாக்கியிருக்கின்றார்கள். மேலும் தமிழ்நாட்டு அரசுப் பொறுக்கிகளினது அனுமதி இல்லாமல் மக்களைத் தாக்குமளவிற்கு தமிழக காவல்துறையினர் மண்டை கழண்டவர்கள் அல்ல. தமிழ்நாட்டு அரசுப் பொறுக்கிகளின் அனுமதி இல்லாமல் தாக்கினால் பின்பு வழக்கு, விசாரணை என்று எதாவது வந்தால் பதவி இழக்க வேண்டி வரும் அல்லது தப்பித் தவறி சிறைக்குப் போக வேண்டி வரும் என்பது  அரசியல்வாதிகளுடன் அன்றாடம் பழகும் அவர்களிற்கு தெரியாதா? தாம் தப்புவதற்காக எவரையும் காலை வாரி விடுபவர்கள் தான் தமிழக அரசியல்வாதிகள் என்பது தமிழ்நாட்டின் சின்னக் குழந்தைகளிற்கு கூட தெரிந்த விடயம் என்னும் போது இந்தக் குள்ள நரிகளிற்கு எப்படித் தெரியாமல் இருக்கும்.

எனவே மாணவர்கள் மீது, கடல் தொழிலாளர் மீது, பொது மக்கள் மீது வன்முறை செய்த காவல் துறை நாய்களை விசாரிப்பதோடு, அவர்களை ஏவி விட்ட தமிழ்நாட்டு அரசுப் பொறுக்கிகளையும் விசாரணை செய்ய வேண்டும். பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட மக்களிற்கு வழங்கும் நியாயமாக இருக்கும்.