25
Tue, Jun

விஜயகுமாரன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பெயர்:  இரா.சம்பந்தன்

முழு நேரத் தொழில்: "நல்ல காலம் பிறக்கப் போகுது, வாக்குப் போடுங்கள்" என்று தமிழ் மக்களை ஏமாற்றுதல்

பகுதி நேர வேலைகள்:    எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்

நண்பர்கள்:  தமிழ் மக்களைக் கொன்ற கொலைகாரர்கள் மகிந்த ராஜபக்ச, சரத் பொன்சேகா, மைத்திரி சிறிசேனா, ரணில் விக்கிரமசிங்கா, இந்திய அரசு, மேற்கு நாடுகள்

தென்படும் இடங்கள்:  இந்திய, அமெரிக்க தூதரகங்கள்

 

காணவே முடியாத இடங்கள்:   தமிழ் மக்கள் போராடும் இடங்கள் (குறிப்பாக சம்பூர்)

பிடித்த விளையாட்டு:   இலங்கை அரசின் சிங்கக் கொடியை மேடைகளில் உயர்த்திப் பிடித்தல்

தமிழிலே பிடிக்காத  வார்த்தை: காணாமல் போனவர்களிற்கு, அரசியல் கைதிகளிற்கு என்ன தீர்வு

வாரிசுகள்:  கட்சிப் பதவியின் படி மாவை.சேனாதிராசா, அய்யாவின் விருப்பப்படி சுமந்திரன் (ஈழத்துச் சசிகலா)

கடைசியில் கண்டது:  2016 முடிவதற்குள் தமிழ் மக்களின் பிரச்சனைகளிற்கு தீர்வு என்று குறி சொல்லிக் கொண்டிருக்கும் போது

அய்யாவைப் பற்றிய விபரங்கள் தெரிந்தவர்கள் பழைய செருப்புகளுடன் தேடிக் கொண்டிருக்கும் தமிழ் மக்களிடம் மட்டும் விபரங்களைச் சொல்ல வேண்டாம் என்று அய்யாவின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அல்லக்கைகள் கேட்டுக் கொள்கிறார்கள்.