25
Tue, Jun

அகிலன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் சஞ்சீவ பண்டார பேருந்தொன்றில் பயணித்துக் கொண்டிருந்தவேளை நேற்று கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டhர். கைது செய்யப்பட்ட அவரை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சஞ்சீவ பண்டாரவை எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றில் கோரப்பட்ட போதிலும் அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து விசாரணைகளுக்காக எதிர்வரும் 25ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடுவதாக நீதிமன்றம் அறிவித்தது.

சஞ்சீவ பண்டார கைதுசெய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (20) நாடு முழுவதும் ஐந்து வெவ்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுவதாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

அரசின் அராஜக சடவடிக்கை!

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் ஏகப்பட்ட பிரச்சினைகள் உள்ளன.

அவை தொடர்பில் நடவடிக்கை எடுத்து தீர்வுகாண அரசால் முடியவில்லை.

5 பீடங்களைக் கொண்ட சப்ரகமுவ பல்கலைக்கழகத்திற்கு 2013ஆம் ஆண்டிற்கான மாணவர்கள் அனுமதியின்போது 500 பேர் குறைக்கப்பட்டுள்ளனர்.

இம்முறை மாணவர்களுக்கான அனுமதிக்கட்டணம் 3000 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இவையனைத்தும் கல்வி அமைச்சு பல்கலைக்கழகங்களை தனியார் மயப்படுத்தும் நோக்கிலிருந்து மேற்கொள்ளும் நடவடிக்கைகளாகும்.

இதுதவிர அண்மையில் பல்கலைக்கழக நிர்வாகம் விதித்த வகுப்புத்தடைக்கு நியாயம் கோரியே மாணவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

இதற்காக சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டிருந்த எதிர்ப்பு நடவடிக்கையை பொலிஸார் கண்ணீர் புகைப் பிரயோகம் மேற்கொண்டு கலைத்துள்ளனர். அரசு இயந்திரத்தின் இவ்அராஜக நடவடிக்கைகளுக்கு எதிராக மாணவர்கள் பல்முனைப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் முன்னால் உண்ணாவிரதம் இருந்த நான்கு மாணவர்களில் இருவர் பம்பகின்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது அவர்கள் பலாங்கொட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இன்று சனிக்கிழமை சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் பதுளை – பலாங்கொடை வீதியில் பம்பகின்ன முச்சந்தியில் அமர்ந்து தமது போராட்டத்தை விரிவுப்படுத்தியுள்ளனர்!

மேலும் சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டிருந்த எதிர்ப்பு நடவடிக்கையை பொலிஸார் கண்ணீர் புகைப் பிரயோகம் மேற்கொண்டு கலைக்க முற்பட்டவேளையில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் இரண்டு பொலிஸார் காயமடைந்துள்ளதாகவும்இ கொழும்பு பதுளை பிரதான வீதியின் பம்பஹின்ன பகுதியை மறித்து மாணவர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதால் போக்குவரத்திற்கு பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளது.

அரசு மாணவர்களின்மேல் போட பெரும் பாறாங் கல்லொன்றை தூக்குகின்றது. ஆனால் அரசிற்கு விளங்கவில்லை அது தன்காலில்தான் விழப்போகின்றதென…..இதைத்தான் சொல்வது அதிகார போதைக்கு புத்தி மத்திமமென்று…..