25
Tue, Jun

அகிலன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

"தமிழ்" "தமிழ்" என தமிழக மக்களையும், தொப்புள்கொடி உறவென இலங்கைத் தமிழ் மக்களையும் வைத்து காமடி அரசியல் செய்வதில் கருணாநிதிதான் "முன்னிலைக் கோமாளி" என்றால் முஸ்லீம் மக்களை வைத்து காமடி அரசியல் செய்வதில் மந்திரி ஹக்கீம் அவர்களும் கருணாநிதியின் "காமடி நேர்கோட்டில்தான்" சஞ்சரிக்கின்றார்.

"கிழக்கு மாகாணத்தில் இன்று ஐந்து உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சியை முஸ்லிம் காங்கிரஸ் கையில் வைத்துக்கொண்டிருக்கின்றது. ஆனால் அரசாங்கம் எங்களை அலட்சியப் போக்குடன் நடத்துகின்றது" எனகிறார் அமைச்சர் ஹக்கீம்.

"உண்மையான நண்பர்கள் யார் என்பதை இந்த அரசாங்கம் பிரித்தறிந்து கொள்ள வேண்டும். ஆனால் நாங்கள் தொடர்ந்தும் எங்களுக்கு அநியாயம் இடம்பெறும்போது பார்த்துக்கொண்டிருக்க முடியாது".

"முஸ்லிம் காங்கிரஸை அரசாங்கத்திற்குள்ளே எதிரியாக வைத்துக்கொண்டு தங்களுடைய அரசியல் முன்னெடுப்புக்களை மேற்கொள்ள அரசிற்கு உள்ளே உள்ளவர்களும், வெளியே உள்ளவர்களும் முயற்சி செய்துகொண்டிருக்கின்றனர். இது தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸின் உண்மையான போராளிகள் அவதானமாக இருக்க வேண்டும்".

"அதேபோன்று முஸ்லிம் காங்கிரஸை அரசாங்கத்தில் இருந்து வெளியேற்றி ஆட்சியை கவிழ்க்கவும் சிலர் முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். இந்த அனைத்து விடயங்கள் தொடர்பாகவும் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளேன் எனக் கனைக்கின்றார்.

இது கருணாநிதி காங்கிரஸ் அரசுடன் இருந்தவேளை சொல்லியவைகளையே ஞாபகப்படுத்துகின்றது.

"காங்கிரஸ் அரசாங்காத்தில் இருந்து தி.மு.க.வை வெளியேற்றி ஆட்சியை கவிழ்க்கவும் சிலர் முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். இந்த அனைத்து விடயங்கள் தொடர்பாக நான் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் தெரிவுpத்துள்ளேன் என் கருணாநிதி சொன்னதுபோல் இருக்கல்லவா?"!.........

இது என்னே அரசியல்! என்னே மக்களை ஏமாற்றும் கோமாளித்தனம்!

சரி இவர்களைத்தான் விடுவம்! மகிந்தாவின் மந்திரிகளான மற்றக் கோமாளிகளையும் எடுபிடிகளையும் பாருங்கள்……..??

"13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் கருத்துக்களை தெரிவிக்க கோத்தபாயவுக்கு அதிகாரம் கிடையாது": வாசு!

"அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஜாதிக ஹெல உறுமயவினால் முன் வைக்கப்படவுள்ள தனி நபர் பிரேரணை செல்லுபடியற்றதாகும்".

"அரசு மேற்படி பிரேரனைக்கு அங்கீகாரம் வழங்காது" என்று மொழி மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

"13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் கருத்துக்களை தெரிவிப்பதற்கு பாதுகாப்பு செயலாலர் கோத்தபாய ராஜபக்ஷவிற்கு அதிகாரமோ உரிமையோ கிடையாது".

"தேசிய அரசியல் செயற்பாடுகள் குறித்து பாராளுமன்றமே தீர்மானிக்கும். இதுவே அரசாங்கத்தின் நிலைப்பாடு" என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

"வடக்குத் தேர்தலை ஒத்திவைத்து அதிகாரங்களை குறைக்க முற்பட்டால் நிலமை மோசமடையும்:" டியூ குணசேகர!

"இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்பட வேண்டும்" – கருணாநிதி!

பொத்தாம் பொதுவாகப் பார்த்தால் நடிப்பு இல்லாமல் இருக்கும் வடிவேலுவை நடிக்க வைத்து, வேலையில்லாமல் இருக்கும் கருணாநிதியிடம் கதை வசனம் எழுதச் சொல்லி, சீறும் புயல் சீமானை இயக்குனராக்கி மேற்கண்ட அரசியல்வாதிகளை துணை நடிகர்களாக்கி ஓர் படம் எடுத்தால் எப்படியிருக்கும்?... தமிழகத்திலும் இலங்கையிலும வெற்றி விழாவான வெள்ளிவிழாவும் கொண்டாடும்தானே?.... இதில் என்ன சந்தேகம்?....

என் செய்வது எங்களுக்கு வாய்த்த காமடி அரசையும! அதற்கு தோதான கோமாளி மந்திரி பிரதானிகளையும்!...