25
Tue, Jun

அகிலன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஆறு ஏக்கரில் அல்ல ஆறாயிரம் ஏக்கரில் இராணுவக் குடியேற்றமாம்!!

வலி.வடக்கு மற்றும் வலி.கிழக்கு பகுதிகளில் பொது மக்களுக்குச் சொந்தமான ஆறு ஆயிரத்து 381 ஏக்கர் காணிகள் இராணுவத்தினரால் பலாத்காரமாக பறிபோயுள்ளது. இது தொடர்பான அறிவித்தல்கள அந்தந்த இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது.

இதற்கு அரசு சொல்லும் காரணம்

யாழ்.பாதுகாப்புப் படைகளின் தலைமையகத்துக்கு பலாலி, காங்கேசன்துறை ஆகிய உயர் பாதுகாப்பு வலயப்பகுதியை முறைப்படி கையளித்து, அதை இப்போ பறித்துள்ள ஆறாயிரம் ஏக்கரில், "மகிந்த சிந்தனையிலான மிக்சரியான இனவாத-இனச் சுத்திரிப்பு" கொண்ட நடவடிக்கை நோக்கில் விசாலமான விஸ்தரிக்கப்பட்ட இராணுவக் குடியேற்றத்தை ஏற்படுத்தப்போகின்றோம் என்பதேயாகும்.

இதில் உள்ள மிக முக்கிய கேள்வி யாதெனில், இவர்களால் ஒப்படைக்கப்படவுள்ள அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் ஏற்கனவே எத்தனை ஆயிரம் ஏக்கரில் இருந்தது.

ஆறாயிரம் ஏக்கரிலா? இல்லையே! தற்போது இக்குறைந்த பரப்பளவில் இருந்துதானே வடபகுதியில் உள்ள சகல பரிபாலனங்களையும் செய்கின்றீர்கள்.

 

அப்போ இனிமேல் என்னதான் செய்யப்போகின்றீர்கள்?

பறித்துள்ள பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகளில் உங்கள் ராணுவத்தின் குடும்பங்கள் குடியேறவுள்ளன. அவர்களுக்கு நீண்டகால நோக்கில் வாழ்வாதாரங்களை அமைப்பதற்கான சகலதையும் (வீடு, பாடசாலை, வைததியசாலை, புத்தகோவில் போன்ற இன்னோரன்னவைகள்) மேற்கொள்ளப் போகின்றீர்கள்.

உங்கள் இராணுவத்திருக்கு இந்நடைமுறைதான் தமிழர் தாயகம் தவிர்ந்த ஏனைய ஏழு மாகாணங்களிலும் உள்ளனவா?

சிங்களப்பிரதேசங்களில் சிவில்சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான் ஆளுனர்களாகவும், ஏனைய மிக முக்கிய உயர் பதவிகளையும் வகிக்கின்றார்கள். ஆனால் தமிழர் தாயகத்தில் இராணுவ அதிகாரிகளே இவை அத்தனை பதவிகளையும் வகிக்கின்றார்கள். இது எந்தவகை கொண்ட அரசியல்? அரசியல் செயற்பாடுகள்?

எனவே இனச்சுத்திகரிப்பிலான இனவெறி கொண்ட நடவடிக்கைளை தமிழ் மக்கள் பொறுத்திருந்து பார்ப்பார்களா?

அதனால்தான் தமிழ் மக்கள் "எமது நிலம் எமக்கு வேண்டும் என்கின்றார்கள்!"

"எங்கள் விளை நிலங்களில் உங்களுக்கு இராணுவக் குடியேற்றமா?" எனக் கேட்கின்றார்கள்.

அதற்கான போராட்டங்களை ஜனநாயக வழிநின்று போராடுகின்றார்கள்!

ஒவ்வொரு அரசும் தன் நாட்டின் சிறுபான்மை இனங்களுக்கானவற்றை கொடுப்பது பாதுகாப்பது, அதன் கடமை!

அதை செய்யாததன் பலனின் விளைவை இலங்கை அரசும் அறியாத ஒன்றல்ல!

முட்டாள்கள் பாறாங்கல்லை தூக்குவது தங்கள் கால்களில் போடுவதற்கே!

இது மகிந்த அரசிற்கு பொருந்தாதோ? கண்டிப்பாக பொருந்தும்….