25
Tue, Jun

அகிலன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

வடக்கு கிழக்கில் இராணுவ ஆட்சியை நிறுத்த கோரியும், கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைகழக மாணவர்களை விடுதலை செய்யக்கோரியும், கடத்தல் மற்றும் கைதுகளை நிறுத்த கோரியும் சம உரிமை இயக்கத்தினரால் இன்று யாழ் நகரில் கையெழுத்து போராட்டம் நடாத்தப்பட்டது. அவ்வேளை சம உரிமை இயக்க உறுப்பினர்களது வாகனத்தின் மீது படையினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். பகல் 11.45 மணியளவில் அங்கு வைக்கப்பட்டிருந்த மகஜரில் பெருமளவான மக்கள் ஒப்பமிட்டுக் கொண்டிருந்தனர். அவ்வேளை கடற்படை சீருடையில் வந்த சில "அரசகழிவுகள்" ஒப்பமிட்டுக் கொண்டிருந்த மக்கள் மீது கழிவு எண்ணெயை வீசிவிட்டு சென்றனர். "அரசகழிவுகளின்" எண்ணெய் வீச்சிற்கு பொதுமக்களும், ஓரிரு பத்திரிகையாளரும் இலக்காகினானார்கள்.

"அரசகழிவுகளின்" கழிசடை நடவடிக்கைகள் குறித்து பதிவொன்றை செய்வதற்காக சமவுரிமை இயக்கத்தின் இணைப்பாளர்  ரவீந்திர முதலிகே, இணை இணைப்பாளர் பழ.ரிச்சாட் ஆகியோருடன் இன்னும் பல சிங்களத் தோழர்களும் யாழ். பொலிஸ் நிலையம்  சென்றனர்.அங்கு அவர்கள் தங்களை சமஉரிமை இயக்க உறுப்பினர்கள் என அறிமுகம் செய்து, தங்களால் நடாத்தப்பட்ட கையெழுத்து இயக்க நடவடிக்கையின் போது, நடந்த அசம்பாவிதங்களை பதிவு செய்யுமாறு வேண்டினர். உடனே பொறுப்பில் இருந்த அதிகாரி, நீங்கள் ஒப்பமிட வைத்திருந்த பனர்களில் "இராணுவத்தை வெளியேறு" எனும் வாசகத்தை எழுதியுள்ளீர்கள் அதனால் உங்கள் வாக்குமூலத்தை பதியமாட்டோம் என மிரடடினார்.

நடைபெற்றது ஓர் ஜனநாயக ரீதியான நடவடிக்கை, அதில் அசம்பாவிதங்கள் நடைபெற்று, உங்களுக்கு முறைப்பாடுகள் வந்தால் அதைப் பதிவு செய்வது உங்களின் கடமை. இதற்கான சட்டவிதிகள் உங்களுக்கு புரியாதா? எங்கள் முறைப்பாடுகளை பதியாவிட்டால், இதற்கான மாற்று நடவடிக்கை எதுவென எங்களுக்கும் தெரியும்மென சொன்னதின் பிரகாரமே முறைப்பாடுகளை பதிவிட்டனர். பின்னர் பதிவின்போது பெயர்களையும், அதை இன-மத அடிப்படையிலும் சொல்லும்படி பொலிசார் கேட்டனர்.

நாங்கள் "சிங்களப்-பௌத்த பேரினவாதிகள்" அல்லர் எங்கள் பெயர்களையும், நாம் இலங்கையர் என்பதையும் பதிவு செய்தால் போதுமானது. அது ஏனைய விசாரணைகளுக்கும் சட்ட நடவடிக்கைகளுக்கும் போதுமானது என்றார்கள் சமவுரிமை இயக்கத்தின் தோழர்கள். பொலிஸ் நிலையத்தில் நீண்டநேர (பொலிஸ்-மிரட்டல்கள் கொண்ட) வாக்குவாதங்களின் பின்பே பொலிஸ் நிலையத்தில் இருந்து வெளியேறினர். இருந்த போதும் இலங்கையர் என்று பதிவு செய்ய பொலிசார் மறுத்ததுடன் நீங்கள் கூறுவதுபோல நாம் இங்கு எழுத முடியாது என்றும் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சமவுரிமை இயக்கதினர் வெளியேறும்போது, கழிவு எண்ணெய் வீசியவர்கள் மறுபுறத்தில் உட்சென்றதையும் அவதானித்துள்ளனர்.

மகிந்த அரசே மக்களின் மலசலகூடக் கழிவாகியுள்ளது. இந்த லட்சணத்தில் "அரசகழிவுகளே கழிவு அரசிற்கும",  மேலான மக்களுக்கு…………????