25
Tue, Jun

அகிலன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times



துன்ப-துயரங்களுக்கும் மருந்து போடுகின்ற மாநாடு தான் டெசோ மாநாடு'!:கருணாநிதி!


பூமிக்கு தன்னைத்தானே சுற்ற 24-மணி நேரம் தேவைப்படுகின்றது. ஆனால் கருணாநதியின் அரசியல் (சுத்துமாத்து) சுழற்சிக்கு ஒருமணி நேரம் போதுமானது. இதற்குள் பல சுழற்சிகள் கொண்டு  ஏகப்பட்ட முடிவுடனான பல அரசியல் கொப்புகளுக்கு தாவிவிடுவார்.

 

டெசா மாநாட்டின் நோக்கம், தனித்தமிழ் ஈழம்! இதற்கு குறைந்த எதுவுமில்லையென்றிட்ட முழக்கத்தில் இருந்தவருக்கு, மத்தியினர் கொடுத்த் வெருட்டல் செய்தியுடன் வந்த சிதம்பரத்தின் சந்திப்பால் சிதம்பர சக்கரத்தைப் பார்த்த பேய் போல் ஆனார்!

உடனே தன்னை சுதாகரித்துக்கொண்டு அடுத்தொரு கொப்புக்கு தாவி, 'இலங்கைத் தமிழர்களின் காயங்களுக்கும், அவர்கள் வாழ்வில் ஏற்பட்ட துன்ப-துயரங்களுக்கும் மருந்து போடுகின்ற மாநாடு தான் டெசோ மாநாடு'  என அறிவித்து இப்போ பரியாரியார் வேலையில் ஈடுபட்டுள்ளார்.

'தமிழ்ஈழக்' கொப்பில் நின்று மறு கொப்புத் தாவியதின் மூலம், ஈழ நோக்கில்லாப் பலரை இம்மாநாடு நோக்கி வரவழைக்கின்றார் கலைஞர்! இப்போ 'தமிழஈழக் கொப்பில்' இல்லாத படியால் கூட்டமைப்பு உட்பட பல அரசியல் கட்சிகள் செல்லும் நோக்கில் உள்ளன.

'தமிழ் ஈழக் கொப்பில்லை எனும் பிளஸ் பொயின்ற்' கொண்டு மாநாட்டிற்கு போபவர்கள், மகிந்த அரசுக்கு எதிராக, அதன் அடக்குமுறைக்கு எதிராகப் பேசலாம். தமிழ் மக்களின் துன்ப துயரங்களை கருணாநிதி சோகம் கலந்த அடுக்கு மொழியில் அடுக்கலாம். ஆனால் தமிழ் மக்களுக்கு எதிரான கருணாநிதியின் கறைபடிந்த வரலாற்றுத் துரோகத்தை இம்மாநாடு நிவர்த்தி செய்யாது. சரிந்துள்ள தன் குடும்ப அரசியலை, கொடுங்கொரிய கொள்ளையடி வழக்குகளால் ஏற்பட்ட அசிங்கங்களை மறைத்து,  வாக்கு வங்கியை தூக்கி நிமிர்த்தி அடுத்த அரியாசனக் கட்டிலேறுவதற்கு, தமிழ்மக்களின் துன்ப-துயர முலாம் பூசி நடைபெறவுள்ளதே டெசா மாநாடு!.

எப்படியிருந்தாலும் நடந்ததை மறப்போம், மன்னிப்போம்!,  நடப்பது "தமிழ்ஈழப் புறோக்கிராம்" (புலிக்கொடி தூக்காத) இல்லாத, மகிந்த அரசிற்கு எதிராக, தமிழ் மக்கள் பிரச்சினைகள் பற்றி பேசி அரசை அம்பலப்படுத்தும் மாநாடு அல்லவா?  என  (மாநாட்டிற்கு செல்லவுள்ள) அலசும் அரசியல் ஆய்வாளர்களும் உளர்!   இம்முரண் நகை ஆய்விற்கு வாதிடும் தமிழ்த்தேசிய ஆய்வாளர்களும் உளர்!