28
Fri, Jun

அகிலன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதியான நிமலரூபனின் படுகொலை மற்றும் வடக்கில் நில ஆக்கிரமிப்பு ஆகியவற்றைக் கண்டித்து நெல்லியடியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கவனயீர்ப்புப் போராட்டம் பொலிஸாரின் பாதுகாப்புடன் இன்று 11 மணியளவில் நடைபெற்றது.

 


இதன் போது இராணுவப் புலனாய்வாளர்கள் ஆர்ப்பாட்டத்தை குழப்ப பல்வேறு முயற்சிகள் எடுத்த போதும் அது வெற்றியளிக்கவில்லை திட்டமிட்டபடி போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் நில ஆக்கிரமிப்பை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அரசியல் கைதிகளை மனிதர்களாக நடத்துவதோடு அவர்களை விரைவாக விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.
போராட்டத்தில் புதிய- ஜனநாயக மாக்சிச- லெனினிசக் கட்சி, த.தே.கூ,  தமிழ் தேசிய முன்னணி, ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தமது தமது எதிர்பை வெளிப்படுத்தினர்