30
Sun, Jun

அகிலன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times



இக்கோமாளியை நம்பும் ஏமாளிகளும் உண்டு! தனி ஈழ கோரிக்கை இப்போதைக்கு இல்லை; தனி ஈழத்துக்காகப் போராட்டமோ கிளர்ச்சிகளோ நடத்தும் எண்ணம் இப்போதைக்கு இல்லையென தனிப்பெரும் தமிழர் தலைவர் சபதம் எடுத்துள்ளார்.


இத்தால் என் உயிரினும் மேலானவர்களுக்கு அறியத்தருவது யாதெனில், இன்றைய  என் 'மூட்டில்'.., இதுதான் இன்றைய என் அறிவிப்பு! 'இலங்கைத் தமிழர்களைப் பாதுகாப்பது அவர்களின் பசியைப் போக்குவது வாழ்வாதாரங்களை வளப்படுத்துவது போரினால் ஏற்பட்ட இன்னல்களைக் களைவது ஆகியவைதான் இப்போதைய அவசரத் தேவை.' அதற்காகவே 'ஈழத் தமிழர் உரிமை பாதுகாப்பு  என்ற தலைப்பில் மாநாடு.

தனி ஈழம் கிடைத்தால் யாரும் வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள். இப்போதுள்ள நிலைமையைப் பார்க்க வேண்டும். தனி ஈழம்தான் குறிக்கோள் என்று சொல்ல தயங்கவில்லை. தனி ஈழம் ஒரு காலத்தில் அமையலாம். டெசோ மாநாட்டுக்கு மறுநாளே தனி ஈழம் அமையும் என நான் எதிர்பார்க்கவில்லை. இதுதான் இன்றைய என் 'மூட் சிந்தனைக்கு' எட்டிய அறிவிப்புக்கள் மிகுதி நாட்டு நிலமைக்கேற்ப தொடர்வேன்.


விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்திய அரசு நீடித்துள்ளது. புலி ஆதரவு இயக்கங்கள் மூலமாக இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் ஆதரவு திரட்ட புலிகள் முயல்வதாகவும் தமிழீழ கோரிக்கை இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரானது எனவும் அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது. இச்செய்தியை சிதம்பரம் நேரடியாகவே போய் கருணாநிதிக்கு  சொல்லியுள்ளார். இதன்பின்பே கருணாநிதி தனக்கு இப்போ 'தனிஈழ மூட்' இல்லை. வரும்போது பாhப்போம் என்கின்றார்.


இதில் இக்கோமாளியை நம்பி இலவு காத்த தமிழ்த்தேசியக் ஏமாளிக் கிளிகளின் 'பயங்கரக் கோபங்களை' என்னே என்பது. மக்கள்மேல், மக்கள் வெகுஜனப் போராட்டங்கள் மேல் நம்பிக்கையற்ற, மரம்பழுத்தால் வவ்வால் வருமென காத்திருக்கும் இக்'காத்திருப்பாளர்களின் சோமபோறிக் கோபம்' நியாயமானதுதான்!