30
Sun, Jun

அகிலன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times


வன்னி யுத்தத்தின் போது இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட தமிழ் மக்களின் கிராமங்களுக்கு இராணுவத்தினர் கொச்சைத்தமிழில் பெயர் சூட்டியுள்ளனர். விடத்தல் தீவு என்பதற்குப் பதிலாக'வெடிதலதிவு' எனவும், அடம்பன் என்பதற்கு பதிலாக 'அடம்பன' எனவும், ஆண்டாங்குளம் அன்பதற்கு பதிலாக 'ஆண்டாங்குளமய' எனவும், உயிலங்குளம் என்பதற்கு பதிலாக 'உயிழங்குளம' எனவும் தமிழ்க் கொலையுடன் பெயர் சூட்டப்பட்டுப் பெயர்ப் பலகைகளும் இடப்பட்டுள்ளன. தமிழர் தாயகத்தில் கொல்லப்படுவது தமிழ் மக்கள் மட்டுமல்ல, தமிழ் மொழியும்தான். அத்துடன் இனச் சுத்திகரிப்பு நோக்கிலான நிலக்கொள்ளையும்தான்! இதில் சங்கமித்திரைக்காகவும் நிலக்கொள்ளையடிப்பு!
சங்கமித்திரைக்கான நிலக் கொள்ளையடிப்பு!

 


தமிழர் தாயகத்தில் அரசின் நிலக் கொள்ளையடிப்பானது, இராணுவத் தேவைக்காக, பாதுகாப்பு தேவைக்காக என்ற காரணங்களை சொல்லி வந்த நிலை போய், தற்போது ராணுவ வழிபாட்டிற்காகவே புத்தவிகாரைகள் அமைப்பதாக சொல்கின்றது. இந்நிலை கொண்டுதான், சங்கமித்திரை இந்தியாவில இருந்;து  மாதகலில்  வந்து இறங்கியகாரணங்கள்; சொல்லி,  நிலக்கொள்ளையடிப்பை செய்யவுள்ளது.


யாழ்ப்பாணத்தில் மேற்கு மாதகல் பகுதியில் உள்ள நிலத்தை சங்கமித்திரை வந்திறங்கியமைக்காக அப்பகுதியை புனிதநகராக்கப் போவதாக அறிவிக்கினறது! தற்போது இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பும் முற்று முழதான ஆக்கிரமிப்பும் கொண்ட கோட்டையாக இக் கிராமம் மாற்றப்பட்டிருக்கிறது. புதிய கடற்படைமுகாம் ஒன்றை கடற்படையினர் அமைக்கும் நோக்கில் உள்ளனர். குறிப்பிட்ட பகுதியினைச் சேர்ந்த பெருமபாலான மக்கள் இப்போதும் தங்கள் வாழ்விடங்களுக்குத் திரும்பமுடியாமல் முகாம்களிலும் உறவினர்களின் வீடுகளிலும்இகாடுகளிலும் வாழ்ந்து வருகின்றார்கள்
வாழ்ந்த மண்ணுக்கு பல்லாண்டு காலமாக திரும்பாத சோகத்தை உடைய ஈழ அகதி மக்களில் மாதகல் மக்களின் துயர் நிறைந்த வாழ்க்கையின் பின்னணயில் பௌத்த மதவாத அபகரிப்பும் சிங்களப் பேரினவாத இராணுவ அரசியலும் இருக்கிறது. சங்கமித்திரை இலங்கை வந்தது, இந்நாட்டை பௌத்த சிங்கள நாடாக்குவதற்காக அல்ல! இந்தியாவில் அசோகச் சக்கரவாத்தியால் செய்யப்பட்ட (மகிந்தா போன்று) மாபெரும் மனிதப் படுகொலைகளுக்கு பிராயச்சித்தம் செய்வதற்கே! இன்று அவர் வந்திறங்கிய மாதகல், (அசோகப்) படுகொலையாளர்களால் 'சங்கமித்திரை' பெயர் சொல்லி பேரினவாதப் பிரதேசம் ஆக்கப்படுகின்றது.