30
Sun, Jun

அகிலன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

உடலை பொறுப்பெடுக்க யாருமே இல்லையாம்!

எனக்கு தெரிந்த வகையில் மரணமடைந்துள்ள வவுனியா கைதியின் உடலை பொறுப்பேற்க யாரும் இல்லை என்பதுடன் கைதியின் பிரேத பரிசோதனைகள் இன்னும் முழுமையடையவில்லை. அதனால் மரணம் தொடர்பில் சரியான காரணத்தை தற்போது வெளியிட முடியாது என்று சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்தார்.

வவுனியா சிறைச்சாலையில் மரணமடைந்த தமிழ் கைதி தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.யான சம்பந்தன் விடுத்த விசேட கூற்றுக்கே அமைச்சின் சார்பில் பதிலளிக்கும் போதே  இந்த மந்(தி)ரி இப்படிச் சொல்லுது.

 

"மகனின் இறுதிக்கிரியையை வீட்டில் செய்வதற்காவது சடலத்தை
பெற்றுத்தாருங்கள்!" நிமலரூபனின் தாயார் கண்ணீர் மல்க கோரிக்கை!

இத்தாயின் இரங்கல்கொண்ட இக்கண்ணீர் வேண்டுகோள் ஊர்-உலகறிந்த பகிரங்கச் செய்தி!

சிறைச்சாலைக்கு பொறுப்பானதிற்கான அமைச்சர் எண்டவருக்கு, சிறைகளில் நடப்பது என்னவென்றே தெரியாது! பழைய அரசர்-ஆட்சிக் காலங்களில் மன்னன் "மாதம் மும்மாரி பொழிந்ததா" எனக் மந்திரியைக் கேட்பானாம். அதுபோல்தான் இந்த மகிந்த மன்னனும் அவரின் அசலான இனவெறி கொண்ட கோமளி மந்(தி)ரிகளும்!

"கைதியொருவர் இறந்துள்ளார் என்பது உண்மைதான். பிரேத பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. அது இன்னமும் முழுமையடையவில்லை. முழுமையடைந்ததும் முழுமை தெரியும்" என சொல்லும் பாங்கு, ஏதோ செத்த பறவைகள் விலங்குகளின் விசாரணைகளுக்கு சொல்லும் "முஸ்பாத்திக் காரணிகள்" போல்த்தான் உள்ளது.

தமிழ்மக்கள் அழிக்fப்பட வேண்டியவர்கள் என்பதை அரசின் இனவாத-இனவெறி கொண்ட
இந்நடவடிக்கைகள் சுட்டி நிற்கின்றன!