26
Wed, Jun

இரயாகரன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னான தேர்தல் அரசியலும், அண்மைய மாணவர் போராட்டமும் ஒரு உண்மையை வெளிப்படையாக்கி இருக்கின்றது. மக்கள் மீதான உண்மையான அக்கறையும் அது சார்ந்த அரசியலும், மாணவர்களின் கோரிக்கைகளிலும் அதற்கான அவர்களின் நடைமுறைப் போராட்டங்களில் இருப்பதை காணமுடியும்.

மைத்திரியை வெல்ல வைக்கும் தேர்தல் அரசியல், மக்களுக்கு ஜனநாயகத்தையோ, அவர்களின் உரிமைகளையோ வழங்கப்போவதில்லை. இருக்கும் உரி;மைகளை இல்லாதாக்கி மக்களை ஒடுக்கும் என்பதையே, இந்த மாதிரியான போராட்டங்களை யார் முன்னெடுக்கின்றனர் என்பது இன்று எடுத்துக் காட்டுகின்றது.

அண்மையில் காட்டுமிராண்டித் தனமாகத் தாக்கப்பட்ட மாணவர்களால் முன்வைத்த கோரிக்கை, இலங்கை அனைத்து மாணவர்களின் எதிர்காலம் பற்றியது. இதற்காக இன்று யாரெல்லாம் போராடுகின்றார்களோ, அவர்கள் தான், மக்களின் அனைத்து உரி;மைக்காவும் உண்மையாக உழைக்கின்றவர்கள்.

கல்விக்காக ஒதுக்கும் நிதியை குறைத்து வரும் அரசாங்கங்கள், இலவசக் கவ்வியை படிப்படியாக இல்லாதாக்கின்றது. படிப்படியாக மாணவர்களிடம் கட்டணம் அறவிடும் இன்றைய கல்வி முறை மூலம், கல்வியியை தனியார்மாயமாக்கி வருகின்றது.

தனியார் கல்வியை மக்கள் நடும் வண்ணம், அரச பாடசாலைகளில் கல்வியின் தரத்தை இல்லாதாக்கின்றது. இதன் மூலம் தனியார் கல்வியை தரமானதாக காட்ட முனைகின்றது. அரச கல்வி முறை கொண்டுள்ள தாய் மொழிக் கல்விக்கு வேலையி;ன்மையை உருவாக்கி, ஆங்கிலக் கல்வியை தனியார் கல்விக் கூடங்களில் பெற்று வேலை பெறுமாறு சமூகத்தை நிற்பந்திக்கின்றது. சொந்த நாட்டில் வேலையின்மை மறுத்தும், வெளிநாடுகளில் வேலை பெற ஆங்கிலக் கல்வி தேவை என்ற சூழலை உருவாக்கி, தனியார் கல்வியை புகுத்தி வருகின்றது.

இன்று பல்கலைக்கழகத்திற்கு தகுதி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும், பல்கலைக்கழக கல்வி மறுக்கப்படுகின்றது. இன்று பணம் உள்ளவனுக்கே கல்வி என்பதன் மூலம், தனியார் பல்கலைக்ழகங்கள் மூலம், எழை மக்களுக்கு கல்வி இல்லாதாக்கப்படுகின்றது.

இப்படி முதலாளிகள் தனியார் பல்கலைக்கழங்கள் மூலம் கொழுக்கும் வண்ணம் கல்வி கொள்கை நாட்டில் முன்னெடுக்கப்படுகின்றது. இது நவதாரக் கொள்கைதான், சர்வதேச நிதிமூலதனத்தின் கொள்கையாகும்;. இதற்கு எதிராக இன்று மாணவர்கள் போராடுகின்றனர். இதற்காக எந்த தேர்தல் அரசியல் கட்சிகளும் போராடுவது கிடையாது. இதை ஒடுக்குவதன் மூலம் கல்வியை வியாபாரம் செய்வது, பணமற்றவனுக்கு கல்வியை மறுப்பதுமே, தேர்தல் கட்சிகளின் இன்றைய கொள்கையாகும்.

அரசின் இந்த ஒடுக்குமுறையை காட்டி வாக்கு பெறமுனையும் எதிர்கட்சிகளும், அவர்களின் அறிவுத்துறை சார்ந்த எடுபிடிகளும் முனைகின்றனரே ஒழிய, மாணவர்களின் ஜனநாயகத்தையும் அவர்களின் கல்வி உரிமைகளையும் அங்கீகரிப்பதில்லை. அதை முன்வைத்து வாக்கு கேட்பதும் கிடையாது.

இன்று அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் இடதுசாரிய முன்னனியையும், இதில் பெரும்பான்மையினர் முன்னிலை சோசலிசக் கட்சியினது கொள்கையையும் எற்றுக்கொண்டவர்கள். இன்று இவர்கள் தான் இந்த நாட்டில் மக்களை சார்ந்து போராடுவது, இன்றைய அரசியல் எதார்த்தமாக இருக்கின்றது.

இந்த மாணவர்கள் தான் இன்று இனவாத்துக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்கின்றவராகவும் இருக்கின்றனர். யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் யாழ்ப்பாணத்தில் தாக்கப்பட்ட போது, அதற்காக தெற்கில் போராடியவர்கள். அண்மையில் மாணவர்கள் மத்தியில் இனவாதத்தை துண்டும் வண்ணம் தமிழ் மாணவர்களைத் தாக்கியும், சட்டவிரோதமாக கைது செய்த போது, அதற்கு எதிராக போராட்டிய மாணவர்களும் இவர்கள் தான்.

இன்று போராடும் இந்த அரசியலும், அதை முன்னெடுக்கும் இந்த போராட்ட பரம்பரையும் தான், நாளை இனவாதத்தை இந்த மண்ணில் இருந்து களைந்து அரசை தூக்கி எறிந்து மக்கள் ஆட்சியை நிறுவும் உண்மையான சக்திகள்.

இதற்கு ஆதாரவாக நிற்குமாறு, அணிதிரளுமாறு இந்த போராட்டங்களின் நடைமுறை கோருகின்றது.