25
Tue, Jun

சிறி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அழுவதும் விழுவதும்

அழித்தவர் காலடி மீளத் தொழுவதும்

வேண்டாம் நம் உறவுகாள்

போருக்கு கொடுந்துணை

வியூகம் வகுத்தளி(ழி)த்தவர் தானிங்கு

முகம்போர்த்தி இனியவராமென

வருகிறார் சொரிகிறார் கண்ணீர்.

இந்திய இராணுவம் செய்ததென்னவாம் . தெருவெலாம் செந்நீர்

சிந்தியே அந்திமமானவர் வெறும் வஸ்துவா?

தமிழது நந்திக்கடலிலும் சிங்களம் மாவலி நதியிலும்

அழித்தவர் என்ன தனியராய் இலங்கையர் கோன்களா?

உழைப்பவர் செழிப்பையும் உள்ளக வளத்தையும்

உலகெலாம் உறுஞ்சிக் கொழுத்தவர்

சிங்களன் தமிழன் என்றே பிரிப்பரா?

எம்மிழப்பினை மதிப்பரா இல்லை

எம்முரிமைகள் செருப்பென மிதிப்பரா?

கொள்ளையிடுபவர் தம் கோட்டைகள் கட்டவே

எம் குடிசைகள் பிடுங்கி இனவெறித் தீயினில் பொசுக்குவார்.

போரே குற்றம் போருக்குள் வேறென்ன குற்றம்

மகிந்தவின் முதுகும் அவர்களே

வலியும் அவர்களே

பிரித்தானியாவின் எழுத்தாணிகள்

மகிந்தவைக் கால்களில் விழுத்த மட்டுமே

போரினில் உயிர்களை பொசுக்கியபோது

சரணடையுங்கள் என்ற சதிவழி காட்டி

ஊரையே அழியென போர் உத்திகள் வகுத்தவர்

யாரிடம் இப்போ கால்களில் விழுகிறோம்?