25
Tue, Jun

கங்கா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

போர்சிறைகொண்ட இளையோரை
பூசாவுக்குள் வதைதொடரத் தள்ளுவதை எவன்கேட்பான்
தமிழ்த்தேசியத்தின் உறுதிக்கு தலைமையென
வெறு வாயுறுதி வீரமிகு உரப்புகளாய்
பாராளு மன்றக் கனவுகட்குள் மிதக்கும் நேரமிது..........

 

‘வாக்கு இரக்கும் கானங்கள்
வழி நெடுகத் தோரணங்கள் ஒரு புறம்’
கார்ல்மார்க்சின் தத்துவத்தில் கரைபுரண்ட வித்தகர்கள்
புதுவிதமாய்  நாதழுத்து நரைவிழும் காலமாய்
வம்பிழுத்துப் புரட்சிகர தேடல் புரட்டிமாய்க்கும்
சக்தி களொடு எப்படி வீழலாம்...

‘நித்தம் பிடிசோற்றுக் அந்தரிக்கும் ஏழைக்கு
வாக்கிடப்போக பேருந்து --நலன் புரிக்கிராமத்தில்’
கற்ரவர்கள்-- கரைத்துக்குடித்து தத்துவத்தில்
சுத்திப் பொத்திய கோட்டைக்குள்
நெற்ரிக்கண்வீச்செறிய நெஞ்சு வெடிக்கிறது
தோழமை மீழுக .......

‘நாடுகடந்தௌ விரியும் மதிஉரை வித்தகர்கள்
முள்ளிவாய்க்கால் --முடிவுரை மீள்நிமிர்த்தி
எஞ்சிய ஊன்றுகோலும் எம் இனத்துக்கண்ணீரும்
பொன்னாக்கி-புகலிடத்தே வழம்கொளிப்பர்;’
போரிடுக— மூலதனம் தந்த ஏழையின் தோழரை
கல்லறையில் கரி பூசப் போரிடுக.

சேறடிப்பில் அணையாப் பேரொளி
செங்கொடியாய்-- உழைப்பவன் கரத்தில்
ஊடுருவிக்கிடக்கிறது --ஏழையின் உதிரத்தில்
மெல்லென ஊடறுத்து மேவியெழும் மக்கள் திரள்
என்மண்ணில் மட்டுமென்ன
ஏய்ப்பவரை மிதித்தெழுந்து ஆர்ப்பரிக்காதிருக்குமோ....