28
Fri, Jun

கங்கா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நெல்மணியில் பனித்துளிகள்
கதிரவன் கதிர் வீச்சில் மினுமினுக்கும்
பால்சுமந்து பசுக்கூட்டம்
பட்டிப் படலையில் முட்டிநிற்கும்
கிணற்றடிவாழை பொத்திதள்ளி
சுற்றிநின்ற குட்டிகள் குருத்துவி;ட்டு சிலிர்க்கும்
முற்ரத்து மாமரத்துப் பிஞ்சுகள்
முற்ரிக் கனிந்து மஞ்சல் தெளித்திருக்கும்
உடலுழைப்பில் அயர்ந்து தூங்கியவர்
எழுந்து பார்க்க வலிபறந்து ஒளிதெரியும்

 

 

குண்டுகாவி இரைச்சல் வந்ததிசை நோக்கமுதல்
எங்கெங்கோ வெடித்துச்சிதறி
எரியுண்டு புகைகிளம்பும்
குஞ்சுகளை அணைத்தபடி குழிக்குள் நாட்கழியும்
போரிடப்பறித்த பிள்ளையெண்ணி அடிவயிறு எரியும்

அருகருகே வெடிகேட்கும்
அலறியழும்  கூக்குரலாய் இடம்பெயர்வு
உள்ளவிட்டு அடிப்பதாய் முள்ளிவாய்க்கால் வரை
எல்லாம் முடிந்தது
கந்தகவாடையில் கருகித்துளிர்த்த தளிர்களின்
மொட்டுகள் மலரமுதல் பிய்த்தெடுத்து
குத்திக் கிழித்து குருதியில் களிகொண்ட
மூர்க்க கொம்புகளில் சரமாய் தேர்தலிற்கு வருகிறது

 

அவயவங்கள் இழந்தவலி-சிதறிக் காயம்
ஆற்ரிட மருந்தற்று வேதனையில்;
கிடந்துளன்று மண் அள்ளிப்பூசி
குற்றுயிராய் தவித்தவரை விட்டகலா உறவுகள்
மகிந்தவின்
மனிதாபிமான மீட்பு   இரையாக்கித்தின்றது

கரைதட்ட கிறின் ஓசன்
தரம்பிரித்து மீட்பாகி சிதறிய குடும்பங்கள்
மனம்நொருங்கி நிதம் பதைக்கும் நியதியாய்
வருகிறது நாடாழும் தேர்தல்

நிமிர்ந்தெழு புலத்தோனே
பனிவிழும் தேசத்து பஞ்சணையில் புரண்டெழுந்து
எஞ்சிய உயிர்களின்
இருப்புன் கையில் இன்னமுமா தேசம் --வாக்கிடு
வட்டுக்கோட்டை தமிழீழம் நாடுகடந்தெலாம்
கோடை விடுமுறைக்கு குதூகலிக்கப் போய்வா.....