Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

புலன்பெயர் புலிகளின் வெள்வெருட்டும், கூட்டமைப்பின் தனித்துவமும்!

செய்தியும் செய்திக் கண்ணோட்டமும்-28-02-10

அரசியலிலும், பொதுவாகவும், சிலரது நடவடிக்கைகள் சமூகத்தில் அந்நியப்பட்டவர்களைக் கூட சமூகத்தின் உந்துசக்தியாக்கிவிடும். மக்கள் விரோதியான பொன்சேகாவை மகிந்த அரசு “உலக நாயகன்” ஆக்கியதுபோல், புலம்பெயர் எச்சசொச்ச புலிகளினதும், அதன் புலத்து ஏவல்களதும் நடவடிக்கைகளால், கூட்டமைப்பும், சம்பந்தனும் தமிழ்தேசியத்தின் அடையாளமாக முத்திரை குத்தப்பட்டுள்ளனர்.

கூட்டமைப்பு எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்காக செய்ததொரு நல்ல காரியம் 2004-ல் புலிகளால் நியமிக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு, இத்தேர்தலில் இடம் கொடுக்காதது. தமிழ்மக்கள் போல், கூட்டமைப்பும், புலிகளிடம் பலவற்றை பட்டறிந்துள்ளனரோ? என எண்ணவைக்கின்றது! பட்டறிவோ என்னவோ, கூட்டமைப்பும்- சம்பந்தனும் பலவற்றை பகிர்கின்றனர்.

 

“உணர்ச்சிவசப்பட்ட கோசங்கள், பிரச்சினைகளை தீர்க்கவில்லை.-தீர்க்காது. நாம் பிரிவினை கேட்கவில்லை-கேட்கவும் முடியாது. தமிழ்மக்களுக்கு தேவை போதிய சுயாட்சியே! இதுவே தேசிய இனப்பிரச்சினை சம்பந்தமான எம் கொள்கை-கோட்பாடு, இதுவே எம் சுயமான எதிர்கால நிகழ்ச்சிநிரல்!
கடந்த தேர்தலில் மகிந்த ராஜபக்சாவை நிராகரிக்கச் சொன்னோம். தமிழ்-முஸலீம் ;மக்கள் இவ்வளவு இடர்பாடுகளுக்கு இடையிலும் தம் கோபக்கனல் கொண்டு நிராகரித்தனர். அவர்களின் தீர்ப்பிற்கு இணங்கவே இயங்குகின்றோம். மாற்றங்களைச் செய்கின்றோம்; என்கின்றார்

மாற்றத்திற்குள்ளான, புலி வேட்பாளர்களுக்கு இடமில்லையென்ற முடிவில் கூட்டமைப்பின் எல்லோரும் ஆமென்றே இருந்தனர். காரணம் அது சரியென்றபடியினால். ஆனால் இது புலம்பெயர்வின் புலி எச்சசொச்சங்களுக்கு பிடிக்கவில்லை. அதுகளுக்கு நாட்டு நடப்புத் தெரியாது. பிரபாகரனை நந்திக்கரை நோக்கி செல்லவைத்ததில், மண்டை பிளக்க வைத்ததில், இதுகளின் பங்கும் காத்திரமானதே! இப்பேர்ப்பட்ட மண்டையற்றதுகளின் கோரிக்கைகள் புலம் நோக்கி ஏவப்பட்டது. இவ் ஏவல்களின் செயற்பாடு, புலிகளின் கஜேந்திரன்-பத்மினிக்கு சீற் கேட்டதில், அது நிராகரிப்பாகியதில், காங்கிரஸ் பொன்னம்பலத்திற்கு ஊடாக தேர்தலில் “புலன்பெயர்ந்த (நாடுகடந்த) தமிழ்ஈழம்” ஆகியுள்ளது!

இப்போ காங்கிரஸின் பொன்னம்பலம் “தமிழ்ஈழ தனிப்பெரும் தலைவராகியுள்ளார்” இலங்கை அரசியலில் தாத்தாவும் தந்தையும் “;எத்திப்பிழைக்கும் ஏதிலிகளாக” எதைச் செய்தார்களோ, அவர்கள் வாரிசும் அதைத்தானே செய்யும். பாகற்கொட்டை விதைத்தால் சுரைக்கொடியா முளைக்கும்?
கூட்டமைப்பும் இந்தியாவில் (தமிழ்நாட்டில் என்றாலும் பரவாயில்லை) டெல்லியில் காரியாலயத் திறப்பு வேலைகளைச் செய்துகொண்டு, தங்கள் கொள்கை கோட்பாடு சுயம் என்றால், இந்த அப்புக்காத்து அரசியல்–மொட்டந் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப் போடுற மாதிரியல்லோ இருக்கு!
என்னவோ தமிழ்மக்கள் உங்களுக்கு ஏப்ரலில் என்ன செயகின்றார்கள் என்பதையும், யாரை (“ஏப்ரல் பூல்”) முட்டாள்கள் ஆக்குகின்றார்கள  என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்!

புரட்சியாளர்கள் கடந்த காலங்களில் எவ்வாறு முற்போக்காக, சிறப்பாக பாராளுமன்றத்தில் செயற்பட முடியுமென்பதை நிருபித்துக் காட்டியுள்ளார்கள்.  கனடாவில் நடைபெற்ற மே 18-ன் கூட்டத்தில் ரகுமான் ஜான்

ஜான் தலைவர் சொல்லும் சிறப்பாக செயற்படுதல் என்பது என்னவோ? அரிவாள் சம்மட்டி பொறிக்கப்பட்ட சிகப்புச் சட்டையுடனும், மார்க்சிசப் புத்தகங்களுடனும் பாராளுமன்றம் சென்று, கதிரைமேல் ஏறிநின்று (அதை மேடையாக்கி) உரக்கப் பேசுவதோ? இதுதான் என்றால், இதை பல “பாராளுமன்றப் புரட்சியாளர்கள்” இலங்கைப் பாராளுமன்றத்தில் எப்பவோ செய்துவிட்டார்கள்!

முதலில் ஏனைய நாடுகளில் நடந்தவைகளை கொப்பி அடிக்காதீர்கள். அது அன்றைய வரலாற்று சூழ்நிலை! எமது நாட்டின் சமகால ஸ்தூல நிலையில் இடதுசாரிகள் நிலை என்ன? இவர்களின் கூட்டங்களுக்கு 500 பேர் போவதே அரிதாகிவிட்ட நிலையில், இவர்கள் மக்கள் மத்தியில் எத்தகைய நிலையுpல் உள்ளார்கள். இது எதைத்தான் காட்டுகின்றது.? இவர்களின் இவ் அந்நியப்பட்ட நிலையில், ஓர் மாகாணசபை அங்கத்தவராக படாதபாடு படுகின்றார்கள். தாங்கள் ஆதரித்த முன்னணி ஜனாதிபதித் தேர்தலில், பெற்ற வாக்குகள் எவ்வளவோ? இதில் தாங்கள் பெற்றுக்கொடுத்த வாக்குகள் எவ்வளவோ? முதலில்  பாராளுமன்றத்தில் ஓர் ஆசனம் பெறுங்கள். பின்பு மேடையாக்குவதுபற்றி யோசிக்கலாம்.

மே 18-ற்கு முன்பாக (முழு உலகமே வெறுத்து ஒதுக்கிய), பாசிசப் புலிகளுக்கு முண்டு கொடுத்த நீங்களும், உங்கள் தமிழீழக் கட்சியும், ஓர் கறைபடிந்த அரசியல் வரலாற்றுத் துரோகத்தையே செய்துவிட்டு, எவ்வித விமர்சன ஆதங்கமும் இன்றி, மே 18-ற்கு பின் “புதுமுகமூடியில்” நாட்டுக்கு நாடு நாடகமாடுகின்றீர்கள். உங்களுக்கு தமிழ்த் தலைமையை, டக்கிளஸ்-கருணா-பிள்ளையானை விமர்சிக்க எத்தகுதியுண்டு. ஏன் மகிந்தாவை கூட விமர்சிக்க இலாயக்கற்றவர்கள் தான் நீங்களும் உங்கள் மே 18-கூட்டத்தினரும்!

இப்பேர்ப்பட்ட உங்களுக்கு எல்லாம் ஏன் இந்த உலகப்புரட்சி, பாராளுமன்றம்-அதில் சிறப்பாகச் செயற்படுதல், மூலஉபாயம் தந்திரோபாயம் போன்ற உயர் அரசியல் எல்லாம்! முதலில் ஓர் நல்ல அரசியல் மனிதர்கள் ஆகுங்கள். அதனபின் மற்றவை தானாக வரும்!

தேர்தல் திருவிழாவிற்கான சுவரொட்டிகள் விளம்பரப் பலகைகள் அகற்ற 220 இலட்சம் தேவையாம்! இதை போலீஸ் திணைக்களம் – தேர்தல் திணைக்களத்திடம் கேட்டுள்ளது!

உதென்ன உதைவிட இன்னொன்று கடந்த பாராளுமன்றத்ததில் அமைச்சு அந்தஸ்தற்ற அமைச்சர்கள் 39 பேர், அமைச்சரவை அந்தஸ்து உள்ள அமைச்சர்கள் 51-பேர் பிரதி அமைச்சர்கள் 19-பேர். அத்துடன் 196-பேர் கொண்ட பாராளுமன்றத்திற்கு 7265-பேர் போட்டியிடுகின்றனர்! வடகிழக்கின் 31-ஆசனங்களுக்கு 1667 பேர் போட்டியிடுகின்றனர். யாழ்ப்பாண மாவட்டத்தில் மாத்திரம் 324-பேர்; போட்டியிடுகின்றனர்;!

இவையெல்லாம் இலங்கையின்–மக்களுக்கான மக்களின் பாராளுமன்ற(உலக)சாதனையாக பதியலாம்தானே

பாரிஸ் ஈழநாட்டிற்கும் புலிப்புத்திதான்!

இராணுவப் புரட்சி என்பது சர்வசாதாரணமானது! இதை இலங்கையில் பொன்சேகா வலு “ஈசியாக” செய்திருக்கலாமாம். இதைச் செய்யாது சிறையில் வாடுகின்றாராம், இப்படி பாரிஸ் ஈழநாடு இராணுவ ஆய்வு செய்கின்றது.

“தெற்காசிய நாடுகளில் இராணுவப் புரட்சி என்பது சர்வசாதாரண காட்சிகளாகிப் போய்விட்ட நிலையில், அதற்கான நல்ல தருணத்தை தவறவிட்ட பொன்சேகா சிறையிலிருந்து வெளியே வரும் சட்டரீதியான முயற்சியிலும் தோற்றுப் போயுள்ளார்.”

“பாகிஸ்தான் இராணுவத்தளபதி முஸாரப் போலல்லாதுவிட்டாலும், யுத்தவெறி மயக்கத்தில் இருந்த மகிந்த சகோதரர்களை சுற்றி வளைத்து சிறைப்படுத்த தயங்கியதால், தேர்தல் ஒன்றின் மூலம் ஆட்சியை கைப்பற்றித் தன்னை அவமானப்படுத்திய ராஜபக்ஸ சகோதரர்களுக்கும் பாடம் படிப்பிக்க முடியாத இலங்கை ராணுவத் தளபதி தற்போது சிறைக்கம்பிகளுக்கு பின்னால் கடந்த காலங்களை கணக்கிட்டு வருகின்றார்”

இக்கட்டுரை ஆசிரியர் எந்த இராணுவக் கல்லூரியில் பட்டம் பெற்றவரோ? அரசு இயந்திரம் பற்றிய கணிப்பு அவ்வளவு துல்லியம்! இராணுவ ஆட்சியை நடாத்த திட்டமிட்டுள்ளவர்;ள், பாரிஸ்- லாச்சப்பலில் இவரிடம் இராணுவ வகுப்புகள் எடுக்கலாம்!

இவருக்கு எதிலும் புலிப்புத்திதான். தன்னை அவமானப்படுத்திய மகிந்த சகோதரர்களை சுற்றி வளைத்து சிறைப்படுத்தி பாடம் படிப்பிக்க முடியாதவராம்,. இதை பிரபாகரன் தனக்கெதிரான- மாத்தையா போன்றவர்களை சிறைப்பிடித்து சித்திரவதை செய்ததைப்போல், இது சமன் இது!, எனவே இது சமன் இதுவென்கின்றார். பானையில் உள்ளது அகப்பையில் வருவதுபோல், இவர்கள் மூளையில்   உள்ளதுதான் (ராணுவப்புத்தி) பேனாவில் வருகிறது!

பர்மாவின் நிரந்தர இராணுவ ஆட்சிக்கும், பாகிஸ்தான் பங்களாதேசத்தில் நிரந்தரமற்ற தொடரற்ற இராணுவ ஆட்சிக்கும், காரண காரியங்கள் இல்லையோ? இவையெல்லாம் ஆசியநாடுகள்தானே! உலகமயமாதலின் சமகால நிகழ்ச்சி நிரலில்,  அமெர்pக்காவும் மேற்கத்தையரும், அந்நியப்பட்ட நிலையில், பொன்சேகாவின் இராணுவ ஆட்சி எத்தனை நாட்களுக்கு? இலங்கை இந்தியாவின் (உத்தியோகப்பற்றற்ற) மாநிலமும் அல்லவோ?

புலிகள் மாநாட்டில் கலந்து கொண்டதுபோல், பிரிட்டிஸ் அமைச்சர்கள் அல்கய்தா அமைப்பிற்கு சார்பான கூட்டத்திலும் கலந்து கொள்வார்களோ?             —-கேகலய ரம்புக்கவெல்ல

நியாயமான கேள்விதான். இலண்டனில் நடைபெற்ற உலக மாநாட்டின்; பின்னணியை பின்னணியாளர்களை பிரிட்டிஸ் அரசு கண்டுகொள்ளவில்லையோ, அல்லது கண்டும் காணாத நாடக நிலையோ? எப்படியோ இருக்கட்டும்! இருந்தும் தங்களுக்கும் -இலங்கை அரசிற்கும் உள்ள முறுகலை பிரதமரும் வெளிநாட்டமைச்சரும வெளிப்படுத்தியுள்ளனர். இதன் இனனொரு நிகழ்வே அமெரிக்க செனட்டரின் வாழ்த்துச் செய்தியும்! அறிக்கையும்!

இம்மாநாட்டை “உலகப்பேரவை” (தமிழ்மக்கள் நலன்கள் அபிலாசைகள் கொண்ட) எனச் சொல்லி, மாநாட்டாளர்கள் நாசூக்காக நடாத்த, புலிகளின் ஊடகங்கள் தமிழ்ஈழத்திற்கான மாநாடாக பறைசாற்றி பிரச்சாரப்படுத்தியுள்ளன. இதைக் கண்ணுற்ற மாநாட்டிற்கு வந்த பலர் தங்களின் அதிருப்தியை கோபமாக மாநாட்டுக்காரர்களுக்கு தெரிவித்த சம்பவங்களும் உண்டு. இதற்கு அவர்களும் தங்களின் தவறல்ல என கைவிரித்தார்களாம்!
இந்த நாசூக்கான அரசியல்தானே தமிழ்மக்களை முட்கம்பி வேலிக்குள்ளும் அரசியல் அநாதைகளாகவும் ஆக்கியுள்ளது!