Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

தேர்தல் திருவிழாக்காரர்களின் உபயமும் – உபத்திரவங்களும்!

செய்தியும் செய்திக்கண்ணோட்டமும்! 28.03.2010

தேர்தல் திருவிழாவிற்கு இன்னொரு பத்து நாள் உபயமே உள்ளது. நான் சென்ற வாரம் சொன்னதுபோல்  உபயகாரர்கள் தேர்தல் பிரசசாரங்களை, சொற்பொழிவுகளாக, போட்டிப் பிரச்சாரங்களாக, வழக்காடு-பட்டி மன்றங்களாக்கி மகாகோலம் கொள்ள வைத்ததில்,  மக்கள் சலிப்பிற்கும்,  உபத்திரவங்குளுக்கும் உள்ளாக்கியுள்ளனர்.  இவர்களின் இந்த சலிப்பான – உபத்திரவங்களையும்,  கடந்தவாரத்தில் விட்டதையும், தொட்டதையும் தொடாகின்றேன்.

இதில் ஜனநாயக நீரோட்டக்காரர்களான  “மகிந்த செஞ்சோற்றுக்காரர்களினதும்”  ஏனையவர்களினதும் ; தேர்தல்திருவிழா அரசியலைப் பார்ப்போம்.

தமிழர் கூட்டணியின் ஆனந்தசங்கங்கரியார்!தமிழர் கூட்டணி என்றால் அதன் முழுமுதற் கடவுளும்,  அதன்  ஏனைய சகலதும்  (படைத்தல், காத்தல்,  அருளல்) அவர்தானே.  திலீபனின் நினைவுத் தூபி உடைத்தெறிந்ததை கர்னகடுரமாக கண்டிக்கின்றார். தமிழ்மக்கள் உணவுக்காக,  உடைந்த கட்டிடங்களுக்காகப் போராடவில்லை, தங்கள் உரிமைகளுக்காகவே போராடுகின்றார்கள்.  தற்போதைய தேர்தல் சர்வாதிகாரத்தை நோக்கி  செல்வதாகவும்,  ஒன்றுமே  இல்லாதிருந்த பல வேட்பாளாகள்,  தேர்தல் அறிவிக்கப்படட்தின் பின் திடிர்ப் பணக்காரர்கள் ஆகியுள்ளனராம்.  சிங்கப்பூர் நாளிதழக்கு மகிந்தா வழங்கிய பேட்டியை ஏற்க முடியாதாம்.  தமிழ்மக்கள் பிரச்சினைக்கு இந்தியாபோன்ற மாநில ஆட்சியே சரியானது.  சமஸ்டி  என்ற சொற்பதம் சிங்கள மக்களைப் பொறுத்தவரை,  ஓர் வேண்டாத சொற்பிரயோகம் அதை  நீக்கி  இன்னொரு ஒத்தகருத்துள்ள  சொல்லுடன்,  அந்த இந்திய மாநில ஆட்சியே வேண்டும் எனகின்றார்.

பத்மநாபாவின் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி!

தமிழ்மக்கள் பிரச்சினைக்கான தீர்வில் இந்தியா சிரத்தையுடன் செயற்பட்டு வருகின்றது. அந்நாட்டின் உதவி ஒத்தாசைகள் நமக்குத் தேவை. ஒஸ்லோ தீர்வின் அடிப்படையில் தீர்வு காணப்படுமாக இருந்தால், நாம் மகிழ்ச்சியடைவோம். முஸ்லிம் மக்களுக்கு பிரச்சினைகள் உண்டு. அவர்களுடன் நாம் இணைந்து செயற்படுவோம். அம்பாறையைக் கேட்டால், அதனை நாம் வழங்கத்தயார். அவ்வாறு இல்லாது அம்பாறையை தலைமையாகமாகக் கொண்டு, முஸ்லிம் மக்கள்  பெரும்பான்மையாக வாழும் பகுதிகளை, உதாரணமாக கல்முனை யாழ்ப்பாணத்தின் சில பகுதிகள் போன்றவற்றிற்கும் அதிகாரங்களையும் வழங்கத்தயார். தமிழ்மக்களிடம் இந்திய விரோதப்போக்கு உள்ளது என்பதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது  என்கின்றனர்.

 புளட்டின் சித்தாத்தன்.

அரசியல் ரீதியாக நாம் எந்தத் தவறும் செய்யவில்லை. இனிமேலும் விடப்போவதில்லை. வடகிழக்கு எமது சொந்தத் தாயகம். என்பதில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயற்படவேண்டும். வவுனியாவை பொன் விளையும் பூமியாக்குவதே தம் இலட்சியக் கொள்கையென்கின்றார்.

“மகிந்த செஞ்சோற்றுக்காரர்களில்” இவர்களின் அரசியல் சிலவேளை டக்ளஸ்-பிள்ளையான்-கருணா பாணியிலும் சிலவேளைகளில்  விலாங்குத்தனமான போக்கிலும் செயலாற்றுவர். தற்போது  தேர்தல் திருவிழாக் காலம் என்பதால் இப்பீடிகை போடுகின்றார்கள். இந்தியாவும் மகிந்தாவும் தமிழ்மக்களை படுகொலை செய்கையில முட்கம்பிவேலிககுள் அடைக்கையில்,  அதற்கு புலியே சகலதிற்கும் பிரதானகாரணி, அரசு  இல்லையே என அரசின் அசல் செஞ்சேர்ற்றுக்காரர்கள்” ஆகத்தான் இருந்தார்கள். உங்களைவிட டக்கிளஸ்-கருணா-பிள்ளையான் போன்றவர்களின் விலாங்குத்தனமற்ற போக்கும், நேர்மையான மகிந்த விசுவாசமும் பரவாயில்லைத்தான்.

பிள்ளையானின் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள்!

கிழக்குமாகாணத் தமிழ்மக்களுக்கு அரசியல் முகவரி கொடுத்து, உதயமாகிய ஒரேயொரு கட்சி,  தமிழ்மக்கள் விடுதலைப் புலிகள்தான். அது தற்போது ஓர் வரலாற்றுத் திருப்பு முனையில் உள்ளது. அதுதான் வடக்கிலும் போட்டியிடுவது. இப்போது  நாம் கிழக்கில் இருந்து வடக்கிற்கும் தலைமை தாங்குகின்றோம்.  பிரபாகரன் செய்த பிழையை நாம் விடமாட்டோம்.  நாம் கிழக்கின் விடிவெள்ளியை வடக்கின் வசந்தத்திற்கு ஊடாக பிகாசிக்கச் செய்வோம்!  இதுதான் முழுக்க முழுக்கச் சரியென எனது மதியுரைஞர்களும் சொல்லியுள்ளனர். ஆனால் தமிழ்மக்கள் பிரச்சினைக்கான தீர்விற்கு தற்போதைய, வடகிழக்கு பிரிக்கப்பட்ட  13-வது  திருத்தமே தேவை. அதுவே எம் தாயக-சுயநிர்னய உரிமைக் கோட்பாடு என்கினறார். பிள்ளையான்.

பிள்ளையான் மற்ற அரசியல்வாதிகள் போலல்ல, அவர் தன் மனதில் உள்ளதை உள்ளபடி வஞ்சகம் சூது இல்லாமல்  சொல்லும் யதார்த்தவாதி, சாதாரண மக்களின் மொழியையே பேசுவார், அவர்களுக்காகவே சகலதையும் செய்வார் என அவரின் மதியுரைஞர்கள், அவரைச் சந்தித்த் அன்பர்கள் ஆதரவாளர்கள் சொல்லக் கேட்டுள்ளேன். அவரது வஞ்சகம் சூதில்லா  “யதார்த்த அரசியல் ஞானம்” ரொம்பச் சரியென இப்போதான் உணர்கின்றேன்!

டக்கிளஸின் ஈ.பி.டி.பி.

கைது செய்யப்பட்வர்களை, மற்றும் சரணடைந்தவர்களை, அவர்களது உறவுகளிடம் ஒப்படைப்பது, என் பொறுப்பு.  நான் கரபந்தாட்டத்திற்கு பந்தும் வலையும் கொடுக்க, எப்போது யார் எதைக் கேட்டாலும் இல்லையென்று சொல்லாதவர் (மகிந்த அரசபையில் கவசகுண்டலஙக்ளோடு உள்ள  கர்ணன்.)  எங்கள் டக்ளஸ் என்கின்றார். யாழ் கரபந்தாட்டச் சங்கச் செயலாளர். இதுதான் என் அரசியல் என்கின்றார் டக்ளஸ். தமிழ் மக்கள் பிரச்சினையில் தனக்கும் மகிந்தாவிற்கும் உடன்பாடு 13-வதற்கு உள்ளும,  புறமும், மேலும், கீழுமானது தான். இதைவிட வேறொன்றும் தெரியாது, புரியாது. இதற்குமேல் என்னிடம் எதுவும் கேளாதீர்கள் என்கின்றார்.

இதுதான் என் ஜனநாயக நீரோட்ட அரசியல் என்னும் போது, அவரோடு ஏன் நாம் மல்லுக்  கட்ட வேண்டும். இதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.

காங்கிஸின் பொன்னம்பலம்

ராஜபக்சேவிடம் விலை போய்விட்டதாக பரப்பப்படும் செய்திகளில் உண்மை இல்லை! சத்தியமாக!  நம்புங்கள் தமிழ்ஈழம் நாளை என் தலைமையில் கிடைக்கும் என்கின்றார். காங்கேயன் கணபதி பொன்னம்பலத்தின் பேரன்.

கடந்த தேர்தலில் தவைரே மகிந்தாவிடம் விலை போனவர்தானே.  தாத்தா தன் அரசியல் வாழ் நாள் பூராக பேரினவாதத்திடம் விலை போனவர்தானே! அப்போ நீங்கள் ஏன்?…………..என கேட்கத் தோன்றுகின்றது.

ஜான் – மே 18-ன்  “பின் நவீனத்துவ தேர்தல் ஸ்ரைல்”?

 புலிகள் உயிரோடு இருக்கையில் அவர்களுடன் உறவாட, கொள்கை வகுத்து, அவர்கள் இல்லாததால்,   மே 18-ஆகியவர்களின் கடந்த 3-மாத “தேர்தல் ஸ்ரைல் அரசியல்” பாரீர்.! ஜனாதிபதித் தேர்தலில் புதிய இடதுசாரி முன்னணியை ஆதரித்தார்கள். இபபோது தேர்தல் நிராகரிப்பு என்கின்றார்கள். புதிய ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவும் என்கின்றார்கள். விக்கிரமபாகுவும் புதிய இடதுசாரி முன்னணியும், கடந்த மூன்று மாதமாக தேர்தலில் – தேர்தல் கூட்டணியில் ஒரே கொள்கையில் – நடைமுறையில்தான் உள்ளார்கள்! ஆனால் தத்துவாசிரியர் ஜான் அவர்கள்தான், மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுமாப் போல், (ஆதரவு –ஆதரவின்மைகக்கு, நிராகரிப்பிற்கு) தத்துவக் காரணங்கள் சொல்கின்றார். இவர் போற போக்கைப் பார்த்தால் அடுத்தகிழமை பொன்னம்பலம் காங்கிரஸிற்கும் ஆதரவு கொடுப்பார் போல் உள்ளது.

இதை சுத்த சுவாதீனமற்ற தேர்தல் திருவிழா அறிக்கை என்பதா? பின் நவீனத்துவ – கட்டுடைப்பு “தேர்தல் ஸ்ரைல் அறிக்கை”  என்பதா?
______

அரசியல் மேடைகளில பேசுவதற்கு எனக்கு எவரும் தடை விதிக்கமுடியாது  -கோத்தபாயா

உங்கள் நாடு, உங்கள் குடும்ப அரசு, இது உங்கள் சட்டவிரோதத் தொழில், இதற்கு யார் தடை விதிப்பது! பொன்சேகா போன்றவர்களை அரசியலில் ஈடுபட்டதான, குற்றச்சாட்டின் பேரில் உள்ளேயும் போடலாம். ஆதிகாரத்தில் இருக்கும் இடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சௌக்கியமே!

_____

தமிழ்ஈழம் என்பது, என்பது தாயகத்தின் பெயர். அது தனிநாடு என்று அர்த்தப்படாது
—கூட்டமைப்பின் வேட்பாளர் சிவஞானம்

தேசியத் தலைவர் என்பது பிரபாகரனின் செல்லப்பெயர். அவரை ஜனநாயகவாதி என்பதும் அர்த்தப்படாதுதானே!
_______

மகிந்தாவிற்கு மதம் மாறினாலும் பிடிக்காதோ?
பௌத்தத்தில் இருந்து இஸ்லாமுக்கு மாறி, பௌத்தத்திற்கு எதிராக நூல்கள் எழுதினார் என்ற குற்றச்சாட்டில், விடுமுறைக்கு வந்த பக்ரேன் நாட்டுப் பெண்மணியை இலங்கை அரசு கைது செய்துள்ளது.
சாரா மலனி பெரேரா என்ற இச்சிங்களப் பெண் தனது இளம்வயது முதல் பக்ரேன் நாட்டில் வசித்து வருகின்றார். அவர் இஸ்லாம் மதத்தில் மாறி அந்த மதத்தை நேசிப்பதற்கான காரணத்தை விளக்கியும் மதங்களை ஒப்பிட்டும் இரு நூல்களை எழுதியுள்ளார்.

இருளில் இருந்து வெளிச்சத்திற்கு என்ற நூலும், கௌதம புத்தரின் உண்மையான போதனைகள் மற்றும், கேள்வி பதில் அடங்கியதான நூலினையும் வெளியிட்டார். வெளியிட்ட இந்நூல்களை இலங்கையிலிருந்து பக்ரேனுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்த போதே கைது செய்யப்பட்டார்.
ஓர் சிங்களப் பெண்மணி மதம் மாறியதற்காக, அப்பெண்மணியை பௌத்தத்திற்கு எதிராக செயற்பட்டார் எனப் பொய்க்குற்றம் சாட்டி,  தனது பௌத்த சிங்கள வெறியைக் காட்டி சிறையில் அடைக்கிறது மகிந்த அரசு. இப்பெண்மணி சிங்கள இனத்தைச் சேர்ந்தவராக இருப்பினும், அவர் ஓர் வெளிநாட்டுப் பிரஜையே!

இது போன்று இவ்வரசு பல அசிங்க நடவடிக்கைகளைச் செய்கின்றது. அண்மையில் அமெரிக்காவில் பான் கீ மூனுக்கு எதிராக ஆhப்பாட்த்தில் ஈடுபட்ட 16-பேருக்கு விருந்துபசாரம் வழங்கியுள்ளது. அதுவும் ஐக்கியநாடுகள் சபைக்கான இலங்கைப் பிரதிநிதி  தனது வாசஸ்த்தலத்திற்கு இவர்களை அழைத்து இதைச் செய்துள்ளார். தனது சொந்த நாட்டில் பௌத்த- சிங்களப் பேரினவாதவெறி கொண்டு, எல்லாம் பெரும்பான்மையே! சிறுபான்மை என்ற ஓன்று இல்லையென்ற நிலையிலிருந்தே, மகிந்த அரசு தனது தேசிய சர்வதேசிய நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.

_____

 


சிவாஜிலிங்கத்தை என்னிடம் இருந்து பிரித்துப் பாருங்கோ –சிறிகாந்தா

ஏதோ கணவன் மனைவி போல், நகமும் சதையும் போல், சோடியாயுள்ள அன்ரில் பறவைபோல் கதை சொல்கின்றார். அரசியலில் நிரந்தர எதிரி-நண்பன் என்பது இல்லையென்கின்றார்கள். தேர்தல் முடிய உதுஏதும் நடக்காதோ?

 _____

ரை-கோட் அணிந்த கூட்டமைப்பின் பிரிவினைவாத அரசியல் முறியடிக்கப்படவேண்டும் –கெல உறுமய

நாசனல் வேட்டியுடன், கழுத்தில் சிவப்புத்துணி மாட்டிய அரசியல் பேரினவாதமாக இருக்கும்வரை, நீங்கள் சொல்வதும் இருந்துதான் தீரும்!
______