Thu04182024

Last updateSun, 19 Apr 2020 8am

மார்ச் 22-உலக குடிநீர் தினம்!

உலகின் நீர் அவலம் பற்றிய குறிப்புகள்

உலக முதலாளித்து ஆளும்  வர்க்கம் மனிதகுல தேவைக்கான, பல  இயற்கையான அத்தியாவசியங்களைக் கூட இல்லாதாக்குகின்றது. இவற்றுள் குடிநீர்ப் பிரச்சினையும் ஒன்றாகியுள்ளது. இது இன்றைய சர்வதேசப் போராகவும் உருவெடுத்துள்ளது. இதை சர்வதேசத்தின் சுற்றுச்சூழல்  வாதிகள் பலமாக எச்சரிக்கின்றனர்.

90-ன் ஆரம்பகாலத்தில் சோமாலியாவின் உள்நாட்டுப் போரில், முதலாளித்துவத்தின் கழிசடைச் சமூகவிரோதிகள், கிணறுகளைப் பாறாங்கற்களால் நிரப்பியும் , தண்ணீர்க் குழாய்களை சேதமாக்கியும், நீரிறைக்கும மோட்டார் இயந்திரங்களை சூறையாடியும் இக்குடிநீரை கிடைக்காமல் செய்ததில் பல இலட்சக்கணக்கான சோமாலிய மக்கள் அவதிக்கு உள்ளானார்கள். பல்லாயிரக் கணக்கானோர்கள் பலியாகினார்கள்.

போஸ்னியாவின் உள்நாட்டுச சண்டையில், செர்பியர்கள்-முஸ்லிமகள் மீதான தாக்குதல்களுக்கு தண்ணீரும் ஓர் பகடைக் காயாகவே பயன்படுத்தப்பட்டது. சராஜிவோவில் மின்துண்டிப்பை ஏற்படுத்தி குடிநீரை இல்லாமல் செய்ததில், கிணறுகளை நோக்கி தண்ணீருக்காக கூட்டம் கூட்டமாக சென்ற செர்பிய முஸ்லிம் மக்கள் ஏவுகணை கொண்டு தாக்கி சாகடிக்கபட்டார்கள்.

இஸ்ரேலுடன் ஜோர்தான் செய்துகொண்ட தண்ணீர் ஒப்பந்தத்தால், தண்ணீரைப் பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்டுள்ள பிரச்சினையானது, இருநாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்படப்போகும் நிலையியுள்ளது என்கின்றார், முன்னாள் ஜோர்டான் மன்னன் குசேன்.

எகிப்தின் நைல்நதியின் ஆதிக்கம், அவ்வாற்றின் பள்ளத்தாக்குகளில் உள்ள எட்டு ஆபிரிக்க நாடுகளின் கைகளிலேயே தங்கியுள்ளது என்கின்றார், முன்னாள் எகிப்திய வெளிநாட்டு அமைச்சர். அத்துடன் மத்திய கிழக்கில் உள்ள அனைத்து நாடுகளும் பல நதிகளைப் பங்கிடுவதில், தமக்குள் மோதும் ஆபத்தும் ஆரம்பமாகியுள்ளது. இந்தியாவில் கூட பல மாநிலங்களில், இது அதிகார அரசியலாகி உள்ளது. தமிழகமும் கர்நாடாகவும் ஓர் உதாரணமாகும்.

பூமியில் உள்ள நீரில் 97.5-வீதம் கடலில் உவர்நீராக கரித்துக் கொண்டிருக்க, நன்னீராக மிஞசியிருப்பது 2;;.5-வீpதம்தான். இதிலும் பெரும்பகுதி அண்டார்டித்தாவிலும், கிரீன்லாந்திலும் பனிப்பாளங்களாக உறைந்து போயுள்ளது. எஞ்சியது மண்ணின் ஈரத்திலோ, அல்லது எடுக்கமுடியாத  ஆழத்தில் தரையடி நீராகவேதான் உள்ளது. மொத்தத்தில் பூமியில் உள்ள நன்னீர்; முழுவதிலும் வெறுமனே 0.007-வீதம் மட்டுமே பயன்படக்கூடியதாக உள்ளது.

இதன் பரம்பலிலும் இயற்கையை  பாரபட்சமாகவே செயற்படுத்துகின்றனர். அமெர்க்கா போன்ற நாடுகளில் ஒரு குடும்பம் நாள் ஒன்றிற்கு 2,000-லீட்டர் நீரைத் தாராளமாக செலவு செய்யக்கூடிய நிலையிலும், மற்றைய நாடுகள் பலவற்றில் ஒரு குடும்பம் 20-லீட்டர் நீரைப் பெறுவதற்கே திண்டாடும் வகையிலும் ஓரவஞ்சனையுடன் பகிரப்படுகின்றது.

50-ஆண்டுகளுக்கு முன்பு ஒருவருக்கு கிடைத்த நீரின் அளவில் பாதிதான் இன்று நமக்கு கிடைக்கின்றது. 1950-ல் வேளாண்மை, தொழில்த்துறை வீடுகள் ஆகியவற்றின் பயன்பாட்டிற்கு போக, தலைக்கு ஆண்டொன்றிற்கு 16,800 கனமீட்டர் வீதம் உலகின் நீர்வளம் கையிருப்பில் இருந்தது. இன்று உலக நீர்வள இருப்பு 7,300-கன மீட்டருக்கு குறைந்துவிட்டது. இன்னும் 25-ஆண்டுகளில் இது 4,800-கனமீட்டராக குறைந்துவிடும்.

இன்று மத்தியகிழக்கு ஆபிரிக்க நாடுகளில் 46-கோடி மக்கள் குடிநீர்ப் பற்றாக்குறையால் அவதிப்படுகின்றனர். பற்றாக்குறை மட்டுமல்ல, நீர்pன் தரமும் நாளுக்கு நாள் அபாயகரமான அளவுக்கு குறைந்து விடுகின்றது.

உலகில் சீனாவிலேயே, உலக அளவில் நீர்ச்சூழல் சீர்கேடு நிலவி வருகின்றது. 79-வீதமான சீனமக்கள் தொற்று நீரையே பருகுகின்றனர். சீனாவின் யாங்கே ஆற்றில் தினமும் 40-மில்லியன் தொன் கழிவு கலந்து கொண்டிருக்கின்றது. இதனால் தேசிய மரணத்திலும் பார்க்க ஆற்றுப் படுக்கையில் உள்ளவர்களின் மரணவீதம் 30-வீதத்தால் அதிகரித்துள்ளது. இப்பகுதிகளில் இருந்து சீனாவின் இராணுவத்திற்கு ஒருவரையேனும் சேர்த்துக்  கொள்வதில்லை.

இருக்கும் நீர்ப் பற்றாக்குறையை மறைப்பதுதான் தற்போது உள்ள நீர் மேம்பாட்டுத் திட்டங்களின் முக்கிய நோக்கமாக உள்ளது. நீர்வளத்தை அதிகரிக்கச் செய்வது என்பது இயலாத நிலையில் அணைகள் கட்டுதல், உப்பு நீக்க ஆலைகள் அமைத்தல் போன்ற தொழில்நுட்பத் தீர்வுகள் முன்வைக்கப்படுகின்றன. அத்துடன் துருவப்பகுதிகளில் இருந்து பனிப்பாறைகளை இழுத்து வரலாம் என்ற ஆலோசனைகளும் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் இவைகளுக்கு எதிராக பொருளாதார – சமூக மண்டலங்கள் யதார்த்தமான வாதங்களை முன்வைக்கின்றன.

ரஸ்யா ஆறுகளை திசை திருப்பப்போய் ஏரல் கடலைச் சுருங்கச்செய்ததில் உயிரின மண்டலத்தில் Nhரழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று தரையில் இருந்து 100-கிலோ மீற்றர் தள்ளிச் சென்றே மீன் பிடிக்கவேண்டியுள்ளது. 30-வகையான மீன்கள் இருந்த கடலில் தற்போது இரண்டு வகையான மீன்கள் மட்டுமே எஞ்சியுள்ளது.

உலக அதிகார ஆளும் வர்க்கங்களின் குறுகியகால சுகவாழ்விற்காகாக, இவ்வுலகம் பல வழிகளில் அழிக்கப்படுகின்றது! பூமியை, அதன் ஆயுளை, இயற்கைவளங்களை இல்லாதொழிக்கின்றார்கள். விஞ்ஞானிகள், சுற்றச் சூழல்வாதிகளின், அறிவுறுத்தல்களை, ஆலோசனைகள் செவிடன் காதில் ஊதிய சங்காகவே உள்ளது. இந்நிலை நீடிக்குமேயானால் பூமியினதும், உலக மக்களினதும் ஆயுள் அற்பமாக்கப்படும்.