Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் கரை சேர்ந்தது

பேராசிரியர் கே.ஏ. குணசேகரன் என்னும் ஒடுக்கப்பட்ட மக்களின் போராளியின் குரல் இன்று கரை சேர்ந்து விட்டது. பாடல்கள், நாடகங்கள், போராட்டங்கள் என்று அவரது வாழ்வு முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கமே நின்றது.

நாடக அரங்கம், குணசேகரன் நாடகங்கள், வடு, தலித்தியம், அரங்கியலும் அரசியலும், நாட்டுப்புற இசைக்கலை, பலி ஆடுகள் போன்ற நூல்களை அவர் தமிழ் வாசிப்புத்தளத்திற்கு விட்டுச் சென்றிருக்கிறார்.

கவிஞர் இன்குலாப்பின் "மனுசங்கடா நாங்க மனுசங்கடா" பாடல் தொகுப்பு அவரின் இசையிலும், குரலிலும் உழைக்கும் மனிதர்களின் போர்ப்பறையை முழங்கிக் கொண்டு ஆதிக்க சக்திகளை அதிர வைத்துக் கொண்டு காற்று எங்கும் கனன்று எழுந்தது.

"ஜீவிதப் படகு கரை சேரணும்" என்ற பாடலில் கீழைத்தேய, மேலைதேய இசைக்கருவிகள் பின்னிப் பிணைந்து வர்ண மெட்டுக்களை அள்ளி வீசுகின்றன. அலை அடிக்கும் ஓசையையும், காற்று வீசும் கடற்கரையையும் அவரின் இசைக்கோலங்கள் காட்சிகளாக காற்றில் எடுத்துச் செல்கின்றன. "சுழிகள் வழியை மறிக்க, சுற்றிக் கண்ணை இருட்ட, நலியும் வாழ்வில் உளியாக நம்மை வறுமை வதைக்குது, ஆனாலும் ஜீவிதப் படகு கரை சேர உழைப்பாளிகளை சேர்ந்து படகு செலுத்துவோம் என்று வரிகள் தொழிலாளிகளின் ஒற்றுமைமையை பாடுகின்றன.

போராளி, கலைஞன், அறிவாளர் என்று தன் பன்முகங்களாலும் ஒடுக்கப்பட்ட மக்களிற்காக உழைத்த தோழரிற்கு எமது அஞ்சலிகள்.

https://www.facebook.com/thamayanthi.thamayanthi/videos/10205871114999918/?pnref=story