Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

போராட்டத்தை வாழ்வாக்கிய பெண்ணியவாதியின் மரணம்

வடகிழக்கில் கடத்தப்பட்டவருக்காக போராடிக் காணமல் போன லலித் குமார் வீரராஜ்யின் பாட்டியின் (தாயாக இருந்தவர் பாட்டி - தாய் சிறுவயதிலேயே இறந்து விட்டார்) மரணச் செய்தி - பெண்ணியத்தின் வரலாறாகும்.

2009 பின் காணமல் போனவர்களுக்காக - காணமல் போனவர்கள் குடும்பங்களை அணிதிரட்டி போராடிய லலித், குகன், - இதனால் அவர்கள் காணமல் போன வரலாறும் - அவர்களுக்காக சேர்த்து போராடுவதுமே இன்றைய வரலாறாகி இருக்கின்றது.

வடக்கு - கிழக்கில் புலனாய்வாளர் என்று சொல்லிக் கொண்டு கடத்தல்கள், பாலியல் வன்முறைகள், வன்முறைகள், கண்காணிப்புகள்... நிலவிய பாசிசச் சூழலில் - தமிழ் இனவாதம் பேசும் தலைவர்கள் பெட்டி பாம்பாகிவிட்ட நிலையில் - தங்கள் உறவுக்காக போராட்ட வரலாற்றை தொடங்கி வைத்தவர்கள் லலித், குகன். தங்கள் சமூக அர்ப்பணிப்பு மூலம் காணமல் போன ஒருவரின் பாட்டியின் மரணச் செய்தி - மனித உணர்வுள்ளவர்களினால் உணர்வுபூர்வமாக மதிக்க வேண்டியது - அனைவரதும் சமூக கடமை. 

தன் மகன் என்ற உறவு கடந்து - தாய்மை என்னும் சமூக உணர்வு தான் பெண்ணியத்தின் உச்சமும் அடிப்படையுமாகும். இது மனித சிறப்புமாகும். இயற்கையுடன் ஓட்டிய இந்த சமூக உணர்வு தான் - தன் குழந்தையின் வாழ்வுக்காக போராடும் உயிரினத்தன்மையுமாகும். இந்த உணர்வுடன் பெண் போராட்டத்தையே தன் வாழ்வின் அங்கமாக்கிவிடுகின்ற போது - அந்த வாழ்கை சமூக உணர்வாகிவிடுகின்ற போது - அது கொண்டு இருக்க கூடிய தாய்மையே பெண்ணியத்தின் அடிப்படையாகி விடுகின்றது.

தத்துவங்களையும் - கோட்பாடுகளையும் கடந்து சமூக உணர்வுள்ள மனிதனாக வாழ்வது தான் - வாழ்வின் உன்னதம்; மட்டுமல்ல - சமூகத்துக்காக வாழ்வதே மகிழ்ச்சியுமாகும்.

லலித் குமார் வீரராஜ்யின் பாட்டி -  தன் பேரனைப் போல் தொடர் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டதுடன் முழுக் குடும்பத்துடன் இணைந்து - அரசின் இந்த மனிதவிரோத குற்றங்களை அம்பலப்படுத்தி போராடுவதில் முதன்மையான முன்னணி பாத்திரத்தை வகித்தவர். அவரின் இறப்பு மனிடத்துக்கான போராட்டத்தின் இழப்பு என்றால் - அது மிகையாகாது.      

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

30.12.2015