Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

ஜெயமோகன்; மீதான "வன்முறையைக்" கொண்டாடியது தவறல்ல

பார்ப்பனிய காப்பரேட்டை எதிர்த்து எழுதும் எழுத்தாளர்கள் இந்து பாசிச ஆட்சியின் ஆதரவுடன் கொல்லப்படுகின்ற சூழலில், இந்தப் பாசிச ஆட்சிக்கான பார்ப்பனிய சித்தாந்தத்தையே தன் எழுத்தாக கொண்ட ஜெயமோகனின் நடத்தை அரசியலாகியது.

ஜெயமோகனின் புளிச்சுப் போன பூனூல் இலக்கியத்துக்காக, பொங்கிய வெள்ளாளிய – பார்ப்பனிய இலக்கியவாதிகளும் ஓரே ரகத்தைச் சேர்ந்தவர்கள். மா புளிச்சுப் போனதோ இல்லையோ, புளித்துப் போன பூனூலின் புளிப்பு, ஒடுக்கப்பட்ட மக்களையிட்டு அக்கறைப்படாத யாருக்கும் புளிப்பதில்லை. என்ன இருந்தாலும் இலக்கியவாதி இலக்கியவாதி தான். இலக்கியவாதி மீது வன்முறையா!, அதைக் கொண்டாடுவதா!! என்று பொங்கிய இலக்கியவாதிகளின் சமூகப் பார்வை என்பது, ஓடுக்கும் தரப்பு சார்ந்தது.

இலக்கியவாதிகளின் எழுத்து கொண்டிருக்கும் இனம், மதம், சாதி, நிறம், வர்க்கம் சார்ந்த கண்ணோட்டத்தைக் கொண்டு அதை அணுகக் கூடாது, மாறாக இலக்கியம் என்பது அதைக் கடந்தது, அதற்காக அவர்களை போற்றிக் கொண்டாட வேண்டும் என்பதே ஜெயமோகனுக்காக பொங்கிய இலக்கியவாதிகளின் கண்;ணோட்டம். இந்தக் கண்ணோட்டம் ஓடுக்கப்பட்ட மக்களை ஓடுக்கும் சிந்தனைமுறையாகும். ஜெயமோகனை தாக்கியதை கொண்டாடியவர்கள், இலக்கியமென்பது இனம், மதம், சாதி, நிறம், வர்க்கம் சார்ந்தது என்ற கருதுகின்ற ஓடுக்கப்பட்ட தரப்புகளே. காலகாலமாக ஓடுக்கும் பார்ப்பனிய காப்பரேட் மயத்தை ஆதரித்து நிற்கின்ற, ஓருவனுக்கு எதிரான அரசியல் எதிர்வினை.

அதாவது பார்ப்பனிய காப்பரேட்டை தோசையாக்கி விற்றுக்கொண்டு, பிழைப்பு நடத்திய ஜெயமோகன் என்ற மானிட விரோதிக்கு எதிராகவும், ஆதரவாகவும் சமூக வலைத்தளங்களில்; கருத்துகள் என்பது, முரண்பட்ட சமூகத்தின் பொது எதிர்வினையாகும். இதை வெறும் வன்முறை குறித்த ஒற்றைப் பார்வையில் அணுக முடியாது. வன்முறை என்பது ஓடுக்கும் மற்றும் ஓடுக்கப்பட்ட, இருவேறு அளவுகோல்களில் தான் சமூகத்தில் இயங்குகின்றது. இந்த அமைப்பு முறை, வன்முறை கொண்ட அதிகார அமைப்புமுறை. அரச வன்முறையின்றி சமூகம் இயங்கவில்லை.

ஆஸ்பத்திரியில் படுத்தபடி, வன்முறை குறித்த குற்றச்சாட்டு என்பது, அதிகார வடிவம் மட்டுமின்றி, அதிகாரத்தின் மொழியும் கூடத்தான். புளித்துப் போன மா விவகாரம், சந்தையின் சட்ட நடைமுறைகளுக்;குட்பட்டது. பொருளை வாங்கி இன்னுமொருவனுக்கு விற்றவர், அதை வாங்கியவர் என்ற இது முத்தரப்பு விவகாரம். மனித அறம் மற்றும் முதலாளித்துவ சட்ட வரம்புகள் இதற்குள் இருக்க, அதை முதலில் மீறியது ஜெயமோகன் தான். ஒரு பொருள் தரமற்றது என்றால், பார்ப்பனிய காப்பரேட்; சட்ட அமைப்பில் நம்பிக்கை உள்ள ஜெயமோகன், சட்ட அமைப்பையே நாடியிருக்கவேண்டும்.

ஆனால் அதை மீறியது ஜெயமோகன் தான். வாங்கல் விற்றலில் வன்முறை என்பது, சும்மா சுயமாக நடந்திருக்க வாய்ப்;பேயில்லை. உணவுப் பொருள் தரமற்றது என்றால் அதை திருப்பி எடுத்தல், அதை விநியோகித்தவருக்கு மீளக் கொடுத்தல் என்ற செயற்பாட்டில் உள்ள விடையங்கள் அனைத்தும் சட்டரீதியான நடைமுறைக்கு உட்பட்டது. இதை மீறியது கடை உரிமையாளர் என்றால், அதை சட்டரீதியாக மட்டும் அணுக முடியும். இதைத்தான் ஜெயமோகன் செய்திருக்க முடியும். ஆஸ்பத்திரியில் போய் படுத்து கைது செய்ய வைக்கும் அளவுக்கு சிந்திக்கும் அதிகாரமும், வசதியும் படைத்த இந்த சமூக அமைப்பின் பிரதிநிதியான ஜெயமோகன், தங்கள் அதிகாரமிக்க பார்ப்பனிய காப்பரேட் பிரதிநிதிகளை மதித்து பணிந்து போக வேண்டும் என்ற புளிப்பு தான், வன்முறையாக மாறியது.

இங்கு பார்ப்பனிய காப்பரேட்டின் பிரதிநிதிகள் அதிகாரத்தின் பிரதிநிதிகளாக தங்களை முன்னிறுத்தி நிற்பது தான், இந்த வன்முறையின் பின்னாலான உண்மை. இந்துத்துவம் குறித்த அச்சமின்றி சமூகம் இயங்கவும், உயிர் வாழவும் கூடாது. இதைத்தான் ஆஸ்பத்திரி வரை சென்று, அதிகாரங்கள் கொண்டு அரங்கேற்றுகின்றனர்.

பூனூலை காட்டி தங்களை வேறுபடுத்திக் கொண்டு, அதிகாரத்தின் உச்சத்தில் நடமாடுகின்ற நபர்களாக, தங்களை முன்னிறுத்திக் கொண்டு வலம் வருகின்ற வன்முறை சமூக அமைப்பின் பிரதிநிதிகளுக்கு எதிரான, வன்முறை கொண்டாடப்படுவது என்பது மனித அறம் சார்ந்த பொது வெளிப்பாடு.

ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் மீதான வன்முறைக்கு எதிரான வெளிப்பாடு. இதை ஏற்படுத்தியது பார்ப்பனிய காப்பரேட் பிரதிநிதியான ஜெயமோகனின், ஓடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான வன்முறையை ஆதரிக்கும் இலக்கியம் தான்.

காலகாலமாக ஒடுக்கப்பட்ட மக்கள், ஓடுக்கும் தரப்புக்கு எதிரான வன்முறையை கொண்டாடுமளவுக்கு, ஓடுக்கப்பட்ட சமூகம் மீதான ஓடுக்குமுறையை ஜெயமோகன் ஆதரித்து கொண்டாடியதன் விளைவே ஒழிய, கொண்டாடியவர்களின் மன வக்கிரமல்ல. ஒடுக்குவோருக்கு எதிரான எதிர்ப்பு வடிவங்களாக இது பிரதிபலித்தது.