Thu01272022

Last updateSun, 19 Apr 2020 8am

மவுண்ட் ரோட் மகாவிஷ்ணுவின் மகா உளறல்கள்!!

சென்னை மட்ராஸ் என்று இருந்தது. அண்ணாசாலை மவுண்ட் ரோட்டாக இருந்தது. மவுண்ட் ரோடில் இருந்து கஸ்தூரி ரங்க அய்யங்காரினால் "இந்து" பத்திரிகை பிரசுரிக்கப்பட்டது. பத்திரிகையின் பெயர் "இந்து". அதாவது பிராமணர்கள் மேலானவர்கள் உழைக்கும் மக்கள் கீழானவர்கள் என்று மனிதனைப் பிரிக்கும் உழைப்பை கேவலப்படுத்தும் சமயத்தின் பெயர். பதிப்பாளர் கஸ்தூரி ரங்க அய்யங்கார் விஷ்ணுவைக் கும்பிடும் கும்பகோணத்து வைணவ பிராமணர். சக மனிதனை தொடுவது தீட்டு என்று சொல்லும் மண்டை கழண்ட கூட்டத்தின் மதியுரைஞர்.

வாயை திறந்தாலே புராணப்பொய்களும், சாதித் துவேசமும், உழைக்கும் மக்களின் மேல் வெறுப்பும் காட்டும் மக்கள் விரோதக் கூட்டத்தின் பத்திரிகை எப்படி இருக்கும்?. மகா விஷ்ணுவின் டபுள் அக்டிங் கண்ணன் "நீ கொல்லாமல் விட்டாலும் என்றைக்கோ சாகத் தானே போகிறார்கள், ஆனபடியால் நீ இப்பவே கொல்லலாம்" என்று அர்ச்சுனனிற்கு இந்து மதத்தின் சட்டவிதிகளை விளக்கிக் கூறிய பகவத் கீதை போலவே இருந்தது. அதனால் தான் ஈ.வே.ராமசாமி, கஸ்தூரி ரங்க அய்யங்காரை "மவுண்ட் ரோடு மகாவிஷ்ணு" என்று பட்டமளித்து கெளரவித்தார்.

பெரியார் ஒரு ஆங்கிலப் பத்திரிகை தொடங்கலாம் என்று இயக்கத்தவர்களிடம் சொன்னார். ஆங்கிலப்பத்திரிகை தொடங்குவதற்கு வேண்டிய வசதிகளும், வளங்களும் நம்மிடம் இல்லையே என்று அவர்கள் தயங்கினார்கள். "இதற்குப் போய் யோசிப்பதா? கடைக்குப் போய் ஒரு "இந்து" பத்திரிகையை வாங்கி வாருங்கள். "இந்து" பத்திரிகை சரி என்று எழுதுவதை எல்லாம் மறுத்து பிழை என்று எழுதுங்கள். அவர்கள் பிழை என்று எழுதுவதை எல்லாம் சரி என்று எழுதுங்கள். அது நமது இயக்க கொள்கை விளக்க பத்திரிகை போல் இருக்கும்" என்று பெரியார் சொன்னார்.

இப்படி பெரியாரால் வாங்கி கட்டிக் கொண்டதும், சுயமரியாதை இயக்கம், திராவிட சிந்தனைகள் காரணமாக தமிழகத்தில் பார்ப்பனியம் பம்மி பதுங்கி இருக்க வேண்டிய பரிதாப நிலையும் பார்ப்பனர்களிற்கு கனவிலும் மறக்க முடியாமல் கலைத்துக் கொண்டே இருக்கிறது. அதன் காரணமாகவே எப்பொழுதும் பெரியாரையும், பகுத்தறிவு இயக்கத்தையும் பற்றி பொய்களையும் பொருந்தாத ஒப்பீடுகளையும் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். "பெரியாரின் வாரிசு தான் ஜெயலலிதா" என்றொரு கட்டுரையை திருநாவுக்கரசு என்பவர் "இந்து" பத்திரிகையில் எழுதியிருப்பது அவர்களின் "பெரியார்போபியா" அவர்களை எந்தளவிற்கு ஆட்டிப் படைக்கிறது என்பதைக் காட்டுகிறது.

பெரியார் சாதி இல்லை என்றார். ஜெயலலிதா நான் பாப்பாத்தி தான் (பிராமணப் பெண்) என்று தமிழ்நாட்டு சட்டசபையிலேயே சாதித்திமிர் கொண்டு பேசினார். ஈ.வே.ராமசாமி கடவுள் இல்லை, கடவுளைப் பரப்புகிறவன் அயோக்கியன் என்றார். ஜெயலலிதா இந்துமத சாக்கடையில் புரண்டு எழும் பிராணி. ஈ.வே.ராமசாமி மூட நம்பிக்கைகளை போட்டு உடைத்தார். ஜெயலலிதா குங்குமப்பொட்டின் மங்கலத்தை பரப்பி அமைச்சர் பெருமக்கள் எல்லாம் அள்ளிப் பூசித் திரிவதால் தமிழ்நாட்டில் குங்குமத்திற்கு தட்டுப்பாடு வர காரணமாக இருப்பவர். ஈ.வே.ராமசாமியின் காலில் எவனும் விழுந்ததாக சரித்திரம் இல்லை. ஜெயலலிதாவிற்கு முன்னாலே குனிந்து, குனிந்தே அமைச்சர்களின் பின்பக்கங்கள் தேய்ந்து போய் விட்டதாக தமிழக அமைச்சரவையின் ரகசியக் குறிப்புகள் கவலை தெரிவிக்கின்றன.

பெரும் செல்வந்தரான ஈ.வே.ராமசாமி தன் சொத்துக்களையும், தமிழ்நாடு முழுவதும் அலைந்து திரிந்து மக்களிடம் சேர்த்த நிதியையும் பகுத்தறிவுக் கொள்கைகளை பரப்பவும், ஏழை மாணவர்களின் கல்விக்கும் என்று மக்களிற்கே கொடுத்தார். ஜெயலலிதா ஏழைத் தமிழ்மக்களின் பணத்தை ஊழல் செய்து தனதாக்கினார். ஜெயலலிதாவின் சொத்துப்பட்டியலை வாசிக்கத் தொடங்கும் போதே கண்ணைக் கட்டும். அவரின் பினாமிகளான மன்னார்குடி மாபியாக்களினதும், அமைச்சர் அடிமைகளினதும் கூட்டுக் கொள்ளை பட்டியல் ஜெயமோகனின் மகாபாரதத்தை விட பெரிதாக இருக்கும்.

இந்த மக்கள் விரோதியை, தமிழ்நாட்டு மக்களையும் தமிழ்மண்ணையும் கொள்ளையடிக்கும் ஜெயலலிதாவை, எந்த ஒரு விடயத்தில் கூட பெரியாருடன் சேர்த்துப் பார்க்க முடியாத பகல் கொள்ளைக்காரியை "இந்து" பத்திரிகை தன் பார்ப்பன நரித்தனத்துடன் பெரியாருடன் ஒப்பிடுகிறது. பெரியார் திராவிடச் சிந்தனையாளர் என்பதனால் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்னும் அடிமை அல்லக்கைகளின் கொள்ளைக்கூட்டத் தலைவியும் அவரின் தொடர்ச்சி தான் என்று மண்டை கழண்டு போய் சொல்கிறது. ராஜாஜி, சத்தியமூர்த்தி போன்ற பார்ப்பன வெறியர்களிளினதும், எம்.ஜி.ஆர் போன்ற பார்ப்பன அடிமைக் கோமாளிகளினதும் வாரிசு தான் ஜெயலலிதா. ஆனால் அதை எப்படி பார்ப்பன "இந்து" பத்திரிகையால் சொல்ல முடியும். நந்தனை சிதம்பரம் கோயிலில் தீயிட்டு கொழுத்தி விட்டு சோதியில் கலந்து விட்டான் என்று சொன்ன கூட்டம் வேறு எப்படி சொல்லும்?