Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

பாரிஸ் "சார்லி எப்டோ" மீதான பயங்கரவாதமும், பயங்கரவாதங்களும்

கருத்துப் படத்தை முதன்மையாகக் கொண்டு பாரிசிலிருந்து வெளியாகும் "சார்லி எப்டோ" வாரச் சஞ்சிகை மீதான தாக்குதலில் 12 பேர் பலியானார்கள். இதைத் தொடர்ந்து இலக்கு வைக்கப்பட்ட யூதர்கள் உள்ளிட மேலும் ஐவர் கொல்லப்பட்டனர். இந்த தொடர் வன்முறையில் பலர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்தியதாக கருதப்பட்டவர்களால் பலர் பணயம் வைக்கப்பட்ட நிலையில், அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து பிரான்சில் லட்சக்காண மக்கள் கொண்ட பாரிய ஆர்ப்பட்டங்களுக்கு பிராஞ்சு ஏகாதிபத்தியம் அழைப்பு விடுத்தது. அதில் பல எகாதிபத்திய நாடுகளின் தலைவர்கள் உள்ளிட, பல நாடுகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர். இதற்கு ஆதாரவாக அதே நேரம் உலகளவில் ஏகாதிபத்திய ஆதாரவு ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றது. இந்த சம்வங்களை அடுத்து புதிய பயங்கரவாதச் சட்டங்கள், அமுலுக்கு வந்திருக்கின்ற அதே நேரம் கைதுகள் நடக்கின்றது.

இதே காலத்தில் பிரான்சில் முஸ்லிம் வழிபாட்டு மையங்கள் மீதும், தனிப்பட்ட நபர்கள் மீதான, நாசிய பயங்கரவாத தாக்குதல் பரவலாக நடந்தேறியுள்ளது. இனவெறியும், மத வெறியும் என்றுமில்லாத வண்ணம் கோலோசியுள்ளது.

"எழுத்துச் சுதந்திரத்தின்" பெயரில், உலகளவிய ஏகாதிபத்திய பயங்கரவாதத்தை மக்கள் மத்தியில் நியாயப்படுத்தி இருக்கின்றது. இந்த பயங்கரவாதச் படுகொலை செயலானது, இன - மத வெறியூட்டும் ஏகாதிபத்தியத்தின் தொடரான பிரச்சாரத்துக்கும், அது சார்ந்த உலகளவிய அரசியலுக்கும் வலுசேர்த்துள்ளது.

பகுத்தறிவுச் சுதந்திரத்தை அழித்த ஊடாகப் பயங்கரவாதம்

பயங்கரவாதம் தோன்றும் காரண காரியத்தை பகுத்தறிவுபூர்வமாக அனுகுவதன் மூலம், பயங்கரவாதம் தோற்றாமல் தடுப்பதற்கான ஒரு வழியாகும். இதை விட்டுவிட்டு மற்றொரு பயங்கரவாதத்தின் கீழ் அணிதிரள்வது, பயங்கரவாதத்தை பாதுகாப்பதாகும். பயங்கரவாதத்தின் காரண காரியத்தை விட்டுவிட்டு, பயங்கரவாதத்தை வன்முறை மூலம் ஓழித்தலை முன்னிறுத்தி முன்னெடுக்கும் அரசியல், ஏகாதிபத்தியத் தன்மை கொண்டவை.

வெற்றிடத்தில் இருந்து பயங்கரவாதம் தோன்றுவதில்லை. பாரிஸ் பயங்கரவாதத்தை காரண காரியமின்றிய விளைவுகளாக விளங்கிக் கொள்வதும், அதை வெறும் "எழுத்துச் சுதந்திரம்" மூலம் விளங்கிக் கொள்வதுமே நடந்தேறியுள்ளது. ஏகாதிபத்தியங்களும், அதன் ஊடாகங்களும் எதைச் சொன்னதோ, அதுவே இதன் பின்னான பொது கருத்தாகவும், உளவியல் நடத்தையானது. இதன் மூலம் இந்த பயங்கரவாதத்துக்கு காரணமான ஏகாதிபத்திய பயங்கரவாதத்தை ஆதாரிப்பதற்கு இட்டுச் சென்றது. பகுத்தறிவற்ற இந்த செயலைச் செய்யுமாறு, ஏகாதிபத்திய ஊடாகப் பயங்கரவாதமே எங்கும் தலைவிரிதாடியது. மனித மூளைக்குள் பயங்கரவாதம் பற்றி ஒரு தலைபட்டசமான கருத்துகளைத் திணித்தன் மூலம், பகுத்தறிவு நலமடிக்கப்பட்டது.

கருத்துச் சுதந்திரம் மீதான இஸ்லாமிய பயங்கரவாதம்; எதைச் செய்ததோ, அதே போல் மனிதனின் பகுத்தறிவுச் சுதந்திரத்தை ஊடாக பயங்கரவாதம் அழித்தது. ஏகாதிபத்திய பயங்கரவாதமும், அரசு பயங்கரவாதம் எதார்த்தத்தில் இருப்பதையும், அது இந்த பயங்கரவாதத்துக்கு காரணமாக இருந்ததையும் மறுதளித்துள்ளது.

இதன் மூலம் ஏன் இந்த பயங்கரவாதம் நடந்தது என்று கேள்வி கேட்க:கப்படுவதை தடுத்து நிறுத்தியது. அதற்கு பதில் மேற்கு சமூகத்தில் உள்ள இஸ்லாமிய வெறுப்புக்குடாக பயங்கரவாதத்தை புரிந்து கொள்ளுமாறு, ஊடாகங்கள் உண்மையை மூடிமறைத்தன. பயங்கரவாதத்தை இஸ்லாமிய மதத் தன்மையாகவும், சில தனிமனிதர்களின் இயல்பாகவும் காட்டியது. பயங்கரவாதம் என்பது இஸ்லாம் தனக்குள் கொண்டு இருக்கக் கூடிய அடிப்படை வாதமாகவும், ஏகாதிபத்திய நாடுகளில் இஸ்லாமிய மக்கள் வாழ்வதே பயங்கரவாதத்துக்குரிய காரணமாக, தனக்கு தானே கற்பித்துக் கொள்ளுமாறு ஊடாகங்கள் மக்களை வழிநடத்தின.

"கருத்துச் சுதந்திரம்" என்ற போலி மூகமுடியை அணிந்து கொண்டு, கருத்துச் சுதந்திரத்துக்கு எந்த வரம்பு கிடையாது என்று கூறி மக்களை தம் பின்னால் அணிதிரட்டினர். மறுபக்கம் பயங்கரவாதத்தை ஆதாரிப்பதாக கூறி எழுத்துகள் மீதான கைதுகளும், தண்டனைகளும் தொடருகின்றது.

இந்த இஸ்லாமிய பயங்கரவத்துக்கு காரணம் ஏகாதிபத்தியங்களே. அதன் சர்வதேச கொள்கையும், உள்நாட்டு கொள்கைகளுமே இதற்கு காரணமாகும். இந்த வகையில் இதை புரிந்து கொள்ளாத பயங்கரவாதம் பற்றிய அறிவும், அதற்கு அமைவான ஆர்ப்பட்டங்களும், ஏகாதிபத்திய தலைவர்களின் தலைமையில் நடந்தேறியது.

மேற்கில் வாழ்கின்ற இஸ்லாமிய மக்களை மேலும் எதிரியாக இட்டுக் காட்டுகின்ற பிரச்சாரங்கள் மூலம், உலகளவில்லான ஏகாதிபத்திய கொள்ளையும், மூலத்தின் சூறையாடலையும் இலகுவாக்குவதற்கே இந்த வன்முறை உதவியிருக்கின்றது.

நடந்த ஊர்வலமும் அதன் உள்ளடக்கமும்

மேற்கில் இஸ்லாமிய மக்களுக்கு எதிரான இஸ்லாமிய விரோதக் கொள்கையும் அது உருவாக்கிய பொது உளவியலுமே, இந்த ஏகாதிபத்திய ஆர்ப்பாட்டத்தை அணிதிரட்டியது. 1930களில் நாசி கிட்டலரின் யூத எதிர்ப்பு ஆர்ப்பட்ட அணிதிரட்டலுக்கு நிகாரனது.

ஏகாதிபத்திய பொது வெகுஞன ஆர்ப்பட்டத்தை நடத்திய அதே நேரம், அதே அரசியல் அடிப்படை சார்ந்த நாசிய அடிப்படைவாத முஸ்லிம் வழிபாட்டு மையங்கள் மேலும் தனிநபர்கள் மேலும் பயங்கரவாத வன்முறையை எவினர். ஒருபுறம் ஆர்ப்பாட்டம் மறுபுறம் பயங்கரவாதம், இரண்டுமே சமகாலத்தில் ஓரே அரசியலாக வெளிப்பட்டது.

இந்த ஊர்வலம் "எழுத்துச் சுதந்திரத்தை" அடிப்படையாகக் கொண்டு தன்னை முன்னிறுத்திய போதும், "நான் ஒரு யூதன்", "நான் ஒரு பொலிஸ்", நான் ஒரு சார்லி" என்ற கோசங்களை முன்னிறுத்தியது. இதன் மூலம், "நான் ஒரு முஸ்லிம்" என்ற சொல்ல மறுத்தது. முஸ்லிம் மக்கள் முஸ்லிம் பயங்கரவாதத்தை மறுத்து "நான் ஒரு முஸ்லிம்" என்று சொல்லி மறுக்கின்ற போது இருக்கும் தர்மீக நேர்மையைக் கூட மையப்படுத்தியதல்ல இந்த ஏகாதிபத்திய ஊர்வலம்;.

"நான் ஒரு சார்லி" என்ற கோசத்தின் மூலம், சக மனிதனையும் அவனின் பண்பாட்டையும், வாழ்கையையும் கேலி செய்கின்றதும், அதை இழிவுபடுத்துகின்ற பகுத்தறிவற்ற மனித விரோத வக்கிரங்களை தனதாக்கியதைத் தாண்டி எதையும் முன்வைக்கவில்லை. "நான் ஒரு சார்லி" என்பதன் மூலமும் சரி, "சார்லியும்" சரி, எதை சமூகத்திற்கு மாறாக முன் வைக்கின்றது. இனவெறி கேலி சித்திரங்களைக் கூட "நான் ஒரு சார்லி" யில் காண முடியும். ஏகாதிபத்திய பயங்கரவாதம் இஸ்லாமிய மக்களின் மதத்தைப் பற்றிய எதைக் கூறுகின்றதோ, அதையும் கூடத்தான் "நான் ஒரு சார்லி" கொண்டு இருந்தது. இங்கு "நான் ஒரு சார்லி" உழைக்கும் மக்களை சார்ந்த பண்பாட்டை உருவாக்கும், அதற்கான பகுத்தறிவை போதிக்கும் மக்கள் படைப்பைக் கொண்டதல்ல. ஏகாதிபத்தியத்தின் கட்டற்ற சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட சுதந்திரத்தையே, கருத்து தளத்தில் "நான் ஒரு சார்லி" முன்தள்ளியது. தான் அல்லாத அனைதையும் கேலிக்குரியதாக்கிய பயங்கரவாதம் மூலம், பயங்கரவாதத்தை துண்டிவிட்டனர்.

"நான் ஒரு சார்லி" என்ற ஆர்ப்பட்டத்தைக் கூட, ஊடாக பயங்கரவாதமே வழிநடத்தியது. பயங்கரவாதத்துக்கு எதிரானதாக கூறிக் கொண்டு "நான் ஒரு சார்லி" வகை எழுத்துச் சுதந்திரத்துக்கு ஆதாரவாக நடந்திய ஆர்ப்பட்டம், மற்றைய நாடுகள் மேலாக ஏகாதிபத்திய பயங்கரவாத்ததையோ, ஏகாதிபத்திய நலன் சார்ந்து இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு ஆயுதமும் - பணமும் வழங்கியதையோ, பாலஸ்தீனத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்து இருப்பதையோ கடுகளவு கூட கண்டிக்கவில்லை. மாறாக அதை ஆதாரிக்கும் வண்ணம் அதன் உள்ளடக்கமும், வெளிப்பாடு இருந்தையே பகுத்தறிவுள்ளவர்கள் கண்டுகொள்ள முடியும்.

இஸ்லாமிய பயங்கரவாதம் ஏகாதிபத்தியத்தின் தயாரிப்பாகும்

ஏகாதிபத்திய தனிவுடமை அமைப்புக்கு எதிரான மக்களின் வாழ்கைப் போராட்டத்தை தடுக்க, மக்களுக்கு முன் ஒரு எதிர்யை காட்ட வேண்டும். இப்படி எதிரியைக் காட்டஈ எதிரியை உருவாக்க வேண்டும்;. இந்த வகையில் ஆளும் தனிவுடமை வர்க்கம் மக்கள் தமக்கு எதிராக அணிதிரளதா வண்ணம் உருவாக்கியது தான், இஸ்லாமிய பயங்கரவாதமாகும்.

1960 - 1980 களில் முன்னால் கம்யூனிச நாடுகளில் முதலாளித்துவத்தை மீட்டு அதிகாரத்திற்கு கொண்டு வந்தன் பின்னர், மக்களுக்கு ஒரு எதிரியைக் காட்டுதற்காக உருவாக்கியதே இஸ்லாமிய பயங்கரவாதம்;. 1970 களில் ஆப்கானிஸ்தான் தொடக்கம் .. ஈராக், லிபியா, சிரியா வரையான எகாதிபத்திய தலையீடுகளை நடத்த இஸ்லாமிய பயங்கரவாதத்தை உருவாக்கினார்கள் வேறு யாருமல்ல, இந்த ஊர்வலத்துக்கு தலைமை தாங்கியவர்கள் தான். ஆயுதமும் - நிதிகளையும் - பயற்சிகளையும் வழங்கியதன் மூலம், இஸ்லாமிய உலக பயங்கரவாதத்தை தோற்றுவித்தவர்கள், இந்த ஏகாதிபத்தியங்களே. அவர்கள் தான் "நான் ஒரு சார்லி"யை இன்று தாக்கி நிற்கின்றனர்.

ஏகாதிபத்திய பொருளாதாரத்தை உலகமயமாக்கவும், ஏகாதிபத்திய முரண்பாடுகளை இராணுவ மேலாதிக்கம் மூலம் ஆதிக்கம் செலுத்தவும், தேர்தல் "ஜனநாயகத்தை;" முன்வைத்து அரசுகளை கவிழ்க்கும் சதிகளின் ஈடுபட்டவர்கள் வேறு யாருமல்ல, பயங்கரவாதம் பற்றி பேசுகின்ற ஏகாதிபத்தியங்கள் தான். அதை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்த ஊடாகங்களும் தான். இதற்காவும் அவர்கள் உருவாக்கிய இஸ்லாமிய பயங்கரவாதம், ஏகாதிபத்திய நாட்டில் வந்து பயங்கரவாதம் செய்வதை மட்டம் பயங்கரவாதமாக சித்தரிப்பது"நான் ஒரு சார்லி" மூலம் நடந்தேறுகின்து.

பிற நாடுகளின் இறைமையையும், மக்களின் இறைமையையும் அழித்து விடும் வண்ணம் நடந்தேறும் எகாதிபத்திய பயங்கரவாதம், அந்த நாடுகளில் தனக்கு அனுசாரனையான பயங்கரவாதத்தை தோற்வித்தது. அதேநேரம் நேரம் வானில் இருந்து குண்டுகளை போடுவது தொடங்கி மத-இன மோதல்கைள் உருவாக்கி மக்களை கொல்லுகின்ற ஏகாதிபத்திய பயங்கரவாதமே, இஸ்லாமிய பயங்கரவாதத்தை மேலும் வளர்த்தெடுத்தது.

பாலஸ்தினம் என்ற நாட்டை ஆக்கிரமித்து இஸ்ரேலை என்ற நாட்டை உருவாக்கிய ஏகாதிபத்தியங்கள், அரபு உலகம் மீதான இஸ்ரேலிய மேலாதிக்க பயங்கரவாதத்தை 60 வருடங்களாக எவிவிட்டுள்ளது. இதன் மூலம் யூத – முஸ்லிம் மத முரண்பாட்டையும், மத அடிப்படைவாத பயங்கரவாதத்தை தூண்டிவிட்டுள்ளது. மத ரீதியாக மக்களுக்குள்ளும், நாடுகளுக்கு இடையிலும் மோதலைத் தூண்டிவிட்டு, மத்திய கிழக்கு எண்ணை வயல்கள் மேலான ஏகாதிபத்திய ஆதிக்கத்தையும், சுரண்டலையும் செய்வதற்காக, யூத வெறுப்பு பயங்கரவாதமாகவும்;, இஸ்ரேலை ஆதாரிக்கும் எகாதிபத்திங்கள் மீதான பயங்கரவாதமாகவும் வளர்தெடுத்தனர். வர்க்க ரீதியான போராட்டத்தை, இதன் மூலம் இல்லாதாகினர்.

மேற்கு நாடுகளில் இன - மத – நிற பகுபாடும், நாசியமும் இஸ்லாமிய மக்களை தனிமைப்படுத்துவதன் மூலம், தனிவுடமை உருவாக்கம் பொது வேலையின்மையானது குறிப்பாக இந்த மக்களை குறிவைக்கின்றது. இதனால் வேலையற்ற சமூகமாக தனிமைப்பட்ட நிலையில், சிறிய குற்றங்களுக்கு இதுவே பொதுக் காரணமாகிவிடுகின்றது. இந்தக் குற்றங்களைக் காட்டி பொது இனவாத உளவியல், அவர்களை குற்றவாளிச் சமூகமாக்கிவிடும் போது, இஸ்லாமிய பயங்கரவாதம் வளர்வதற்குரிய விளைநிலமாகி விடுகின்றது. இப்படி ஏகாதிபத்திய தாயாரிப்பே இஸ்லாமிய பயங்கரவாதம்.

இஸ்லாமிய பயங்கரவாதமும், இஸ்லாமும்

இஸ்லாம் மற்றைய மதங்கள் போல் ஒரு மதம். எல்லா மதங்களிலும் அடிப்படைவாதம் இருப்பது போல், அது மத ரீதியான வன்முறைகளையே சார்ந்து இருப்பது போல், இஸ்லாம் பெயரிலும் வன்முறையும், பயங்கரவாதமும் காணப்படுகின்றது. இது இஸ்லாம் மதத்துகான விதிவிலக்கல்ல.

இஸ்லாமிய மத வன்முறைகளும், மதப் பயங்கரவாதமும் இன்று உலகமயமாதலில் கூர்மை அடைந்து இருப்பதும், அந்த மத்தத்தின் தனி இயல்புமல்ல. மாறாக ஏகாதிபத்திய பயங்கரவாதம் இஸ்லாமிய மக்கள் அதிகமாக வாழும் நாடுகளின் பொருளாதார வளங்களைச் சூறையாடவும், அந்த நாடுகளில் பிற ஏகாதிபத்திய போட்டியை தடுக்கவும் கையாளும் அதன் ஜனநாயக விரோத கொள்கைகளுமே பயங்கரவாதம் தோன்;றக் காரணமாக இருக்கின்றது. இந்த பின்புலத்தில் இஸ்லாமிய பயங்கரவாதக் குழுக்களை தோற்றுவித்து, அதற்கு ஆயுதம் நிதி பயற்சி வழங்கியவர்கள் இந்த ஏகாதிபத்தியவாதிகள்தான்.

இப்படி ஏகாதிபத்திய பயங்கரவாதமே "சார்லி எப்டோ" மீதான இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கான காரணியாகும்.

அதேநேரம் இஸ்லாமிய மக்கள் கொண்டு இருக்கக் கூடிய மத நம்பிக்கையை பயன்படுத்திக் கொள்ளும் இஸ்லாமிய பயங்கரவாதம், அந்த மக்களின் விடுதலைக்கு பதில் மத அடிமைத்தனத்தையே தீர்வாக முன்வைபப்தன் மூலம் ஏகாதிபத்திய அடிமைத்தனத்துதுக்கு மேலும் உதவுகின்றது.

தனிப்பட்ட மனிதனின் உரிமையாக மட்டும் மத வழிபாடு இருக்க முடியுமே ஒழிய, மதம் சமூகத்தை வழிநாடத்த முற்படும் போது, பயங்கரவாதமாக அது மாறுகின்றதை காணமுடியும். இது எல்லா மதங்களுக்கும், உலகளவிய மத ரீதியான எல்லா அதிகாரங்களுக்கும் பொருந்தும்.

பர்மா - இலங்கையில் பௌத்தமாகட்டும், இந்தியாவில் இந்துத்துவமாகட்டம், ... உலகு எங்கும் மக்களைப் பிளக்கும் மதப் பயங்கரவாதங்கள், உலகமாயமாதலில் இன்று முன்னிலைக்கு வருகின்றன. ஏகாதிபத்திய பயங்கரவாதமும், மதப்பயங்கரவாதம் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாக இருப்பது இன்றைய உலக ஒழுங்கின் உள்ளடக்கமாகும். மக்களை மதத்தின் பெயரில் எதிரியாக காட்டி பிரித்தாளும் ஆட்சிகள், ஜனநாயகத்தின் பெயரிலே ஆட்சிபீடங்கள் ஏறுகின்றன. சமூக வரைமுறை மீறும் தனிமனித வக்கிரங்களுக்கு எழுத்து கருத்து பேச்சு சுதந்திரம் போல், மதப் பிளவை உருவாக்கி ஆட்சி பிடிக்கின்ற மனித விரோததுக்கு சுதந்திரம் என்பதே, ஜனநாயகத்தின் பெயரில் மக்களுக்கு எதிராக எங்கும் அரங்கேறுகின்றது.

வழிபாட்டு உரிமைக்கு பதில், மதம் சமூகத்ததை மேலாதிக்கம் செய்வதை அனுமதிப்பதன் மூலம், மக்கள் தங்கள் உரிமைகளை இழப்பதே தொடர்ந்து நடந்தேறுகின்றது.

கருத்து பயங்கரவாதமும், கருத்துச் சுதந்திரமும்

கருத்து சொல்லும் சுதந்திரம் பாதுகாக்கப்படல் வேண்டும் என்பது, ஜனநாயகத்தை நேசிக்கின்றவர்களின் கடமை. கருத்துச் சுதந்திரமானது என்பது சமூகத்துக்கே ஒழிய, தனிமனிதனுக்கு அல்ல. தனிமனிதன் சமூகத்தின் உறுப்பே ஒழிய, சமூகத்திற்கு மேலானவனல்ல. சமூகத்துக்கு வெளியில் தனிமனிதனின் கருத்துச் சுதந்திரம் தனிபட்ட வக்கிரமாக மாறும் போது, இன்றைய சமூக அமைப்பு சார்ந்த ஏகாதிபத்தியம் சார்பான எழுத்து பயங்கரவாதமாகி விடுகின்றது.

எழுத்துச் சுதந்திரம் மக்கள் கூட்டத்தின் நம்பிக்கையை கேவலப்படுத்த முடியாது. மாறாக மக்களுக்கு பகுத்தறிவு பூர்வமாக அறிவூட்டுவதாக, மக்களின் சமூக பொருளாதார விடுதலைக்கு வழிகாட்டுவதன் மூலம், அவர்களை சுமைகளில் இருந்து விடுவிப்பதுமே எழுத்துச் சுதந்திரமாக இருக்கமுடியும்.

இதற்கு மாறாக பொருளை நுகர்வாதற்கும், அந்த சந்தை அமைப்பு முறைக்கு வாக்கு போட வைக்கும் பகுத்தறிவற்ற மந்தையாக மாற்றுவது கருத்துச் சுதந்திரமாக இருக்க முடியாது. மக்களை பகுத்தறிவற்றவராக்கி அதன் மூலம் உருவாகும் மக்களின் வாழ்க்கையையும் நம்பிக்கைகளையும் எள்ளி நகையாடுவதும், கேலிக்கு உள்ளாக்குவதும், எழுத்துச் சுதந்திரத்தின் பெயரிலான விபச்சாரச் சுதந்திரமே.

மக்களின் கேலிக்குரிய மத நம்பிக்கைக்கு பின்னால், பரந்துபட்ட மக்களின் தனிமனித உரிமைகள் இருக்கின்றது. அதை பகுத்தறிவற்ற வகையில் வன்முறைக்குள்ளாக்கி குதறும் போது, மக்களின் உணர்வுகளை புண்படுத்தி காயப்படுத்தி விடுவதன் மூலம், பயங்கரவாதமானது தூண்டி விடப்படுகின்றது. பரிசில் நடந்தது இதுதான்.

இந்த வகையில் ஆயுதம் மற்றும் நிதி மூலம் இஸ்லாமிய பயங்கரவாதத்தை தோற்றுவிக்கும் ஏகாதிபத்திய கொள்கைக்கு நிகாரனதே, எழுத்து வன்முறை மூலம் தூண்டுகின்ற பயங்கரவாதமும். எழுத்து வன்முறைக்கு சுதந்திரம் என்பது, ஏகாதிபத்திய பயங்கரவாதத்துக்கு அங்கீகாரத்தை கோருவது போல், எழுத்து பயங்கரவாதத்தை கண்டு கொள்ளாது அங்கீகரிக்கக் கோருவதாகும்;

முகமது நபியை நிர்வாணமாக்கி முன்னிறுத்தி காட்டுவதும்ஈ எழுதுவது எதற்காக? இதனால் அவரை நம்பும் மக்கள் அறிவூட்டப்பட்டு விடுவார்களா? இல்லை, இதன் பின்னால் இருப்பதே, ஏகாதிபத்திய நோக்கமே. இது மக்களை அறிவூட்டாது. வழிபாட்டின் பின்னான மக்களின் பொது சமூக அவலத்தை தீர்க்காது. மாறாக இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஊக்கப்படுத்துவதேயாகும். முகமது நபியை நிர்வாணமாக்கி காட்டியதன் மூலம், "சார்லி எப்டோ" பயங்கரவாதத்தை ஊக்கப்படுத்தி இறுதியில் அதற்கு பலியாகியதுடன், ஏகாதிபத்தியத்துடன் சேர்ந்த ஓப்பாரி வைக்கின்றது.

நடந்த வன்முறையின் பின் வெறும் மதப் பயங்கரவாதம் மட்டுமல்ல. ஏகாதிபத்திய பயங்கரவதமும், ஊடாகப் பயங்கரவதமும், "நான் ஒரு சார்லி" என்ற பயங்கரவாதமும் ஒருங்கிணைந்து இருப்பதைக் இனம் காணமுடியும்.