Thu04252024

Last updateSun, 19 Apr 2020 8am

மாலபேயில் "டொக்டர்" பட்டம் விற்பனைக்கு!!

இலங்கை ஜனநாயக "சோஷலிஸ குடியரசு" அதி விஷேட வர்த்தமான அறிவித்தல்களை வெளியிடுவதில் கைதேர்ந்ததாக இருக்கின்றது. அதன்படி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிறுவனம்தான் மாலபே பட்டதாரி பட்டம் வழங்கும் கடை என்பது மாலபே பிரதேசத்தில் 'சவுத் ஏசியன் இன்ஸ்டிடியூட் ஒப் டெக்னோலொஜி அன்ட் மெடிசின்' (South Asian Instititute of Tecnology And Medicine) சுருக்கமாகக் கூறுவதாயிருந்தால் SAITM என்ற பெயரில் தனியார் மருத்துவக் கல்லூரியொன்று இங்குவதாக தற்போதைய உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக அந்த விஷேட வர்த்தமானி அறிவித்தலை தலைமேல் வைத்துக் கொண்டு பெருமையடித்துக் கொள்கிறார். மேற்படி நிறுவனம் தொடர்பில் இம்மாதம் 26ம் (October 2013) திகதி மீண்டும் ஒரு அதிவிஷேட வர்த்தமான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

மாலபே தனியார் கல்வி நிறுவனம் தொடர்பிலான வரலாற்றை எடுத்துக் கொண்டால். 2009 மே மாதம் 10ம் திகதி டைம்ஸ் பத்திரிகையில் அரசாங்கம், விளம்பரமொன்றை வெளியிடுகிறது. அதில் 'தெற்காசிய தொழில்நுட்ப விஞ்ஞான மற்றும் முகாமைத்துவ' நிறுவனமொன்று ரஸ்யாவின் 'நினி நொவ்குரோத்" மருத்துவ அகடமியோடு இணைக்கப்பட்டதாகவும் அதற்காக இலங்கை மருத்துவ சபையின் அங்கீகாரம் கிடைத்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், நினி நொவ்குரோத் மருத்துவ அகடமியின் பணிப்பாளர் அலெக்ஸி பொஸட்நிகோஸின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட கடிதத்தின் மூலம் மற்றும் ரஸ்யாவிற்கான இலங்கை தூதர் உதயங்க வீரதுங்க அவர்களால் வெளியிடப்பட்ட கடிதத்தின் மூலம் SAITA நிறுவனம் 'நினி நொவ்கொரோத் மருத்துவ அகடமியோடு இணைக்கப்படவில்லையென அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், இலங்கை மருத்துவர் சபையும் சிங்களத்தில் மற்றும் ஆங்கிலத்தில் பத்திரிகை அறிவித்தல்களை வெளியிட்டு 'சண்டே டைம்ஸ்" பத்திரிகையில் வெளியிடப்பட்டிருந்த விளம்பரம் பொய்யானது எனக் கூறியது. ' இலங்கை மருத்துவர் கட்டளைச் சட்டத்திற்கு (அத்தியாயம் 105) ஏற்ப இந்தச் சபைக்கு மாலபே மருத்துவக் கல்லூரியின் மருத்துவக் கல்வி நிகழ்ச்சி நிரலை கண்காணிப்பதற்கோ, அதன்பின்னர் வழங்கப்படும் பட்டத்தை ஏற்றுக் கொள்வதற்கோ சட்டபூர்வமான ஏற்பாடுகள் இல்லை" என தெளிவாகக் குறிப்பிட்டிருந்தது. அதி விசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் மாலபே மருத்துவர் பட்டம் வழங்கும் கடைக்கு புதுமையான அங்கீகாரமொன்றை பெற்றுக் கொடுக்க முயற்சிக்கப்பட்டது.

அதற்கேற்ப 18 மாதங்களில் பிரதான 8 நிபந்தனைகளை பூர்த்தி செய்ததன் பின்னர் MBBS மற்றும் SERGEON பட்டங்களை வழங்க முடியுமென அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. 2011ல் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டாலும், அந்த நிறுவனத்திற்கு 2009 செப்டம்பர் 1ம் திகதி மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டிருந்தார்கள்.

18 மாதங்களில் பூர்த்தி செய்ய வேண்டிய நிபந்தனைகளில் குறிப்பிட்ட தரத்தைக் கொண்ட போதனா வைத்தியசாலையும் விரிவரை மண்டபம், கேட்போர் கூடம் மற்றும் பரீட்சை மண்டபம் விரிவுரையாளர்களுக்கான அறைகள், இரசாயணகூடம் மற்றும் பொழுது போக்குக்கான வசதிகள், நூலகம், ஆய்வுக்கான வசதிகள், மருத்துவக் கல்வி அலகுகள் போன்ற அனைத்தும் பூர்த்தி செய்யப்படவேண்டுமென குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆகக் குறைந்த வசதிகளைக்கூட பூர்த்தி செய்யாத இவ்வாறான நிறுவனமொன்று பட்டம் வழங்கும் நிறுவனமாக அங்கீகாரம்பெற்றது எப்படி என்பதும், அதற்கு மாணவர்கள் எப்படி சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள் என்பதும் பிரச்சினையாக இருக்கின்றது. அவற்றுக்கு பதில் கிடையாது.

எந்தவொரு மருத்துவக் கல்லூரியும் போதனா வைத்தியசாலையாக இருக்க வேண்டியது கட்டாயமாகும் மருத்துவர்களாக பயிற்சி பெறுவோர் நோயாளர்களுககு; சிகிச்சையளித்துக் கொண்டே செயல்முறை பயிற்சி பெற வேண்டும்.

ஆனால், ஆட்சியாளர்கள் என்ன செய்தார்ள் என்றால், கலாநிதி நெவில் பர்னாந்து தனியார் வைத்தியசாலையை மாலபே பட்டதாரி பட்டம் வழங்கும் கடையோடு இணைக்கப்பட்ட போதனா வைத்தியசாலையாக அறிவித்தார்கள். ஆனாலும், 2012 டிசம்பர் 22ம் திகதி அது குறித்து விளக்கமளித்த சுகாதார அமைச்சர் மைத்திரிபால் சிறிசேன, மேற்படி தனியார் மருத்துவக் கல்லூரி போதனா வைத்தியசாலை என்பதை சுகாதார அமைச்சு ஏற்றுக் கொள்ள மாட்டாது எனவும், அந்தக் கல்லூரி பதிவு செய்யப்பட்ட நிறுவனம் அல்லவென்றும் கூறினார்.

2011 ஏப்ரல் 5ம் திகதி 216/13ன் கீழ் சுகாதார அமைச்சு அறிவித்தலொன்றை விடுத்துள்ளது. "மாலபே SAITM நிறுவனம் மருத்துவர் பட்டங்களை வழங்குவதற்கு தகுதியான நிறுவனமல்ல என்றும், தான் அவ்வாறான அனுமதியொன்றை வழங்கவில்லையெனவும்" அதில் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறு வர்த்தமானிக்கு மேல் வர்த்தமானியும், அறிக்கைக்கு மேல் அறிக்கைகளையும் விடுத்து குழப்பத்திற்குள்ளாக்கப்பட்ட நிலையில், கடந்த செப்டம்பர் 26ம் திகதி மீண்டும் ஒர் அதி விசேட வர்த்தமானி அறிவித்தலை உயர் கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ளார். அதன் மூலம் மாலபே பட்டதாரிப் பட்டம் வழங்கும் தடை, இதுவரை பூர்த்தி செய்யாத குறிப்பிட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்ய மேலும் 6 மாத கால அவகாசம் வழங்கப் பட்டுள்ளது.

இதற்கிடையில், ஆரம்பத்திலேயே மாலபே பட்டதாரிப் பட்டம் வழங்கும் கடையில் அனுமதிக்கப்பட்ட இரு மாணவர் குழுக்களுக்கு MBBS பட்டத்தை வழங்குவதற்கான சட்டபூர்வமான அங்கீகாரம் வழங்கப்பட்டுவிட்டது. இது விடயமாக எங்களோடு உரையாடிய ஒரு வழக்குரைஞர், இது எதிர்காலத்திற்குமான சட்ட அங்கீகாரம் எனக் கூறினார்.

ஆனால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படாமல் எதிர்காலத்திற்குமாக செல்லுபடியாகும் சட்டங்களை வர்த்தமானியின் மூலம் விதிக்க முடியாது. இலங்கை வரலாற்றில் அவ்வாறு எதிர்காலம் தொடர்பிலான சட்டங்கள், இரண்டு சந்தர்ப்பங்களில் மாத்திரமே விதிக்கப்பட்டுள்ளன. சிறிமாவோ பண்டாரநாயக அம்மையாரின் பிரஜா உரிமை பறிக்கப்பட்டபோது மற்றும் வெளிநாடுகளுக்கான போக்கு வரத்து தொடர்பிலான சட்டம் விதிக்கப்பட்ட சந்தர்ப்பத்திலேயேயாகும்.

இங்கு என்ன நடந்திருக்கிறது? ஒரு மருத்துவரை உருவாக்குவதற்கு எவ்வித தகுதியையும் ப+ர்த்தி செய்திராத மருத்துவர் பட்டம் வழங்கும் கடையொன்றின் மூலம் பல மருத்துவர்கள் பட்டம் பெற்று வெளியேறியுள்ளனர். மேலும் பல குழுக்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளன. மஹிந்த ராஜபக்ஷவின் அனுமதியோடும், அமைச்சர் எஸ்.பி. திசாநாயகவின் பொறுப்பிலும் ஒவ்வொரு முறையும் வெளிவரும் அதி விசேட வர்த்தமானியின் வாயிலாக இவை அனைத்தும் இனிதே நிறைவேறிக் கொண்டிருக்கின்றன.