ஆணிவேர் பிடுங்கும் லோட்டிப் பெருமிதமேன்..!?
- Details
- Category: மாணிக்கம்
-
07 Jan 2013
- Hits: 3193
அழகிய மழைக் காடுகளை
வல்லரசார் அழித்தபோது
மிக மலிவாகப் பலகை வகை
வாங்கிடலாம் கெதியாக என
ஆய்வுகள் செய்த சிலர்
அதைவிடவும் மினுக்கான
ஆடம்பரத் தளபாடங்களை
தம் சொத்தாக்கிக் கொண்டார்கள்.
தவறு தவறு
இவை தவறு என
அன்று மாரித் தவளைகளாய்
வாய்கிழிந்த மனிதர்கள் - இன்று
அந்த அழிந்த காடுகளில்
புது மரக் கன்றுகளை
நாட்ட முனையும்போது...
அதன் ஆணிவேர் பிடுங்கி
அந்தரத்தில் நடுமாறு
சில வேட்டு ஆய்வாளர்
லோட்டி இடுகின்றார்.
இவர் பூட்டிய அறையிருந்து
தினம் தூற்றும் வசனங்கள்
அந்த மழைக் காடுகளை
அழிவிருந்து மீட்டிடுமோ..?
இதைத்தான் வள்ளுவன்
இப்படிச் சொல்லியுள்ளான்...
மண்ணோடியைந்த மரத்தனையர்
கண்ணோடியைந்து கண்ணோடாதவர்.
அதாவது
கண் பெற்றிருந்தும்
கண்ணோட்டம் இல்லாதவர்
இயங்கினாலும் மண்ணோடு சேர்ந்து
இயங்காமல் நிற்கும் மரம் போன்றவரே என்கிறார்.
- மாணிக்கம் (7/1/2012)