Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

வரலாற்றின் முக்கியத்துவம் குறித்து ...

18.01.2014 பாரிஸ்சில் "வன்னி வரலாறும் - பண்பாடும்" என்ற நூலின் வெளியீடு நடைபெற்றது. இந்த நூலை சுந்தரலிங்கம் தொகுத்து வெளியிட்டு இருக்கின்றார்.

655 பக்கங்களைக் கொண்டதும், 44 தலைப்புகளில் 42 பேருடைய ஆக்கங்களை இந்த வரலாற்று நூல் கொண்டுள்ளது. இந்த நூல் வன்னி குறித்தான ஒரு பொது புரிதலுக்கு, தொடக்கமாக அமையும் என்றால் மிகையாகது.

இந்த நூல் 2000 வருடத்துக்கு முன்பு வன்னியில் வாழ்ந்த மனித அடையாளங்கள் தொடங்கி யுத்ததுக்கு பிந்தைய பெண்களின் வாழ்க்கைச் சுமைகள் வரையான, பல்வேறு விடையங்களைக் கொண்டு தொகுப்பட்டுள்ளது. குறிப்பாக காலனிய கால ஆவணங்களில், வன்னி குறித்தான பதிவுகளை அடிப்படையாகக் கொண்டு; வரலாற்றைச் சொல்ல முற்பட்டு இருக்கின்றது. வன்னி தொடர்பாக வெளி வந்த கட்டுரைகளின் ஒரு தொகுப்பாகவும் இந்த நூல் இருக்கின்றது.

இன்று வாசிப்புத் தன்மை குறைந்த வரும் சமூகப் பரப்பில், தற்குறித்தனமே மனித அறிவாகி வருகின்றது.பேஸ்புக், கைதொலைபேசி, தொலைக்காட்சியுமே... மனிதனின் வெளிவுலக தொடர்பு ஊடகமாக, அதன் மூலம் பெறுவதே மனித அறிவாகி வருகின்றது. மறுபுறத்தில் கல்விக் கூடங்கள் என்பது, பணம் சம்பதிக்கும் துறைசார் கல்வியாக குறுகிவிட்டது. மனித அறிவு என்பது, குறுகி வருகின்றது. வளர்ப்பு மந்தைக்கே உரிய வரம்புகள் போல், உலகத்தைக் குறுக்கி இதுதான் உலகம் என்று காட்டுவது இன்று பொது அறிவாகின்றது.

சுய நலமும், நுகர்வும் என்ற குறுகிய வட்டத்துக்குள் வாழ்கின்ற வாழ்க்கைகளையே, மனித அறங்களாகி அவை பண்பாடாக்கி வருகின்றன. மனித உறவுகளையும், தன்னைச் சுற்றிய இயற்கையையும் சுயநலத்துக்கு வெளியில் புரிந்து கொள்ள முடியாத வண்ணம், சுயநல வாழ்க்கையையே வாழ்க்;கையாகக் குறுக்கி இருக்கின்றது. தன் வரலாற்றை, தன் உறவுகளின் வரலாற்றை, தன் சமூகத்தின் வரலாற்றை, மனித குலத்தின் வரலாற்றை தெரிந்து கொள்வதில் என்ன லாபம் என்ற குறுகிய மனநிலைக்குள் வாழும் சமூக அமைப்பில், "வன்னி வரலாறும் - பண்பாடும்" என்ற நூலின் வருகை சாவல்மிக்க ஒன்றாகும். வாசிக்கத் துண்டுவதும், தன் சமூகம் பற்றி அக்கறைப்படத் துண்டுவதுமே, இந்த நூல் மூலமான சுந்தரலிங்கம் செய்யும் முயற்சியானது பாரட்டுக்குரிய விடையம்.

இன்று வர்த்தக அடிப்படையில் விற்பனையை மட்டும் மையமாகக் கொண்டு வெளிவரும் நூல்களும், தங்கள் வீட்டை நூல்கள் மூலம் அலங்காரம் செய்வதற்கு நூல்களை வாங்கும் இன்றைய பண்பாட்டுக்கு சாவல்விடும் வண்ணம், "வன்னி வரலாறும் - பண்பாடும்" என்ற நூலை வாசித்து சமூகத்தை நேசிக்;குமாறு இந்த நூல் அனைவரையும் கோருகின்றது.

வரலாறு குறித்து சமூகப் பார்வை

மனிதன் பகுத்தறிவுள்ளவன் என்ற வகையில், தன்னைச் சுற்றிய வாழ்வியல் நிகழ்வுகளை பகுத்தாய வேண்டும். ஒவ்வொரு செயல்லையும் செய்யும் போது, அதை விளங்கி ஏன் எதற்கு என்ற புரிதலுடன் அதில் ஈடுபடவேண்டும். திறந்துவிட்ட வெளியில் வளர்ப்பு மந்தை போல் மேய்வதல்ல, பகுத்தறிவுடன் கூடிய மனித செயற்பாடுகள். இன்றைய உலகம் பகுத்தறிவற்ற மனிதனாக, அவனின் முடிவுகளும் செற்பாடுகளும் இருக்குமாறு பாத்துக் கொள்கின்றது. சந்தையை முதன்மையாக கொண்ட உலகமாக இருக்குமாறு வழி நடத்துகின்றது. இதை கடந்து மனிதனாக வாழ, மனித வாழ்;வு குறித்த புரிதலுக்கு, வரலாறு குறித்து அறிவு அவசியமானது.

மனித அறிவானது தலைமுறை தலைமுறையாக பெற்று வருவதே. தங்கள் எப்படி வாழ்ந்தோம் என்பதையும், தங்கள் வாழ்கையைச் சுற்றிய கடந்த எதார்த்தம் மீதான அனைத்தையும் தெரிந்து கொள்ளாத வாழ்கையானது, தன்னைத்தான் புரிந்து கொள்ள முடியாத வளர்ப்பு மந்தைக்குரியதாகி விடுகின்றது.

இன்று உலகமயமாதல் வாழ்க்கை முறையானது மனிதனை சுயநலம் கொண்டவனாகின்றது. பொருட்களை நுகர்வதற்கு மேல், சிந்திப்பதைத் தடுக்கின்றது. பொருளுக்கு அடிமையாவதை பெருமைப்படுத்துகின்றது. இதற்கு அமைவான சுயநலத்தை அடிப்படையாகக் கொண்ட பாண்பாட்டை உருவாக்கின்றது. மனிதன் தன்னைத் தான் அடிமைப்படுத்துமாறு, மனித வாழ்கையையே வரலாற்று அற்ற ஒன்றாக குறுக்கி விடுகின்றது.

இயந்திர கதியில் இயந்திரத்தின் உறுப்பாக மாறி உழைப்பதும், பொருளுக்கு அடிமையாகிக் கிடப்பதும், விளம்பரம் தருவதை நுகர்வதுமாக மனித வாழ்கையானது குறுக்கப்பட்டு வருகின்றது. இதற்கு வெளியில் மனிதனாக சிந்திக்கவும் செயற்படவும் முடியாத வண்ணம், மனிதன் முடமாகப்பட்டு வருகின்றான்.

சந்தையை மையமாக கொண்ட தனிச்சொத்துடமை அமைப்பு கொடுக்கும் அறிவு, மனிதனை இதற்குள் அடைத்து வைப்பதே. அந்தச் சிறை கம்பிகளாக இருப்பது தொலைக்காட்சி, தொலைபேசி, பேஸ்புக்... என்பதைத் தாண்டி, இதற்கு வெளியில் மனிதனை வாழ அனுமதிப்பதில்லை. இதைக் கடந்து வாழ முற்படுவதானது, வரலாறு குறித்து அறிவை மனித அறிவாக பெற்றாக வேண்டும். எம்மைச் சுற்றி என்ன நடக்கின்றது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அதை மாற்றுவதற்காக வாழ வேண்டும்.

வரலாறு என்பது என்ன?

மனிதனின் சமகால வரலாற்றை எடுத்தால், ஒருபுறம் ஒடுக்கின்றவனும் மறுபுறம் ஒடுக்கப்படுகின்றவனாகவும் வாழ்கின்றான். இன்று ஒடுக்குபவன் சொல்வது தான், இன்றைய வரலாறாக இருக்கின்றது. ஒடுக்கப்பபட்டவன் சொல்வது வரலாறாக அங்கீகரிக்கப்படுதில்லை. ஏன் இன்று அதை சொல்லவும் கூட முடியாதுள்ளது. சொன்னால் கூட அது அங்கீகரிக்கப்படுவதில்லை.

இன்றைய நவீன வரலாற்றே இப்படியாக இருக்கும் போது, கடந்தகால வரலாறு என்பது இதில் இருந்து வேறுபட்டதல்ல. மக்களை அடக்கி ஆண்டவர்கள் எழுதிய வரலாறுகள் தான், எமக்கு முன் வரலாறாக சொல்லப்படுகின்றது. அங்கு வாழ்ந்த மக்களின் வரலாறு சொல்லப்படுதில்லை. இந்த வகையில் இரண்டு வரலாறும், இரு வேறு பண்பாடும் உண்டு.

இப்படி வரலாற்றை பகுப்பாய்வு செய்யாது ஒடுக்கியவன் வரலாற்றை அப்படியே வரலாறாகவும் பண்பாடகவும் எடுக்கும் போது, அது தவறான புரிதலுக்கு திரிபுக்கும் இட்டுச் சென்றுவிடும்;. அது மக்களின் வரலாறு பற்றி அறிவாக இருக்க வேண்டியதில்லை.

வரலாற்றை எழுதுகின்றவர்கள் இன்று ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களின் நலன் சார்ந்து வாழ்கின்றவர்களால் மட்டும் தான், கடந்தகால மக்களின் வரலாற்றை ஒடுக்கப்பட்ட மக்களின் நிலையில் நின்று எடுத்துக் கூற முடியும். இல்லாத வரை அது ஒடுக்குபவன் கூறிய வரலாற்றை வரலாறாக்கிவிடும் அபாயம் வெளிப்படையானது. வரலாற்று நூல்கள் குறித்து இந்த புரிதலுடன் கற்கும் போது, இன்றைய வரலாற்று நூல்கள் ஊடாக நாம் தேடவும் கற்கவும்; முடியும்.

இந்த புரிதல் இன்றி வரலாற்று நூலை அப்படியே படிப்பது, அதையே ஏற்றுக் கொள்வதற்கு பதில் அனைத்தையும் பகுத்தாய் பூர்வமாக கற்பது அவசியம்.

"வன்னி வரலாறும் - பண்பாடும்" பற்றி நூலில்

வரலாற்றை எழுதுகின்றவர்கள் இன்றைய வரலாற்றை அடிப்படையாக்கக் கொண்டு, அன்றைய வரலாற்றை கற்பனை செய்து கூறுவதை பொதுவாக கையாளுகின்றனர். இது வரலாறாகிவிடாது. அன்றைய வரலாற்றுச் சூழலில் மக்களின் வாழ்க்;கை முறை, இன்றைய ஓப்பிட்டில் மதிப்பிடுவதானது வரலாற்றுத் திரிபாகும். "வன்னி வரலாறும் - பண்பாடும்" நூலில் இந்தக் குறைபடுகளும்;, தவறுகளும் காணப்படுகின்றது.

கடந்த வரலாற்றை தமிழ் - சிங்களம் என்று மொழி மூலம் வரையறுப்பதும், இனம் மூலம் வரலாற்றை கூறுவதும், பௌத்தம் - இந்து.. என்று மதம் மூலம் பிரித்து அணுகுகின்ற வரலாற்றுப் பார்வைகள் அடிப்படையற்றவை. அதாவது இனம் - மதம் - மொழி என்ற எமது இன்றைய குறுகிய பார்வைகளை அடிப்படையாகக் கொண்டவையாகும்.

இலங்கையில் பிரிட்டிசார் மொழி ரீதியாக மக்களை பிரிக்கும் வரை, மொழி குறித்த குறுகிய சிந்தனை முறையோ வாழ்க்;கை முறையோ இருந்ததில்லை. பிரிட்டன் முதலாளித்துவதை புகுத்தும் வரை, தேசியம் குறித்த சமூக அடிப்படை இருந்ததிலை. தேசியம் என்ற வரையறை முதலாளித்துவதுடன் தோன்றியது. அது தேசிய இனம், மொழிகளை முன்னுக் கொண்டு வந்தது. இப்படி இருக்க இதை இந்த வரலாற்றுக் முந்தைய வரலாற்றில் பொருத்துவதானது தவறானது.

மதம் என்பது மன்னர்கள் மதம் மாறும் போது, மன்னர்களின் மதம் சார்ந்து முழு சமூகமும் மதம் மாறிவிடும் அளவுக்கு, மன்னனை மைய்யப்படுத்தியே ஆட்சிகள் இருந்தன. மதம், மொழி, இனம்.. மூலமான ஆட்சியை அன்று தேடுவதும், அப்படி கூறுவதும் குறுகிய இன்றைய பார்வை சார்ந்தவை. மன்னனைச் சார்ந்த மதங்களே மக்களின் மதங்களாகியது. இங்கு பிரதேச வகைப்பட்டதாக மதம், மொழியை.. தேடுவது வரலாற்று அபத்தம். மதம் மொழி பற்றிய நிலையான இறுக்கமான கட்டமைப்பாக புரிந்து கொண்டு வரலாற்றை அணுகுவதும் சொல்வதும், வரலாறு பற்றி இன்றைய நூல்களின் காணப்படும் பொதுக் குறைபடாகும்.

இந்த வகையில் குறிப்பாக இந்த "வன்னி வரலாறும் - பண்பாடும்" நூலில் பல இடத்தில் இந்தக் குறைபாடுகளைக் காணமுடிகின்றது. ஒரு சில உதாரணங்கள் மூலம் இதை தெரிந்து கொள்வோம்.

1."மொழி, மதம், பண்பாடு என்பவற்றால் தமிழர் - சிங்களவர் என்ற இரு வேறு இனக் குழுக்கள் இலங்கையில் தோன்ற அடிப்படைக் காரணமாக" பக்கம் - 18

2." புதிதாக அறிமுகமான பௌத்த மதத்தைப் பின்பற்றிய போது இன்னொரு பிரிவினர் இந்து மதத்துக்கு முன்னோடியான பெருங்கற்காலப் பண்பாடு தொட்டு இருந்து வந்த புராண வழிபாட்டு முறையத் தழுவினர்" பக்கம் - 19

3."..எந்த சந்தர்ப்பத்திலும் சிங்கள மன்னர்கள் வடஇலங்கையில் பாதுகாப்பு அடைக்காலம் பெற்றதற்கோ அல்லது இங்கு சிற்றரசர்;கள் அனுராதபுர மன்னர்களாக வந்ததிற்கோ ஆதாரம் காணப்படவில்லை" பக்கம் - 24

4."வடஇலங்கையில் வாழ்ந்த தமிழர்கள் தமிழகப் படையெடுப்பாளருக்கு ஆதரவாக இருந்ததுடன் அனுராதபுர அரசை அவர்கள் ஒரு பகைமை அரசாகக் கருதிக் கொண்டிருந்தமையும் தெரிகின்றது" பக்கம் - 24

5...வரலாற்றுக்கு முற்பட்ட கால வாரியாக வரலாற்று கால வன்னிநாடு பற்றி..." பக்கம் - 119

6.".. வடக்கிலமைந்த யாழ்ப்பாண ஆட்சியினருக்கோ தென்கிலமைந்த சிங்கள ஆட்சியிளருக்கோ அடங்க்காமல் இப்பிரதேசம் இருந்தால் அடங்காப்பற்று எனப்பெயர் பெற்றது" பக்கம் - 164

7."... அடங்காப்பற்று, திருகோணமலை, மட்டக்களப்பு, புத்தளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வன்னிநாடுகள் தமிழ் வன்னியராலே ஆளப்பட்டு வந்துள்ளது" பக்கம் - 175

8."இலங்கை தீவானது சிங்கள மன்னர்களாலும் தமிழ் மன்னர்களாலும் ஆட்சி செய்யப்பட்டு வந்துள்ளது.." பக்கம் - 512

இப்படி வரலாற்றைக் கூறுகின்ற போது, மன்னர்களை, தமிழ் - சிங்கள மன்னர்களின் வரலாறாகக் முன்வைத்து வரலாற்றைக் கூறுவதானது இன்றைய இனவாத சிந்தனை முறையாகும். மொழி சார்ந்த மன்னர்களின் ஆட்சி என்பது கற்பiனானது. மன்னர்கள் மொழிகளைப் பேசினார்கள் என்பதற்கு அப்பால், மொழிகள் ஆட்சி பிரதேசத்ததையும் மன்னர்களையும் தீர்மானிக்கவில்லை.

ஆட்சிகளானது மொழி ரீதியாக பிரிந்திருக்கவில்லை, அவர்கள் அங்குமிங்கும் கலந்து இருந்ததுடன், மொழி கடந்த மன்னர்களின் ஆட்சிகள் அங்குமிங்குமாக இருந்துள்ளது. மக்கள் கலந்தே வாழ்ந்தார்கள்.

பிரதேசங்களை மொழி ரீதியாக இன ரீதியாக வரையறுபது, மொழி மற்றும் மத ரீதியாக மன்னர் வரலாற்றை சொல்வது எல்லாம் அக்கால எதாhத்துக்கே முரணாது.

இது போல் தான் மதங்களும். பௌத்தம் - இந்து என்ற மதங்கள் குறித்தான எடுகோள்கள். பௌத்தம் இலங்கை எங்கும் இருந்ததும், அது சிங்கள மொழி பேசும் மக்கள் மட்டும் பின்பற்றியதில்ல. இதை விடவும் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் சிறு வழிபாடுகள் பல இருந்ததும், அது 20ம் நூற்றாண்டு வரை இருந்தைக் காணமுடியும். அதை விடுத்து அதை இந்து மத வரலாறாக காட்டுவது தவறானது. இந்து மதம் என்ற சொல்லே இந்தியா நோக்கிய அரபிய படையெடுப்புக்கு பிந்தையதும், அரபிய ஆட்சியாளர்கள் அனைத்தையும் பொதுமைப்படுத்தி பார்க்க முற்பட்டதே இந்து மதம். இலங்கையில் இந்த அடையாளம் கூட மிக அண்மைய வலாற்றாற்றுக்குட்பட்டது.

"வன்னி வரலாறும் - பண்பாடும்" என்ற நூல் இரண்டு குறைபாட்டை காணமுடியும்

1.அன்றைய வரலாற்றை இன்றைய இனம், மதம், மொழி, பிரதேசம் .. மூலம் பார்க்க முற்பட்டுள்ளமை

2.அன்று ஆள்வோர் விட்டுச் சென்ற தங்கள் வரலாற்றுக் குறிப்பை அடிப்படையாக கொண்டு வரலாற்று குறிப்புகள், மக்களுடையதல்ல. மாறாக மக்களை ஒடுக்கியவர்களுடையதே.

இந்த வகையில் இந்த நூலும் குறைபாடுகளைக் கொண்ட இருக்கும் அதேநேரம், இந்த குறைபாடு இல்லாத ஆக்கங்களும் உண்டு. வரலாற்றை கற்றுக்கொள்ளவும், சரியான மக்கள் வரலாற்றபை படைக்க இந்த நூல் முதல் காலடியை எடுத்துவைக்க உதவும் என்றால் மிகையல்ல.