புலி வீழ்ந்தாலும் புதுயுகத்தை திறந்துவிட்டிருக்கிறது
- Details
- Category: சுஜீவன்
-
18 May 2012
- Hits: 3389
எழுக தலைமுறையே
நீங்கள் கொலைக்களத்தை கடந்துவந்தவர்கள்
நித்தம் வலியைச் சுமப்பவர்கள்
வதையோடு வாழ்பவர்கள்
விடுதலைக்காய் பல்லாயிரமாய் வித்தாகிப்போனவர்கள்
நினைவுகள் இடித்துநொருக்கப்படுகிறது
நெஞ்சத்தில் எரியும் நெருப்பை
யாரால் அணைக்கமுடியுமென இடித்துச்சொல்லுவோம்
புலி அழிந்தாலும்
புதிய மக்கள்பாதை திறந்துகிடக்கிறது
சேர்ந்து நடப்போம்
தமிழர் சிங்களவர் முஸ்லீம்
மலையகப்பேதமகற்றிச் சேர்ந்துநடப்போம்
விடியலிற்காய் மாற்று வேறில்லை
சேர்ந்து நடப்போம்
செங்கொடியில் திரழ்வதற்கு உறுதியேற்போம்!!
18/05/2012