Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

சக மனிதனை நேசித்தலே வாழ்வின் மகிழ்ச்சி

08.08.2015 டென்மார்க்கில் எம்.சியின் நினைவும் - அவனின் ”ஒரு வெம்மையான நாளில் நின்றுபோன கவிதை" நூல் வெளியீடும் நடைபெற்றது. எங்கள் சமூகத்தை நேசித்தவன் என்பதால் - பலதரப்பட்டவர்களும் தங்கள் அனுபங்களையும் அவனின் சமூகம் சார்ந்த  செயலை முன்னிறுத்தியும் உரையாற்றினர்.

புரட்சிகரமான மரண நிகழ்வை நடத்திய அவனின் துணைவியார் றஞ்சி இதைப் பற்றிக் கூறும் போது, எம்சியுடயான தனது 25 வருட வாழ்வில் தான் கண்டதையே மரண நிகழ்வில் அமுல்படுத்தியதாக கூறினார். றஞ்சியின் தனி ஆளுமை எம்சியின் நேசித்த சமூகத் துணையுடன் வெளிப்படும் அளவுக்கு, எம்சி சமூக பார்வையானது றஞ்சியை விட்டு வைக்கவில்லை.  மரண நிகழ்விலும் - நினைவு நிகழ்விலும் றஞ்சியின் உரையும் - நிகழ்வை முன்னின்று முன்னெடுத்த முன்மாதிரியான செயலானது,  சமூகத்தின் முன் புதுமையானதும் - புரட்சிகரமானதுமாகும்.      

சக மனிதனை நேசிக்கும் போது தான், அவன் மற்றொரு மனிதனுடன் இணைந்து வாழத் தொடங்குகின்றான். இது காதல் தொடங்கி அன்பு என்று, வாழ்வின் பல்வேறு பரிணாமங்களில் காணப்படுகின்றது. இதை கடந்து மனித சமூகத்தை நேசிக்கும் போது, தன்னை அமைப்பாக்கி கொண்டு, சமூகத்துக்காக வாழ்பவனாக மனிதன் மாறுகின்றான். 

எங்கள் எம்சி அப்படி வாழ முற்பட்டவன் என்பதும், அதனால் அவனின் மரணத்தின் பின்னும் அவை முன்னொக்காக இருப்பதால் அவன் நினைவுக்கு உள்ளாக்கப்படுகின்றான்.

அவன் சமூக நோக்கில் எழுதிய எழுத்துகள் தொடர்ந்து சமூகத்ததை வழிநடத்துவதாக இருப்பதால் - அவனின் எழுத்துகள் மூலம் தொடர்ந்தும் அவன் எம்முடன் வாழ்வது தொடருகின்றது.

சமூகத்துக்காக வாழ்தலும் - அதற்கு முன்னோடியாக இருத்தலும் - அதற்கான அமைப்பதாலும், எம்சி மரணமும் - அவன் நினைவுகளும் எமக்கு தொடர்ந்து வழிகாட்டுகின்றது

இதையே 08.08.2015 அங்கு டென்மார்க்கில் நடந்த அவனின் நினைவும் - அவனின் நூல் வெளியீடும் எமக்கு மீண்டும் கூறிச் செல்லுகின்றது.  

மேலதிக படங்களை கீழே உள்ள தொடுப்பில் அழுத்தி பார்க்கவும்