Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

பிறந்த மண்ணில் வாழும் உரிமை மறுப்பது, அடிப்படை மனிதவுரிமை மீறலாகும்!

பிறந்த மண்ணில் வாழ முடியாமையும், வாழ்வதற்கான போராட்டமும், அடிப்படை மனிதவுரிமைக்கான போராட்டமாகும். இதை நிராகரிக்கின்ற எந்த மூகமுடிச் சட்டங்களும், தர்க்கங்களும் அப்பட்டமான மனிதவிரோதக் குற்றங்களாகும்.

வாழ்வதற்காக பிறந்த மண்ணை விட்டுச் செல்லுதல் தனி மனிதனின் தெரிவல்ல. இதற்கு சமூகக் கட்டமைப்பும், அரசும் காரணமாக இருக்கின்றது. இந்த அமைப்பு முறைமை மனிதனுக்கு எதிரானதாக இருப்பதால் தான், பிறந்த மண்ணில் மனிதன் வாழ முடியாமையை உருவாக்கின்றது.

மறுபக்கத்தில் இரட்டைப் பிரஜாவுரிமைச் சட்டமானது மனிதனின் பிறப்புரிமையை நிராகரிக்கின்றது. இந்தச் சட்டம் மூலம் பெரும் தொகை பணம் இருந்தால் மட்டும் பிறப்புர்pமையை வாங்க முடியும் என்கின்றது. அதை விற்கும் அரசு விரும்பினால் மட்டும் தான், வாங்க முடியும். இங்கு இரட்டை பிரஜாவுரிமையானது பணம் உள்ள வர்க்கங்களுக்கும், தங்களுக்கு சேவை செய்யக் கூடியவர்களுக்கும் தான். பிறப்புரிமை சார்ந்து பிரஜாவுரிமையை மறுக்கின்ற மக்கள் விரோத ஜனநாயக அரசாக இலங்கை அரசு இருக்கின்றது. அது தான் இரட்டை பிரஜாவுரிமைச் சட்டம்.

இதற்கு எதிரான போராட்டமானது அடிப்படை மனிவுரிமைக்கான போராட்டமாகவும், உழைக்கும் மக்கள் சார்ந்த போராட்டமாகவும் இருக்கின்றது.

பிறந்த மண்ணில் வாழ முடியாமல் நாட்டை விட்டு வெளியேறுவது ஏன்?

1.ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளே நாட்டை விட்டு தப்பிச் செல்லுமாறு நிர்ப்பந்திக்கின்றது. உயிர் வாழ முடியாத சட்ட விரோதமான ஜனநாயக விரோத அரசியல் சூழலே இதற்கான காரணங்களில் ஒன்றாகும்.

2.சொந்த மண்ணில் உழைத்து வாழ முடியாதளவுக்கு நவதாரள பொருளாதாரம், மக்களை பிழைப்பு தேடி நாட்டை விட்டுச் செல்லுமாறு நிர்ப்பந்திக்கின்றது.

பிரதானமான இந்த இரண்டு காரணங்களும் பிறந்த மண்ணில் இருந்து மனிதர்களை அகற்றுகின்றது. இலங்கiயில் இருந்து அண்ணளவாக 40 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் இலங்கைக்கு வெளியில் வாழ்கின்றனர். நாட்டை ஆளும் வர்க்கங்களும், அதை பாதுகாக்கின்ற அரசுகளும் மனிதர்கள் வாழ்வதற்கான அடிப்படை மனிதவுரிமைகளை மறுக்கின்றதன் காரணமாகவே, மக்கள் நாட்டை விட்டு தொடர்ந்து வெளியேறின்றனர்.

பிறந்த மண்ணில் வாழும் உரிமையை மறுப்பது எது?

நாட்டை விட்டு வெளியேறியவர்களை மீண்டும் பிறந்த மண்ணுக்கு திருப்பி வருவதை தடுப்பது நாட்டின் ஜனநாயக விரோத சூழலும், மக்கள் விரோத சட்டங்களும் தான். சட்டங்கள் அடிப்படை மனிதவுரிமையை மறுதளிக்கின்ற அதே நேரம், அது ஜனநாயக விரோதமானதாகவும் இருக்கின்றது.

மனிதர்கள் வாழ்தற்கான வாழ்வியல் போராட்டங்கள் மீது, அவர்கள் விரும்பாத தெரிவுகளையே மக்கள் விரோத அமைப்புத் திணித்து விடுகின்றது. அதையே தமது சட்டங்களாக வரையறுத்து, சட்டத்தை புனிதமானதாகக் காட்டுகின்றனர். இந்த சட்டங்களை ஒழுகுவதற்கும், அதை மீறும் போது ஒடுக்குவதுமாக, சட்டங்கள் மாறிவிடுகின்றது. பிறந்த மண்ணின் மீதான உரிமையை மறுப்பது, அதற்கு சட்டங்களைக் கொண்டு தடுப்பதானது, இந்த அடிப்படை மனிதவுரிமை மீறலாக இருப்பதை சட்டத்தின் ஆட்சியாக காட்டப்படுகின்றது.

இந்த சட்டங்களின் அடிப்படையாக இருப்பது, மனிதனை மனிதன் ஒடுக்குவதை அடிப்படையாகக் கொண்டது. சட்டங்கள் சாதி, பால், இனம், நிறம்..., சார்ந்தாகவும், இதுவல்லாத சட்டங்கள் அனைத்தும் வர்க்கம் சார்ந்தாகவும் இருக்கின்றது. சட்டம் மனிதனை முதன்மை படுத்தவில்லை. மாறாக குறுகிய அடையாளத்தையும், செல்வத்தையும் அடிப்படையாகக் கொண்டது.

சட்டம் மனிதனை வர்க்க ரீதியாக பிரித்து, அதை பாதுகாப்பதை அடிப்படையாகக் கொண்டது. ஆட்சிக்கு ஆட்சி, நாட்டுக்கு நாடு தொடங்கி எங்கும் முரண்பட்டச் சட்டங்கள், அனைத்தும் மனிதனை மனிதனாக வரையறுக்கும் பொது சட்டங்களானதல்ல. மாறாக மனிதனை மனிதன் மிதிக்கும் சட்டங்களாகும்

இந்த வகையில் மனிதனை மனிதனாக மதிக்காத ஒழுக்கங்கள், அறங்கள் தொடங்கி நீதி வரை, அனைத்தும் மனித வாழ்வையும், மனித உரிமைகளையும் மறுக்கின்றதாக இருக்கும் அதே நேரம் அதுவே சட்டங்களாகவும் இருக்;கின்றது.

இங்கு சட்டங்கள், சட்டத்தின் வரம்புகளுக்குள் நின்று பிறந்த மண்ணின் வாழ்வுரிமையை மறுக்கின்றவர்களாக அரசு மட்டும் இருக்கவில்லை. மாறாக மனித விரோத சட்டத்தை உயர்த்துகின்றவர்கள், இதையே ஜனநாயகமாக்கி பேசுகின்றவர்கள் வரை மனிதவுரிமையை மறுக்கின்றவர்களாக இருப்பதைக் காணமுடிகின்றது. இங்கு சட்டங்களை புனிதமானதாகவும் அறங்களாகவும் கருதுகின்றவர்களும்;, காட்டுகின்றவர்களும் சொல்லிலும் செயலிலும் ஜனநாயகத்துக்கு முரணானவர்களாக இருக்கின்றனர்.

இலங்கையின் சட்டம், நீதி பற்றி பேசும் போது, அந்தச் சட்டம் இலங்கையில் 1970, 1989-1990, 1980 - 2009, வரை கொன்றவர்களுக்கு எதிராக என்ன செய்தது. காணமல் போனவர்களுக்காக சட்டம் எதை தீர்வாகக் கொண்டு இருந்தது. லஞ்சம், ஊழல், பாலியல் வன்முறைகளை அனைத்தையும் சட்டம் நீதிக்கு உள்ளாக்கியதா? இருக்கும் சட்டம் போலியானது. அது தனக்கு எதிரானதுக்கு மட்டும் பயன்படும் அடக்குமுறைக் கருவி.

முரணபட்ட கருத்துக்கு ஜனநாயகம் என்பது, அதை நடைமுறைப்படுத்துவதற்குமானதே. இது அனைத்தையும் மாற்றக் கூடியதாகும். இது சட்டங்களை விட்டு விடுவதில்லை. சட்டங்களை மாற்ற கோருவதுடன் தொடங்கின்றது ஜனநாயகத்துக்கான போராட்டம். இந்த வகையில் பிறந்த மண்ணின் வாழும் உரிமையை சட்டங்களால் தடுக்க முடியாது. அதற்காக போராடுவதானது, அடிப்படை மனிவுரிமைக்கான போராட்டமாகும்.