Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

கோத்தாவுடன் காதல்

பி.பி.சி தமிழோசையின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் கோத்தாவுடன் காதல்

கோத்தபயவுடன் காதல்

கடந்த மே மாதம் 28 ம் நாள் பி.பி.சி ஆங்கில நிகழ்ச்சியில் வெளிவந்த கோத்தபாயவின் பேட்டி பற்றியது தான் நமது குறிப்பு. கோத்தாவிடம் நேரடியாகப் பேட்டி கண்டவர் பி.பி.சியின் கொழும்பு நிருபர் சார்லஸ் ஹவிலான்ட் Charles Haviland) என்பவர். அவர் கண்ட உலக சேவையின் பேட்டிக்கும் அதனை தமிழில் ஒலிபரப்பிய தமிழோசை நிகழ்ச்சிக்கும் உள்ள வேறுபாடு என்னவென்று பாருங்கள். ஒளிபரப்பப்பட்ட பகுதியின் முதல் வசனத்தில் கோத்தா சொல்வது என்ன? ஹவிலான்ட் என்ன கேள்வி கேட்டார் என்பது நமக்குத் தெரியாது. ஆனால் கோத்தாபயாவின் தொடக்கம் இப்படியிருக்கிறது. வாசகர்கள் கவனமாகக் கேட்க வேண்டும்.



ஆங்கிலத்தில் அவரது முதல் வரி இப்படி வருகிறது: “Earlier , before the war all were Sinhalese, and it is Sri lanka...”.அதன் சரியான தமிழ் மொழிபெயர்ப்பு இப்படி இருக்க வேண்டும்: “..முன்பு, அதாவது போருக்கு முன்பு இங்கே எல்லோருமே சிங்களர்கள் தான், இது சிறி லங்கா..”இந்த பேட்டியின் முதல்வரியில் கோத்தாபய சொல்வது இந்த நாடே சிங்களருக்குத்தான்  சொந்தம், இங்கே போருக்கு முன்பு வாழ்ந்தவர்கள் எல்லாரும் சிங்களர்கள் தான் என்று சொல்கிறார். அந்த வரியை தமிழோசை வெளியிடவில்லை. சரியான மொழிபெயர்ப்பை தமிழில் சொல்லவும் இல்லை, இந்த முக்கியமான வரியை ஆங்கிலத்தில் அப்படியே ஒளிபரப்பவும் இல்லை. இருட்டடிப்புச் செய்து விட்டார்கள்.இந்த முக்கியமான வசனம் இன்னமும் ஆங்கிலச் செய்தியில் இருக்கிறது. ஆனால், தமிழில் இல்லை. இது இப்படியென்றால், மிச்சம் இருக்கும் கோத்தாவின் வசனங்களை கண்டபடி வெட்டிச் சிதைத்து ஆங்கிலத்தில் உள்ளதன் மூலம் முழுமையாக வெளிப்படாமல் வேறுமாதிரியான பொருளில் தமிழ்ப் படுத்தியிருக்கிரார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இதைக் கேட்டால் இவர்களின் எஜமான் ஹவிலாண்டுக்கே கோபம் வந்தாலும் வரும்.தமிழ், ஆங்கிலம் இரண்டையும் அடுத்தடுத்து கேளுங்கள் எவ்வளவு வேறுபாடு என்று எளிதில் நாம் கண்டு கொள்ளலாம். சார்லஸ் ஹவிலாந்து கோத்தபயவைப் பற்றி சொல்லாத புகழ்ச்சி வரிகள் இங்கே தாண்டவம் ஆடுவதையும் பார்க்கலாம்

.தமிழ் நிகழ்ச்சி இங்கே:

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2012/05/120528_gotabbc.shtml

ஆங்கில நிகழ்ச்சி இங்கே:


http://www.bbc.co.uk/news/world-asia-18207198

பி.பி.சி (B.B.C) யும் பொய்யும்பொய்ச்செய்திகளை உண்மைகளாக வெளியிடுவதில் பி.பி.சி கென்று  ஒரு தனிப்பாணியுண்டு. மிகப் பிரபலமான போய்ச் செய்திகளில் ஒன்று பி.பி.சி யின் ஈராக் போர் செய்திகள்.

ஈராக்குடன் பிரிட்டன் போருக்கு தயாரான போது அதன் முக்கியமான நிகழ்ச்சித் தயாரிப்பாளர் ஆன்ட்ரு மார் (Andrew Marr)  தான் நடத்தும் காலைச் செய்தியில் உலக மகாப் பொய்யர் என்ற சிறப்பை பெற்ற அப்போதைய பிரிட்டனின் பிரதமர் டோனி பிளேர் (Tony Blair)  இப்படி புளுகினார்:ஈராக் வசம் அதிபயங்கரமான வேதியியல் ஆயுதங்கள் அணு ஆயுதங்கள் உள்பட அனைத்து வசதிகளும் இருப்பதாக பிரிட்டன் உளவுத்துறை உறுதியாக கண்டறிந்துள்ளது. அவர்கள் நாற்பத்திஎட்டு மணி நேரத்தில் ஐரோப்பாவை தாக்கும் அளவுக்கு வல்லமையுடன் இருக்கிறார்கள். எனவே, ஈராக் நாட்டை உடனடியாகத் தாக்க வேண்டும்.டோனி பிளேர் புளுகியபடி ஒன்றுமே ஈராக் நாட்டில் இருக்கவில்லை.

பாவம் சரியான தொலைபேசி வசதி கூட அந்த நாட்டில் இருந்திருக்கவில்லை.பி.பி.சி க்கு இந்தத் தகவல் தெரியாதா என்ன? தெரியும். இருந்தும் அப்படியொரு பொய்ச்செய்தியை உறுதிபட மீண்டும் மீண்டும் ஒளிபரப்புச் செய்தது.அது போகட்டும் அதே பொய்யன் டோனி பிளேயரை சில காலம் கழித்து அவர் பிரதமர் பதவியில் இருந்து விலகியபின், இதே ஆசாமி ஆன்ட்ரு சிறப்புப் பேட்டி ஒன்றைக் கண்டார்.

‘இப்படிப் பொய் சொல்லி பெரிய யுத்தத்தில் இந்த நாட்டை தள்ளி விட்டீர்களே என்று ஒரு கேள்வி கேட்கட்டுமே’. ஊஹும் அப்படி எதையும் இந்த செய்தியாளர் கேட்கவில்லை. இதைக் கண்டு காறித்துப்பாத நேர்மையான பத்திரிகையாளர்களே இல்லை என்று சொல்லலாம். இது ஒரு சிறிய எடுத்துக் காட்டு மட்டுமே.பிரிட்டிஷ் பாராளுமன்ற அரசியல்வாதிகள் பொய் சொல்வதில் உலக மஹா எத்தர்கள். அவர்களுக்கு இணையாக அவர்கள் வளர்க்கும் செல்லப் பிராணிகளான இந்தப் பத்திரிகையாளர்களும் இருப்பது ஒன்றும் தவறு இல்லை தான்.

இந்தப் புளுகைப் பரப்பிய ஆன்ட்ரு கடந்த பத்து ஆண்டுகளில் பலபடி உயர்வான பதவியும் சம்பளமும் அளிக்கப்பட்டு இன்னமும் தனது சேவையை தொடர்ந்து செய்து வருகிறார்.

பொய்யர்களின் அணிவகுப்பு இந்த பொய்யர்கள் வரிசையில் பி.பி.சி தமிழ்ச் செய்தித் தயாரிப்பாளர்கள் தாமும் இணைந்து நக்கிப் பிழைக்கும் வேலையில் சிறிதும் சளைத்தவர்கள் அல்ல என நிருபித்திருக்கிறார்கள்.ஏன் இப்படி தமிழ் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் இருட்டடிப்புச் செய்ய வேண்டும்?

சிறிலங்கா தூதரகத்தில் துணைத் தூதராக இருந்த ஹம்சாவை தமிழ் நாட்டு வாசகர்கள் அறிவார்கள். அவரது விருந்துகள், கவர்கள், தங்கச் செயின்கள் சென்னையில் பத்திரிகையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இது ஹம்சா விளைவா (Hamza Effect) ?அல்லது, ஒரு வேளை ஆன்ட்ரு மார் போல முக்கியமான விசயத்தில் பொய் சொன்னால் தாமும் தமது சம்பளம், பதவி, கவுரவத்தை நிலை நாட்டிக் கொள்ளலாம் என்று இந்த அம்பிகள் சூழல் அறிந்து ஒரு தர்க்கமான முடிவுக்கு வந்து விட்டார்களோ என்னவோ?

இனி பி.பி.சி தமிழோசை கேட்கும் போது இலங்கை செய்திகள் வந்தால் நமது தமிழ்  அன்பர்கள் காதில் பஞ்சு வைத்து மூடிக் கொள்வது நலம்.

-கரிகாலன்