Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

மக்களது அபிலாசைகளை வென்று எடுப்பதற்காக போராடுவோம்!

ஜனாதிபதித் தேர்தல் மூலம் புதிய ஜனாதிபதியும் அதனைத் தொடர்ந்து ஒரு புதிய அரசும் தெரிவாகியுள்ள போதிலும் ஜனநாயகம் தொடர்பானதும் பொருளாதாரரீதியான மேம்பாடுகள் தொடர்பான மக்களது அபிலாஷைகள் நிறைவேறப்போவதில்லை என்பதற்கான தெளிவான அறிகுறிகள் தென்படுகின்றனதென முன்னிலை சோஷலிசக் கட்சி கருதுகின்றது.

புதிய அரசாங்கத்தின் ஆரம்பம்பத்திலேயே அதன் நடவடிக்கைகள் கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ளும் நிலமைக்குள் தள்ளப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலின்போது பிரகடனம் செய்து கொண்ட தனது கொள்கைகளுடன், அரச அதிகாரிகளின் நியமனம், மற்றும் பரவலாக இடம்பெற்றுவரும் அரசியல் பழிவாங்கல்களும் ஜனாதிபதி தேதர்தலின்போது மைத்திபால சிறிசேனாவுக்கு ஆதரவாகவிருந்தவர்கள் மத்தியிலும் அதிருப்தியினை உருவாக்கியிருக்கிறது.

அதேவேளை புதிய அரசாங்கமும் எந்த மாற்றங்களும் இன்றி நவலிபரல்வாத முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கையே தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதனையே அவதானிக்ககூடியதாக உள்ளது இந்த நிலமைகளின் மத்தியில், மக்களுடைய ஜனநாயக அபிலாசைகள் நிறைவேற்றப்படமாட்டாதென்பதே தெளிவாகி வருகின்றது.

இந்த நெருக்கடிகளை எதிர்கொள்ளுகின்ற அதேவேளை, ஒரு நல்லாட்சி பற்றிய விவாதங்களினூடு வெற்றிகொள்ளப்பட்ட ஜனநாயகத்தின் பாரம்பரிய கோரிக்கைகளைக் கூட ஆளும் வர்க்கமானது கண்டுகொள்ளாமல் போவதற்கான நிலமைகள் எழுந்திருக்கின்றன. ஜனநாயக கடமைகள் பற்றிய விவாதங்கள் வேறு விடயங்கள் பற்றிய அரசியல் சர்ச்சை என்ற புகைமூட்டத்துக்குள் மறைக்கப்பட்டுள்ளன. அவ்வாறு மறைந்துபோயுள்ள ஜனநாயக கடமைகளை நிறைவேற்றகோரும் முன்னெடுப்புக்களை கட்சி திட்டமிடுகிறது. இலத்திரனியல் அடையாள அட்டை, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான இராணுவப்  பயிற்சி போன்ற இராணுவமயமாக்கல் நடவடிக்கைகளை நிறுத்துதல் போன்றவை அத்தியாவசியமானவையாக முன்னிற்கின்றன.

அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், காணாமல் போனோர் தொடர்பான நீதி, விசாரணைகள், அரசியற் படுகொலைகள் போன்றவற்றுக்கான நீதி விசாரணை, அடக்குமுறைகள் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியவர்களுக்கான ஆதரவு தரும் ஒரு போராட்டங்களில் எம்மை ஈடுபடுத்திக் கொள்ள கட்சி திட்டமிட்டுள்ளது. தொழிலாளர்களின் உடனடிப் பிரச்சனைகள், விவசாயிகளது பிரச்சனைகள், மாணவர்களது பிரச்சனைகள், பேரினவாதத்துக்கு எதிரான போராட்டமாக இந்தப் போராட்த்தினை விரிவுபடுத்துவதற்கு கட்சி தயாராகி வருகிறது.

ஜனாதிபதி தேர்தல் வேளையில் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றாது பின்வாங்குகின்ற அரசாங்கத்தின் போக்குகளுக்கு எதிராக, பெருத்த எதிர்பார்ப்புடன் வாக்களித்த மக்களின் அபிலாஷைகளை வென்றுகொள்ளவும் மற்றைய அவசரமான கோரிக்கைகளுக்காகவும் கட்சி போராட்டமொன்றினை நடாத்த தயாராகிறது.